டிஆர் பாலு படார்னு போட்டு உடைச்சிட்டாரு.. "அவரை" கூப்பிடவேயில்லையாமே.. திமுகவை ரொம்ப நம்பினாரே? அடடா
சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணியில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அதுகுறித்த சில தகவல்கள் கசிந்து வருகின்றன.
குட்டி குட்டி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 2019 எம்பி தேர்தலை சந்தித்து, 3.78 சதவீத வாக்குகளை பெற்று, தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன். தமிழகத்தில் இப்படி கலக்கிய அதேசமயத்தில்தான், அந்தமானில் மநீமய்யத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

வாக்கு சதவீதம்: கடந்த 2021 தேர்தலில் சரத்குமாருடன் கூட்டணி வைத்து, போட்டியிட்ட நிலையில், மய்யம் சரிவை நோக்கி போய்விட்டது... வாக்கு சதவீதமும் 2.62% ஆக குறைந்துவிட்டது.. கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகளும், வேறு வேறு கட்சிகளுக்கு பறந்துபோய்விட்டனர்..
அடுத்தடுத்த தேர்தல் தோல்விகள், நிர்வாகிகளின் கட்சி தாவல்கள் போன்றவற்றால் கமல் சோர்ந்து போயிருந்த நிலையில்தான் விக்ரம் படம் புது தெம்பை ஏற்படுத்தியிருந்தது.. சினிமாவிலும் சரி, அரசியலும் சரி, இந்த படம் ஒரு துடுப்புபோல கைக்கு வந்து சேர்ந்தது.. உதயநிதியின் தொடர்பால், திமுக கூட்டணி என்ற சலசலப்பும் வட்டமடிக்க ஆரம்பித்தது.
வலுவான கட்சி: கடந்த தேர்தலிகளில் பெற்ற சறுக்கல்களை இந்த முறை பெறக்கூடாது என்பதில் கமல் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.. அதேபோல, வலுவான கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால்தான், எதிர்கால அரசியலுக்கு நல்லது என்று முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான், இந்த முறை திமுக-காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்துதான் போட்டியிட வேண்டும் என்பதில் கமல் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.
அந்தவகையில், கமலுக்கு ஒரு இடம் ஒதுக்குவதற்கு, திமுக கூட்டணியில் வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால், எப்படியாவது 3 இடங்களையாவது, திமுக மேலிடம் கேட்டு பெற்று விட வேண்டும் என்று மய்யத்தினர் உறுதியாக இருப்பதாகவும், ஒரே ஒரு சீட் கொடுத்தால் அதனை ஏற்கக்கூடாது என்பதிலும் உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் பரபரத்தன. எனவே, எப்படியும் திமுக தலைமையிடம் பேசும்போது, 3 சீட்டுகளை கமல் கேட்டு வாங்கிவிடுவார் என்றும் நம்பப்பட்டு வருகிறது.
கம்யூனிஸ்ட்கள்: இந்நிலையில்தான், திமுக தொகுதி பங்கீடு பேச்சபேச்சுவார்த்தை நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது... காங்கிரசுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது.. வரும் 3-ந்தேதி மதிமுக கம்யூனிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடப்பத்தப்பட உள்ளது.. ஆனால் இதுவரை கமல்ஹாசன் கட்சிக்கு திமுகவிலிருந்து எந்த அழைப்பும் விடப்படவில்லையாம்..
இப்படிப்பட்ட சூழலில்தான், திமுக பொருளாளர் டிஆர்பாலு எம்பி செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது அவர் சொல்லும்போது, "திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இருக்கிறதா? என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. தேர்தலில் போட்டியிட இடம் கேட்காமல் புதிய கட்சிகள் யார் வேண்டும் என்றாலும் கூட்டணிக்கு வரலாம்" என்றார்..
கமலுக்கு வரும் தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படமாட்டாது என்பதையே டிஆர் பாலு இப்படி சூசகமாக சொன்னதாக தெரிகிறது.. இது மய்யத்தின் மூத்த நிர்வாகிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறதாம்.
இதுதான் காரணமா: இந்த முறை கமல்ஹாசன் கோவை தொகுதியை கேட்டு வருவதாக தெரிகிறது.. கோவை, மதுரை இரண்டுமே, கம்யூனிஸ்ட்கள் வசம் உள்ளதால், கமலுக்கு அவைகளை தர வாய்ப்பில்லை என்கிறார்கள். அதனால்தான் கமலை அழைத்து இன்னும் பேசவில்லையா? அல்லது திமுக கூட்டணியிலிருக்கும் கட்சிகளை அழைத்து பேசிவிட்டு, அதற்கு பிறகு, கமலிடம் பேச்சு நடத்தப்படுமா? என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications