ட்விஸ்ட்.. டக்குன்னு "தலைவரை" சந்தித்த ஓபிஎஸ்.. மேஜர் கோரிக்கை..காட்சிகள் மாறுகிறதா.. காரணம் இதுவா?
ஓபிஎஸ் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து கட்சியில் சேர அழைப்பு விடுத்தாராம்
சென்னை:சில தினங்களுக்கு முன்பு, அதாவது எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை கூட்டிய மறுநாளே, அதிர்ந்து பான ஓபிஎஸ் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து பேசினார்.
அதற்கு முன்பும் ஒருமுறை பண்ருட்டியை ஓபிஎஸ் சந்தித்து பேசியிருந்தாலும், நெருக்கடியான அந்த சூழலில், இவர்களின் சந்திப்பு பரபரப்பாக பேசப்பட்டது.

ஷாக்கிங் பிளான்
இதற்கு சில காரணங்களும் சொல்லப்பட்டன.. அதாவது அதிமுக தன் கட்டுப்பாட்டின்கீழ் வந்ததும், பொதுச்செயலாளர் சசிகலா, துணைப்பொதுச் செயலாளர் ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும் கவுரவப்பதவி, கொங்குவில் உள்ள சீனியர்களுக்கு டாப்மோஸ்ட் பதவி என பல பிளானை முன்னெடுக்கிறார் ஓபிஎஸ் என்றார்கள்.. பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற சீனியர்களுக்கு பதவி தருவதன் மூலம், வன்னியர்களை சமாளிக்கவும், வன்னியர்களின் ஆதரவை பெற முடியும் என்றும் நம்புகிறதாம் ஓபிஎஸ் டீம்..

பண்ருட்டி
ஆனால், ஒருகாலத்தில் அதிமுகவில் சக்தி படைத்தவராக இருந்த பண்ருட்டியால், இன்றைய சூழலில் அரசியல் செய்ய முடியுமா? இதுவரை வன்னியர் சமுதாயத்திலும் பெரிதாக கவனிக்கப்படாத நிலையில், இந்த போஸ்டிங் தருவதாலும் அச்சமுதாய மக்களின் வாக்கு சதவீதத்தை இழுக்க முடியுமா? சிவி சண்முகம் போன்றோரே தேர்தலில் சறுக்கி சென்ற நிலையில், பண்ருட்டி என்ன செய்ய போகிறார்? என்ற சந்தேகங்கள் எழுந்தாலும், பண்ருட்டியுடனான அரசியல் எந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸுக்கு கை கொடுக்க போகிறது என்பது குறித்த கேள்வியும் எழுந்தபடியேதான் இருக்கின்றன.

ஓட்டைகள்
இப்படிப்பட்ட சூழலில்தான் மறுபடியும் பண்ருட்டியை சந்தித்து பேசியுள்ளார் ஓபிஎஸ்.. அன்று பண்ருட்டியாரை சந்தித்து பேசியதற்கும், நேற்றைய தினம் சந்தித்து பேசியதற்கும் நிறைய வித்தியாசம் ஓபிஎஸ்ஸிடம் இருப்பதாக சொல்லப்படுகிறது.. அன்றைய தினம், பாஜக தன்னை கைவிடாது, நிச்சயம் காப்பாற்றும் என்று பலமாக ஓபிஎஸ் நம்பினார்.. மேலும், சட்டத்தின் ஓட்டைப்பிடியில் எடப்பாடி சிக்கிஉள்ளதால், நீதிமன்ற உத்தரவுகளும் தமக்கு சாதமாகவே வரும் என்றும் எதிர்பார்த்தார்.. இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் பண்ருட்டியை அன்றும் சந்தித்து பேசி, கட்சிக்கு வந்து ஆலோசனைகளை தர வேண்டும் என்றெல்லாம் ஓபிஎஸ் கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டது.

டீப் சைலண்ட்
ஆனால், இந்த 4, 5 நாட்களாகவே ஓபிஎஸ் சைலண்ட்டாக இருக்கிறார்.. எந்த பேட்டியும் தரவில்லை.. யாரையும் சந்திக்கவில்லை.. என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில்தான், பண்ருட்டியை நேற்று சந்தித்து பேசியுள்ளார்.. மிகவும் அப்செட்டிலும், அதிருப்தியிலும் உள்ள ஓபிஎஸ்ஸுக்கு, இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.. இந்த சந்திப்பு குறித்த ஒரு சில தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

பண்ருட்டி + வன்னியர்
பண்ருட்டியாரை நேற்றிரவு சந்தித்த ஓபிஎஸ், தற்போது நிலவும் சூழல் குறித்து விரிவாக பேசியிருக்கிறார்.. அப்போது பண்ருட்டி, சட்ட ரீதியாக பல விஷயங்களை ஓபிஎஸ்சுக்கு தெளிவுபடுத்தியிருக்கிறார்.. அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டு ஓபிஎஸ்ஸும், தங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மீண்டும் பண்ருட்டியாரை கொண்டுக் கொண்டாராம்.. நாளை வெள்ளிக்கிழமை ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாள்...

சாதிய முத்திரை
எனவே, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த சமுதாய தலைவர்கள் வரவிருக்கிறார்கள்... ஓபிஎஸ்சும் தனது ஆதரவாளர்களுடன் வர வேண்டும் என அவரது அணியில் உள்ள வன்னியர் நிர்வாகிகள் அழைத்துள்ளதாக தெரிகிறது.. அதனால், பண்ருட்டியாரையும் தங்களுடன் பொதுவெளியில் அழைத்து வர ஓபிஎஸ் அணியினர் முயற்சித்து வருகிறார்களாம்.. ஏற்கனவே, அதிமுக கொங்கு + முக்குலத்தோர் என இரண்டாக பிரிந்துகிடக்கிறது.. மறுபடியும் ஒரு "சாதிய அடையாளத்தை" பதிக்க முயற்சிப்பதை, அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் ரசிப்பார்களா?.. தெரியவில்லை.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications