"கருவாடு" மீனாகுதா.. பாமக வண்டிய "அங்கே" திருப்புதோ.. "எடப்பாடிண்ணே".. திருமா வேற நடுவுல.. வேற லெவல்

திமுகவுடன் எந்தவிதமான கூட்டணி பேச்சுவார்த்தையையும் பாமக நடத்தவில்லை என்று அன்புமணி கூறியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவுடன் எந்தவிதமான கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.. அது தொடர்பாக வெளியாகும் செய்திகள் எல்லாமே வதந்தி, அவைகளை நம்ப வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறைந்துவிட்டதாக கூறி, திமுக அரசை கண்டித்து பாஜக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்ததுடன், சில நாட்களுக்கு முன்பு அதை நடத்தியும் காட்டியிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதே பாஜகதான் என்றும், பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகளால்தான் வன்முறையே தூண்டப்படுகிறது என்றும் கூறி விசிக நேற்றைய தினம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தது.

 திருமா செக்

திருமா செக்

அப்போது பேசிய விசிக தலைவர் திருமாவளவன், தங்கள் கூட்டணி பற்றிய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தார்.. அதில், பாமக- பாஜக அரசியல் ரீதியாக என்ன பின்னடைவு ஏற்பட்டாலும் பாஜக பாமக இருக்கும்கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்க மாட்டோம்... அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான அணியை திமுக ஒருங்கிணைக்க வேண்டும்" என்று திருமாவளவன் கேட்டுக் கொண்டிருந்தது அனைவரின் கவனத்தையும் திருப்பியிருந்தது. வழக்கமாக, பாஜக குறித்து அதிமுகவிடம் அலர்ட் செய்து கொண்டேயிருப்பார் திருமாவளவன்.

 சிதறிய அணிகள்

சிதறிய அணிகள்

"அதிமுக இடத்தில் பாஜக வந்து உட்கார்ந்து கைப்பற்ற நினைக்கிறது. அங்கே பாஜக வரக்கூடாது என்றால், அதிமுக வலுவாக இருக்க வேண்டும்.. அதிமுக இப்போது 3 அணியாக சிதறி கிடப்பதற்கு பாஜகதான் காரணம்.. பாஜக மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால் சசிகலா தலைமையில் ஒரே அதிமுகவாக இருந்திருக்கும்.. பாஜக தலையீட்டால் சசிகலா, தினகரன் ஓரங்கட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இணைந்தனர்.. இப்போது அவங்களையும் உடைத்து விட்டார்கள்... ஆதாயத்துக்காக எந்த எல்லைக்கும் போவார்கள் இந்த பாஜகவினர்.. அதற்குள் எல்லாரும் ஒன்று சேர வேண்டும்.. தவறவிட்டால், மறுபடியும் 2024-ல் ஆபத்து ஏற்படும்" என்று தொடர்ந்து அக்கறையுடன் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்.

 கலையும் மவுனம்

கலையும் மவுனம்

ஆனால், பாமகவை குறித்து நேற்றைய தினம் பேசும்போது, அரசியல் ரீதியாக என்ன பின்னடைவு ஏற்பட்டாலும், அந்த கட்சி கூட்டணியுடன்சேர மாட்டேன் என்பதை திருமாவளவன் கூறியிருந்ததை அனைத்து கட்சிகளுமே கவனிக்கவே செய்தன.. காரணம், வரும் எம்பி தேர்தலில், பாமக திமுகவுடன் கூட்டணி வைக்க முயல்வதாக ஒருபேச்சு அடிபட்டு வருகிறது. .அதற்கேற்றபடி, சில சம்பவ நிகழ்வுகளிலும் திமுகவை, பாமக நெருங்கியே வருவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், பாமகவுடனான கூட்டணி பற்றி திமுக இதுவரை எதையுமே வெளிப்படையாக சொல்லவில்லை.. பாமக சார்பிலும் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிப்படையாக வரவில்லை.

 முணுமுணுப்புகள்

முணுமுணுப்புகள்

ஆனால், சித்திரை முழு நிலவு மாநாடு நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருப்பதாக சொல்கிறார்கள்.. அநேகமாக மே 06ம் தேதி மாநாடு நடக்கலாம் என்று தகவல்கள் கசிந்து வரும்நிலையில், தமிழ்நாடு அரசு அதற்கு ஒப்புதல் தருமா? தராதா? என்ற சந்தேகமும் ஓடிக் கொண்டிருக்கிறது.. அதுமட்டுமல்ல, நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாமல் யாருக்கும் ஆதரவு இல்லை என்று சொல்லி ஒதுங்கிவிட்டது. இப்படி ஒதுங்கியதற்கு காரணமே திமுக தரப்புதான் என்றும் முணுமுணுப்புகளும் எழுந்தன. ஈரோடு கிழக்கு தொகுதியில் சுமார் 3 சதவீதம் வன்னியர் வாக்குகள் இருப்பதாக சொல்கிறார்கள். அந்த வாக்குகளை, தன் பக்கம் திருப்பவே பாமகவை "யாருக்கும் ஆதரவில்லை" என்ற நிலைப்பாட்டை திமுக எடுக்க வைத்ததாம்..

