"லாஸ்ட் ஆப்ஷன்".. எடப்பாடி பழனிசாமி.. ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு.. அப்போ ஓபிஎஸ் பட்ட பாடெல்லாம் போச்சா?
சென்னை: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் பதவியை அதிமுக குறி வைத்துள்ளது.. பாஜகவுடன் கூட்டணி முடிவாகி உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த அணுகுமுறை பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.
ஓ.பி.ரவீந்திரநாத் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் அவர் அதிமுகவில் இல்லை என சுட்டிக்காட்டி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, கடந்த வருடம் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். கட்சியிலிருந்து நீக்கியதால் அவரை அதிமுக எம்.பி ஆக கருத வேண்டாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை ஏற்கக் கூடாது என்று ஓபிஎஸ்ஸும் பின்னாடியே பதில் எழுதி கடிதம் எழுதினார்.. இந்த ரிசல்ட் என்ன ஆனது என்று தெரியாமலேயே இருந்த நிலையில், டெல்லி மேலிடமே அதை மறைமுகமாக கன்பார்ம் செய்திருந்தது.

சன்சத் டிவி: அதன்படி, மழைக்கால கூட்டத்தொடரில் ஓபி ரவீந்திரநாத் கலந்து கொண்டு பேசியபோது, நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான "சன்சத்" டிவியில் அதிமுக எம்பி என்றே பெயரிடப்பட்டு, ஓபிஆர் பேச்சை ஒளிபரப்பினார்கள்.. ஆக, எடப்பாடி எழுதிய கடிதம் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதுடன், அதிமுக எம்பியாகவே ஓபிஆர் தொடர்கிறார் என்பதும் உறுதியானது..
இதற்கு பிறகு, இந்த விஷயத்தை எடப்பாடியால் கிளற முடியாமல் போய்விட்ட நிலையில், மறுபடியும் புகார் கொண்டு சென்றுள்ளார். ரவீந்திரநாத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் அவரை அதிமுக எம்.பி.யாக அங்கீகரிக்கக்கூடாது என மக்களளை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அதிமுகவின் சிவி சண்முகம் மனு அளித்துள்ளார். இது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி விட்டுள்ளது.
அமர்வு மக்களவை: எம்பி தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதுவும் இன்னும் ஒரு அமர்வு மட்டுமே மக்களவையில் நடக்க வாய்ப்புள்ள நிலையில், எதற்காக இந்த நேரத்தில், ஓபிஆர் விஷயத்தை எடப்பாடி சீண்ட வேண்டும்? என்பது குழப்பமாக உள்ளது.. ஓபிஎஸ் மற்றும் தினகரன் இருவரையும் சேர்க்க போவதில்லை என்ற உறுதியிலும், பிடிவாதத்திலும் எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில், ஓபிஎஸ்ஸூம், தினகரனும் தற்போது வெளிப்படையாக இணைந்துள்ளனர்..
இந்த இணைப்புக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமி தரப்பும் நன்றாகவே அறியும்.. அப்படியிருந்தும் கூட, ஓபிஆர் பதவிக்கு செக் வைக்க முயல்வதன் பின்னணி என்ன? என்பதும் குழப்பமாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு நம்முடைய ஒன் இந்தியா தமிழில் பிரத்யேகமாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம்..
மிச்சம் சொச்சம்: அதில், வரும் எம்பி தேர்தலில், அதிமுக கூட்டணியில் தங்களுக்கு 20 சீட்டுக்களை பாஜக கேட்டு வருவதாகவும், அந்த 20 சீட்டில் 13 இடங்களில் தாங்கள் நேரடியாக போட்டியிட்டு, மிச்சமுள்ள 7 சீட்டுக்களை தன்னுடைய கூட்டணிகளுக்கு பிரித்து தரும் யோசனையில் பாஜக இருப்பதாக தெரிகிறது.. அதிலும் 7 சீட்டுக்களில் 2 சீட்டுக்களை ஓபிஎஸ்ஸூக்கும், ஓபிஎஸ் மகனுக்கும் ஒதுக்கவும் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.. காரணம், அதிமுகவின் ஒரே ஒரு எம்பியான ரவீந்திரநாத், மேலிட தலைவர்களின் ஆதரவை பெற்றுள்ளதுதான். இதையும் எடப்பாடி தரப்பு அறியாமல் இல்லை..

ரவீந்திரநாத்: இவ்வளவும் தெரிந்தும், எதற்காக மீண்டும் இந்த பிரச்சனையை கிளப்புகிறது என்ற சந்தேகம் நிலவி கொண்டே இருக்கிறது.. அனேகமாக ஒரே ஒரு காரணமாகத்தான் இருக்க முடியும்.. "அதிமுக உறுப்பினர் சாராதவர்" என்று ரவீந்திரநாத் அறிவிக்கப்பட்டுவிட்டால், பிறகு ஓபிஎஸ்ஸையும் பாஜக கைவிட்டுவிடும் என்று எடப்பாடி தரப்பு நம்புகிறதாம்.. இதைவைத்தே நடத்த போகும் மாநாட்டில் ஓபிஎஸ்ஸூக்கு எதிராக, தென்மண்டலங்களில் பிரச்சாரமும் செய்யலாம் என்று கணக்கு போடுவதாக தெரிகிறது..
அதுமட்டுமல்ல, ஓபிஎஸ்ஸை எந்த காரணத்துக்காகவும் சேர்த்து கொள்ள மாட்டோம் என்பதை மேலிடத்துக்கு மீண்டும் பதிவு செய்யவே, இந்த புகார் தரப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.. எனினும், ஓபிஆர் விஷயத்தில் பாஜக அவ்வளவு லேசில் முடிவெடுக்குமா என்பது சந்தேகம்தானாம்.. இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டி உள்ளது.. இத்தனை காலமும் மேலிட விவகாரங்கள் என்றாலே தம்பிதுரைதான் அனைத்தையும் முன்னின்று செய்து வரும்நிலையில், இந்த விஷயத்தில் மட்டும் ஏன் சிவி சண்முகம் என்ட்ரி தந்துள்ளார்? என்று தெரியவில்லை..
என்ன காரணம்? சிவி சண்முகம் அளவுக்கு, ஓபிஎஸ்ஸை கடுமையாக எதிர்க்கக்கூடியவர் தம்பிதுரை இல்லை என்றாலும், மேலிட விவகாரத்தில் திடீரென சண்முகம் ஆஜராகி உள்ளது, பல சந்தேகங்களை கிளப்பி உள்ளது.. ஓபிஆரின் பதவியும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. என்னதான் நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications