"பிரதமர் ஸ்டாலின்?".. அசரடிக்கும் "கிங்மேக்கர்" முதல்வர்.. வடக்கே வீசிய வலையில் "அவங்களா"? உஷார் பாஜக
சென்னை: தேசிய அரசியலில் முதல்வர் ஸ்டாலினின் வியூகம் சூடுபிடித்துள்ளது.. அந்தவகையில், சில தகவல்களும் கசிந்துவர, பாஜக தரப்பு ஒவ்வொன்றையும் உன்னிப்பாக உற்றுநோக்கி வருகிறது.
பாஜகவுக்கு எதிரான மாற்று அரசியலை தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிறுத்தி வருவதால், தேசிய அளவில் கவனிக்கப்படும் தலைவராக உயர்ந்துள்ளார்..
கடந்த சில வருடங்களாகவே, பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்ட மம்தா களமிறங்கினார்.. ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவும் இதற்கான முயற்சியை கையில் எடுத்து தோற்றுவிட்ட நிலையில், மம்தா, சந்திரசேகரராவ், பினராய், உத்தவ்தாக்கரே என பெருந்தலைகள் இறங்கியுள்ளனர்..

பாஜக எதிர்ப்பு
எனினும் இதில் இதுவரை பெரிய பலன் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.. ஆனால், இவர்கள் அனைவரையும்விட, "பாஜக எதிர்ப்பு" விஷயத்தில் ஸ்டாலின் தொடர்ந்து உறுதியாக இருப்பதால், அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. திமுகவை பொறுத்தவரை தன்னுடைய கருத்தியலில் எப்போதுமே உறுதிப்பாட்டுடன் பயணித்தாலும், தன்னுடைய சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை.. அதேசமயம், தமிழக மக்களின் நலன்களை பெற்றுத்தர, மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கையாண்டு வருகிறது..

காய் நகர்த்தல்
அதுமட்டுமல்ல, அந்த பக்கம் மம்தா, இந்த பக்கம் அரவிந்த் கெஜ்ரிவால், இதற்கு நடுவில் பினராய் என மாநில வாரியான ஆதரவையும், நல்லிணக்கத்தையும் ஸ்டாலின் கடைப்பிடித்து வருகிறார்.. இதில், தங்களுக்கு நேர் அரசியல் எதிரியான ஆம் ஆத்மியுடன் ஸ்டாலின் நெருக்கம் காட்டி வருவது, காங்கிரசுக்கு ஒருவித உறுத்தலை தந்தாலும், மிக சரியான காய்நகர்த்தலுடன்தான் பயணிக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அதாவது, தேசிய அரசியலில் பல கட்சிகள் ஆதரவை பெற்றால்தான், பாஜகவை வீழ்த்த முடியும் என்பதே ஸ்டாலினின் கணக்காக உள்ளதாக சொல்கிறார்கள்.

கனிமொழி சப்போர்ட்
திமுக தனித்து போட்டியிட்டால், இஸ்லாமிய மற்றும் சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெறுவதிலும் சிக்கல் உள்ள நிலையில், இதில் காங்கிரஸை தவிர்த்து பார்க்கவே முடியாத நிலைமையும் உள்ளதாக சுட்டிக்காட்டுகிறார்கள்.. அதனால்தான், ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு குமரிக்கு சென்று நேரடி வாழ்த்து, டெல்லி யாத்திரையில் திமுக எம்பி கனிமொழியின் நேரடி வாழ்த்து என்று ஆதரவுக்கரங்கள் நீட்டப்பட்டன.. இப்போது விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், பாஜகவுக்கு எதிரான ஸ்டாலினின் தேசிய அரசியல் வேகம் எடுத்துள்ளது..

ப்ளான் 1
"பிரதமர் வேட்பாளராக" ராகுல் அறிவிக்கப்பட்டுவிடுவார் என்பதினாலேயே, மம்தா வேறு மாதிரியான ரூட்டை கையில் எடுத்துள்ளார்.. அதாவது, காங்கிரஸ், பாஜக அல்லாத மாநில கட்சிகளுடன் சேர்ந்து, தேசிய அளவில் 3வது அணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி வருகிறார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு புது பிளானை ஸ்டாலின் கையில் எடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.. பிரதமர் யார் என்பதைவிட, பிரதமராக யார் வந்துவிடக்கூடாது என்பதில்தான் அதிக கவனத்தை செலுத்தி, பாஜகவை வீழ்த்தும் கூட்டணியை வலுப்படுத்த நினைக்கிறாராம்.

ப்ளான் 2
இதை மையப்படுத்தியே, கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாடி, தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக பலமான அணியை உருவாக்க திட்டமிட்டு வருவதாக சொல்கிறார்கள்.. அந்தவகையில், திருவாரூரில் ஜுன் 3ல் நடக்கும் கருணாநிதி நுாற்றாண்டு விழா மாநாட்டில், தமிழக கூட்டணி தலைவர்கள் கேஎஸ் அழகிரி, வைகோ, திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், கமல் போன்றவர்களை பங்கேற்க செய்ய திமுக முனைப்பு காட்டி வருகிறது.. அன்று மாலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா, சந்திரசேகர ராவ், அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ்குமார், நவீன் பட்நாயக், சரத்பவார், சந்திரபாபு நாயுடு, பரூக் அப்துல்லா, டி.ராஜா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி போன்ற தலைவர்களை அழைக்க உள்ளார்களாம்.

ஒரே நாள் - ஒரே மேடை
காலையில், தமிழக தலைவர்களுக்கான அழைப்பு, மாலையில் தேசிய தலைவர்களுக்கான அழைப்பு என ஒரே நாளில் கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க முடிவாகி உள்ளதாம்.. இது முழுக்க முழுக்க கருணாநிதி சம்பந்தப்பட்ட விழா என்பதால், தேசிய அரசியல் அனைவருமே நிச்சயம் மாநாட்டில் பங்கேற்கவே செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அந்த மாநாட்டு மேடையிலேயே தேசிய அளவிலான, பாஜக எதிர்ப்பு அணி உருவானாலும் ஆச்சரியப்படுவற்கில்லை என்கிறார்கள்.. ஏற்கனவே, "உங்களில் ஒருவன்" புத்தக வெளியீட்டு விழாவிலேயே, ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக பகிரங்கமாக அறிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

சபாஷ் அறிவிப்பு
அந்தவகையில், ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்பதில் தீவிரமாக ஸ்டாலின் உள்ளார் என்றாலும், மம்தாவை போல், அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரசேகர ராவ் போன்றவர்கள், காங்கிரஸ் தலைமையை ஏற்க முன்வில்லை என்றால், தன்னுடைய தலைமையை ஏற்க வைக்கும் திட்டம் ஒன்றையும் வகுத்து வருகிறாராம்.. எப்படி பார்த்தாலும், பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைப்பதில், தமிழக முதல்வர் ஸ்டாலினின் வியூகம் வேகம் எடுக்க துவங்கிவிட்டது என்கிறார்கள்.. சில நாட்களுக்கு முன்பு, நம் "ஒன் இந்தியா" தமிழுக்கு திமுக எம்பி ஆ.ராசா ஒரு சிறப்பு பேட்டி தந்திருந்தார்.. அப்போது, "பிரதமரை தீர்மானிக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பார்" என்பதை அழுத்தமாகவே சொல்லியிருந்ததையும் இங்கு நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.












Click it and Unblock the Notifications