Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி சொன்னால்? எழுதி வெச்சுக்குங்க.. ராமநாதபுரத்தில் மோடி தோற்பார்..என்னவாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எழுதி வெச்சுக்குங்க.. வரப்போகும் தேர்தலில், ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால், நிச்சயம் தோற்பார் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன், பாஜக அங்கு ஏன் தோல்வியை தழுவும் என்பதற்கான காரணத்தையும் நம்மிடம் அடுக்கியுள்ளார் ப்ரியன்.

விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது. இதற்கு தேசிய கட்சிகளும் தயாராகி வருகின்றன.. அந்தவகையில், தமிழகத்தை குறிவைத்து பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடுகிறது.

Can PM Modi win in Ramanathapuram and Are these the reasons for BJPs defeat in Ramnad

உலகின் மூத்த மொழி தமிழ் என்று சொன்ன பிரதமர் மோடி, தமிழ் இலக்கியங்களின் முக்கியத்துவத்தை பறைசாற்றத் தொடங்கினார். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் செங்கோல் வைக்கப்பட்டது... இதன் அடுத்த திட்டமாக, எம்பி தேர்தலில் வாரணாசியுடன் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட பிரதமர் மோடி வியூகம் அமைப்பதாக தெரிகிறது.

அமித்ஷா அதிரடி: அதற்கேற்றபடி, தமிழகம் வந்திருந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, "அடுத்து தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வருவார்" என்று சரவெடியை வீசிவிட்டு சென்றிருந்தார். ஒருவேளை இதில் அவர் வெற்றி பெற்றால், பாஜகவுக்கு பல மடங்கு நன்மை கிடைக்கும்.. இதுவே தோல்வியை சந்தித்தால், பாஜகவின் இப்போதுள்ள நிலைமையே தொடரும் என்றே கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான், மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ப்ரியன் நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார். அந்த பேட்டியில், பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட நேர்ந்தால், முடிவு எப்படியிருக்கும் என்ற கேள்வியை முன்வைத்தோம். அதற்கு பிரியன் சொன்ன கருத்துக்கள்தான் இவை:
"ராமேஸ்வரம் என்பதையே, பாஜகவினர், மதரீதியாக அணுகுகிறார்கள்.. காசி தமிழ்ச்சங்கம் என்பதுபோல், ராமேஸ்வரத்தை சொல்கிறார்கள். காசி, ராமேஸ்வரம் இரண்டுமே இந்து பண்பாட்டில் முக்கியமான ஆன்மீக பகுதியாக உள்ளது. இந்துத்துவாவின்படி, அந்தவகையில் பக்தி ஸ்தலமாக இருப்பதால், அண்ணாமலை தன்னுடைய யாத்திரையை, அங்கே ஆரம்பிப்பதாக தெரிகிறது.

தமிழ்மொழி: பிரதமர் மோடியை பொறுத்தவரை தமிழகத்தில், தனக்கு ஒரு பிடிப்பு இல்லாமல் இருப்பதாக கருதுகிறார். அதனால்தான், தமிழை எடுத்து அடிக்கடி பேசுகிறார்.. தமிழ் போல பழைய மொழி இல்லை என்கிறார். தமிழ் பழமையான மொழி என்பது மோடி சொல்லித்தான் நமக்கெல்லாம் தெரியுமா என்ன? ஆனால், இப்படி சொல்லிட்டே, சமஸ்கிருதத்தக்கு மட்டும் 700 கோடி ரூபாய் தந்துட்டு இருக்கார். தமிழுக்கு வெறும் 20, 30 கோடி ரூபாயுடன் நிறுத்திவிட்டார்.

அதனால், பிரதமர் மோடிக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. தான் இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் கிடையாது, தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நமக்கு எதிர்ப்புகள் நிறைய இருக்கிறது. அதனால் இதை சரிசெய்ய வேண்டுமானால், ராமநாதபுரத்தில் போட்டியிடலாம் என்று மோடிக்கு யாராவது ஆலோசனை சொல்லியிருக்கலாம்.

