கிள்ளுக்கீரையா டிடிவி தினகரன்.. பாஜக கிட்ட ஏன் போறீங்க? 10 தொகுதியில் வேட்பாளர் நிறுத்தமா? சாத்தியமா
சென்னை: டிடிவி தினகரன் தனியாகவே ஒரு அரசியல் கட்சி நடத்தி வரும்நிலையில், அவரை ஏன் ஆலோசனை கூட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ப்ரியன் நம்முடைய ஒன் இந்தியா தமிழ் சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார். அந்த பேட்டியில், சில கேள்விகளை அவரிடம் கேட்டோம்.
குறிப்பாக, தேனியில் ஓபிஎஸ் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில், டிடிவி தினகரனும் கலந்து கொள்கிறார்.. இருவரும் சேர்ந்து கொடநாடு விவகாரத்தை ஒன்றாக கையில் எடுக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படியானால், பாஜக + தினகரனுடன் கூட்டணி வைக்க ஓபிஎஸ் முயற்சி செய்கிறாரா? என்ற கேள்வியை முன்வைத்தோம். அதற்கு ப்ரியன் நம்மிடம் பகிர்ந்து கொண்ட பதில்கள்தான் இது:

அதிமுக: "ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, பாஜக நம்மை ஒன்றுசேர்த்து வைக்கும், பாஜக நமக்கு உதவி செய்யும் இப்படியெல்லாம் நினைச்சிட்டு இருக்காரு.. அதிகாரப்பூர்வமான அதிமுகவானது, எடப்பாடியிடம் உள்ளதால், அவரிடம்தான் பேச்சு நடத்துவோம் என்று சொல்கிறது பாஜக.. மற்றொருபக்கம், ஓபிஎஸ் எப்போது கூப்பிட்டாலும் நம்மிடம் வந்துவிடுவார், அதேபோல, டிடிவி தினகரனும் கடைசி நேரத்தில் கூப்பிட்டாலும் வந்துவிடுவார் என்று பாஜக நினைக்கிறது.
இப்படி பாஜக வேண்டுமானால் நினைக்கலாம். ஆனால், பன்னீர்செல்வத்துக்கு இது அழகல்ல. ஓபிஎஸ், தினகரன் இருவரின் போட்டி என்பது எடப்பாடியை நோக்கி நடத்துகிற போட்டியாக இருக்க வேண்டும். அதிமுகவை ஒன்றிணைக்க, அல்லது எடப்பாடியுடன் இணக்கமாக செல்ல இன்னும் எத்தனையோ யுக்திகள் இருக்கின்றன. அதைவிட்டுட்டு, பாஜக கூப்பிடும்வரை காத்திருப்பேன் என்று ஓபிஎஸ் நினைப்பது, அவரை இன்னும் பின்னோக்கி தள்ளிவிடும்.
சரி, டிடிவியையும் டெல்லி கூட்டத்துக்கு கூப்பிடலையே ஏன்? அவரும்தானே தனிக்கட்சி நடத்துகிறார்? அப்படின்னா, டிடிவியையும் கிள்ளுக்கீரையாக நினைக்கிறதா பாஜக?
சசிகலா, தினகரனுக்கு ஆதரவாளர்கள் குறைவாக இருக்கிறார்களோ, அதிகமாக இருக்கிறார்களோ, அதுவல்ல பிரச்சனை.. ஆனால் இவர்கள் அனைவருமே எம்ஜிஆர், ஜெயலலிதாவை தலைமையாக ஏற்றுக் கொண்டவர்கள். எடப்பாடிக்கும் இவர்களுக்கும்தானே பிரச்சனை? பாஜகவுக்கு என்ன வந்தது? ஏன் டிடிவியை கூட்டத்துக்கு கூப்பிடவில்லை?
முக்கியத்துவம்: காரணம், நாம மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம், நாம் சொன்னால் இவங்க எல்லாரும் கேட்பார்கள் என்ற எண்ணம்தான்.. ஓபிஎஸ், தினகரனுக்கு முக்கியத்துவம் தராத கட்சி பாஜக.. அதுமட்டுமல்லாமல், இவர்கள் வீழ்த்த வேண்டியது எடப்பாடியைதான்.. எடப்பாடிக்கு பாடம் கற்பிப்பதற்கான திறமையும், சக்தியும், ஓபிஎஸ், தினகரனிடம் நிறையவே இருக்கிறது.
அதுமட்டுமல்ல, முக்குலத்தோரும் எடப்பாடி மீது கோபமாக இருக்கிறார்கள்.. சசிகலாவுக்கு செய்த துரோகம், டிடிவிக்கு செய்த துரோகம், ஓபிஎஸ்ஸை வெளியேற்றியது என எல்லாம் சேர்ந்து முக்குலத்தோர் எடப்பாடி பழனிசாமி மீது ஆவேசத்தில் உள்ளார்கள்.-
எடப்பாடி மீது ஒருவித வெறுப்பு உண்டாக்கியிருக்கிறது.
10 தொகுதிகள்: இப்படிப்பட்ட சூழலில், ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா 3பேரும் சேர்ந்து, குறைந்த பட்சம் 10 தொகுதிகளிலாவது, வேட்பாளர்களை நிறுத்தினால், நிச்சயம் பாஜக & எடப்பாடி அணி தோல்வியை தழுவும்.. இது பாஜகவுக்கும் நன்றாகவே தெரியும்.. அதனால்தான், கடைசியாக ஓபிஎஸ்ஸை இணைத்து கொள்ளலாம் என்று கணக்கு போடுகிறது.
இந்த விஷயத்தில் ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா 3 பேருமே ஏமாந்துவிடக்கூடாது. அதேபோல மணிப்பூர் விவகாரத்திலும், பாஜகவை குறை சொல்லியே சசிகலா அறிக்கை விட்டிருக்கிறார். இதில் அவருடைய மனநிலைமையும் தெரியவருகிறது. எனவே, 10 தொகுதிகளிலாவது, வேட்பாளரை போட வேண்டும்.. அதற்கான வேலைகளை பார்க்க வேண்டுமே தவிர, மதிக்காத பாஜக பக்கம் ஏன் போறீங்க? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.












Click it and Unblock the Notifications