 கலைகிறது மவுனம்

கலைகிறது மவுனம்

மேலும், திமுகவில் உள்ள வன்னியர் சமூகத்து சீனியர் அமைச்சர் ஒருவர், இதன் பின்னணியில் இருந்ததாகவும், ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கும்படி முக்கிய நிர்வாகிகளுக்கும் பாமக தரப்பில் சிக்னல் தரப்பட்டுள்ளதாகவும் நம்முடைய ஒன் இந்தியா தமிழிலேயே ஸ்பெஷல் செய்தி ஒன்றை நாம் பதிவிட்டிருந்தோம்.. அந்த அளவுக்கு பாமக, திமுக பக்கம் நெருங்கி கொண்டிருப்பதாகவே கருதப்பட்டு வந்தது.. அதுமட்டுமல்ல, கடந்த மாதம் பாமகவின் பாலு செய்தியாளர்களிடம் பேசும்போது சில தகவல்களை தெளிவுபடுத்தியிருந்தார்.

 பாமக கூட்டணி

பாமக கூட்டணி

அப்போது, "2021-ம் ஆண்டு நடந்த 9 மாவட்டங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என முடிவெடுத்திருந்தோம். அந்த நிலைப்பாடு இப்போதும் தொடர்கிறது. அதிமுகவுடன் பாமக கூட்டணியில் இருப்பதாக சொல்வது அறியாமையால் ஏற்படும் சந்தேகம்.. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.. 3 மாதத்திற்கு முன்பு தான் யாருடன் கூட்டணி என்பதை முடிவெடுப்போம் என்று மூத்த தலைவர் பாலு கூறியிருந்ததால், எப்படியும் திமுகவுடன் பாமக கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாகவும் அறுதியிட்டு செய்திகள் வலம்வந்தன.

 கருவாடு மீன்

கருவாடு மீன்

ஆனால், 4 நாட்களுக்கு முன்பு, அதிமுக பொதுக்குழு வழக்கில் சுப்ரீம்கோர்ட் எடப்பாடி தீர்ப்பு தந்திருந்த நிலையில், உடனடியாக அன்புமணி ராமதாஸ் வாழ்த்து கூறியிருந்தார். "அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் தேர்ந்தெடுத்தபோதே பாமக சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டோம், அந்த வாழ்த்துகள் இப்போதும் செல்லும் என்றும் அன்புமணி தெரிவித்திருந்தார். அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாடு இப்போதும் தொடர்வதாக பாமக தரப்பில் சொல்லப்பட்ட நிலையில், எடப்பாடிக்கு அன்புமணியின் இந்த வாழ்த்து பலரது புருவங்களையும் உயர்த்திவிட்டு போனது.

 பூனைக்கு மணி

பூனைக்கு மணி

இப்படிப்பட்ட சூழலில்தான் திருமாவளவன் நேற்றைய தினம், தன்னுடைய கூட்டணி நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.. உடனே இன்றைய தினம், பாமக தரப்பு கூட்டணி பற்றின கேள்விக்கு பதிலளித்துள்ளது.. இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, "2026 ல் தமிழகத்தில் பாமக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும்.. அதற்கான பணி நாடாளுமன்ற தேர்தலில் துவங்கப்படும்... திமுக உடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை; வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.. அப்படியானால், பாமக யாருடன்தான் கூட்டணி வைக்க போகிறது? திமுகவா? அதிமுகவா? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

அறிவாலயம்

அறிவாலயம்

பாமகவுடனான கூட்டணி பற்றி திமுக இதுவரை எதையுமே வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், சில மாதங்களுக்கு முன்பு விசிகவின் ஆளூர் ஷாநவாஸ், நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்கு ஒரு சிறப்பு பேட்டியினை தந்திருந்தார்.. அதில், "கூட்டணி என்ற பேச்சுவார்த்தை எப்போதும் தேர்தல் சமயங்களில் அடிபடத்தான் செய்யும்.. அப்படியானால், பரிதாபத்துக்குரியது பாமகதான்.. திமுகவை நோக்கி மட்டுமல்ல, பாமகவினர் விசிகவையும் நோக்கியும்தான் நகர்கிறார்கள்.. இப்போதெல்லாம் விசிகவை எங்கேயாவது பாமகவினர் விமர்சிக்கிறார்களா? கிடையாது.. 10 வருஷத்துக்கு முன்னாடி எவ்வளவு அவதூறுகளை விசிக மீது பாமகவினர் பேசினார்கள்.. குற்றவாளி போல எங்களை சித்தரித்தார்களே? இன்னைக்கு அதெல்லாம் எங்கே போச்சு? எங்களது பேச்சையே பாமக எடுப்பதில்லையே..

 அசைகிறது அச்சாணி

அசைகிறது அச்சாணி

ஆக, திமுகவையும் பாமக விமர்சிப்பது இல்லை, விசிகவையும் விமர்சிப்பதில்லை.. கூட்டணியில் எப்படியாவது இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதால், விசிகவையும் நெருங்கி வரும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.. திமுகவில் விசிக பலமாகவே உள்ளது.. கொள்கைப்பூர்வமாக திமுகவுடன் உடன்பட்டு நிற்கிறது விசிக. பாமக திமுக கூட்டணிக்கு வந்தால், விசிக என்ன செய்ய போறாங்க என்று கேட்கிறார்கள்.. பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருக்க மாட்டோம்.. பாமக கூட்டணிக்குள் வருவதை திமுகவே திரும்பவில்லை.. இதுதான் உண்மை" என்று கூறியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+