ராகுல்காந்தி: காசியில் ஏற்கனவே உறுப்பினராக உள்ள நிலையில், ராமேஸ்வரத்திலும் வெற்றி பெற்றுவிட்டால், இந்தியா முழுமைக்குமான தலைவராக அங்கீகாரம் கிடைக்கும் என்றும் கணக்கு போடலாம். ராகுல்காந்தி வயநாடு, அமேதி என்று போட்டியிட்டதைபோல, மோடி கணக்கு போடுகிறார். அப்படியே ராமநாதபுரத்தில் போட்டியிட்டாலும், வாரணாசியில் வெற்றி பெறுவார், ஆனால், ராமநாதபுரத்தில் தோற்றுவிடுவார்.

எழுதி வெச்சுக்குங்க நான் சொல்றதை. நிச்சயம் மோடி ராமநாதபுரத்தில் தோற்பார். ராமநாதபுரம் முன்பு போல இப்போது கிடையாது. முன்னாடி அதிமுக வலுவாக இருந்த தொகுதிதான்.. ஆனால், அன்வர் ராஜாவே இப்போது வருத்தத்தில் இருக்கிறார். இத்தனைக்கும் 2016-ல் நாலரை லட்சம் ஓட்டு வாங்கியவர் அன்வர் ராஜா. அவரே வருத்தமாக இருக்கிறார். ஒட்டுமொத்த முஸ்லிம்களும் வருத்தமாக இருக்கிறார்கள்.

வலுவான திமுக: அங்கிருக்கும் 6 சட்டமன்ற தொகுதிகளில் 2 காங்கிரஸ் பக்கம் இருக்கிறது. 4 தொகுதிகளில் திமுக இருக்கிறார்கள்.. 3 ஒன்றியத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். கிழக்கு, தொண்டி, சுந்தரபாண்டியபட்டனம் போன்ற பகுதிகளில் இருக்கும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஏற்கனவே கோபத்தில் இருக்கிறார்கள்.. தேவர்கள் அங்கே வலுவாக இருக்கிறார்கள். போதாக்குறைக்கு ஓபிஎஸ், டிடிவியும் பாஜக பக்கம் சாயும்போது, நிச்சயம் மோடி தோற்பார்.

ஏற்கனவே எடப்பாடி மீது முக்குலத்தோரும் கோபமாக இருக்கிறார்கள். தங்களுக்கு துரோகம் செய்துவிட்டார் எடப்பாடி என்று முக்குலத்தோர் நினைக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, பரமக்குடி பகுதியில் இருக்கும் பட்டியலினத்தவர் + சிறுபான்மையினர் + முக்குலத்தோர் + எல்லாருமே பாஜகவுக்கு எதிராக இருக்கிறார்கள். திமுகவும் வலுவாக இருக்கிறது.

திமுக: அங்குள்ள தேவேந்திர குல வேளாளரில் குறைந்தபட்சம் 3 சதவீதமாவது திமுகவுக்கு ஓட்டுப்போடுவார்கள்.. தேவேந்திர குல வேளாளர் எல்லாருமே ஜான் பாண்டியன் சொல்றபடியோ, கிருஷ்ணசாமி சொல்ற மாதிரியோ ஓட்டு போட மாட்டாங்க. அப்படின்னா கடந்த தேர்தலில் ஏன் அவர்கள் தோற்றார்கள்? அதே ராமநாதபுரத்தில் பரமக்குடியில் வெற்றி பெற்றது யார்? திமுகதானே? காங்கிரஸ்தானே? இத்தனைக்கும் "பெயர் அடையாளம்" தந்துகூட தேவேந்திர குல வேளாளர்கள் ஓட்டுப்போடலியே..

அதனால், இவர்கள் என்னதான் இந்துத்துவா பிரச்சாரத்தை முன்வைத்தாலும், என்னதான் பிரதமர் மோடிக்கு செல்வாக்கு இருந்தாலும், ராமநாதபுரத்தில் மோடியின் வெற்றி என்பது கேள்விக்குறிதான்" என்று அறுதியிட்டு சொல்கிறார் ப்ரியன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+