பிரேமலதா வந்துட்டாங்க.. அறிவாலயத்தில் விழுந்த "அம்புகள்".. இப்பவும் மிஸ் பண்ணுவாரா எடப்பாடி பழனிசாமி
சென்னை: தமிழகத்தில் 3வது அணி உருவாகுமோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.. அப்படி உருவானால், எடப்பாடி பழனிசாமி அமைக்கபோகும் அணியில், இடம்பெற போவது யார் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பி உள்ளது.
கடந்த மாதம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, டெல்லி சென்ற, எடப்பாடி பழனிசாமி தனியாக சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது 2 பேருமே தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும், கூட்டணி தொடர்பாகவும் விவாதித்ததாக தெரிகிறது.
அமித்ஷா வலியுறுத்தல்: "எம்பி தேர்தலில், நீங்கள் 20 இடங்களில் போட்டியிடுங்கள், எங்களுக்கு 20 தொகுதிகளை கொடுத்து விடுங்கள்.. இந்த இடங்களில் நாங்களும் போட்டியிட்டுக்கொண்டு கூட்டணி கட்சிகளுக்கும் பிரித்து கொடுத்து விடுகிறோம் என்று அமித்ஷா தரப்பில் கேட்டதாக தெரிகிறது.. ஆனால், அமித்ஷாவின் வியூகத்துக்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.

தேமுதிக: கூட்டணியில் யார்-யாருக்கு எத்தனை இடங்கள்? என்பது பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாராம்.. அதேபோல, அதிமுக-பாஜக கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த கட்சிகளை அப்படியே இந்த முறையும், மறுபடியும் கூட்டணியில் இடம்பெறச் செய்ய வேண்டும், குறிப்பாக, தேமுதிக கட்டாயம் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்றாராம் அமித்ஷா.
சங்கடம்: இதற்கு மட்டும் ஓகே சொன்னாராம் எடப்பாடி பழனிசாமி.. தேமுதிகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதில் எங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை என்று உறுதியாகவும் சொன்னாராம்.. அந்தவகையில், தேமுதிகவின் ரூட் கிளியர் ஆகிவிட்டதாகவே தெரிகிறது.
விமர்சனங்கள்: அதற்கேற்றவாறு, திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களையும் தேமுதிக முன்னெடுக்க துவங்கிவிட்டது.. திமுக அரசு மீதான விமர்சனங்களையும் வலுவாகவே முன்வைத்து வருகிறது.
இன்றுகூட, தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.. விருதுநகர் மாவட்டம் திருமங்கலம் அருகே காங்கேய நத்தத்தில் உள்ள வீரசின்னம்மாள் கோவில் உள்ளது.. இது, விஜயகாந்தின் குலதெய்வ கோவில் என்கிறார்கள்..
விஜயகாந்த்: இந்த கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக பிரேமலதா விஜயகாந்த் வந்தார்.. அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, "வருமான வரித் துறையினர், அமலாக்கத் துறையினர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் வீடுகளில் மட்டும் சோதனை செய்வது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சோதனைக்கு என்ன என்பது மர்மமாகவே உள்ளது. மக்களுடைய வரிப்பணத்தை சொந்த பணமாக மாற்றும் நபர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றமில்லை.
தமிழகத்தில் அதிகமாக லஞ்ச ஊழல் தலை விரித்தாடுகிறது. அதனால் இது போன்ற சோதனைகள் கட்டாயம் நடைபெற வேண்டும். இந்த சோதனையை தேமுதிக வரவேற்கிறது. திமுக ஆட்சி ஒரு ஹிட்லர் ஆட்சி போல இருக்கிறது..
முடிவு எப்போது: உரிமைக்காக போராடுபவர்கள் நியாயமான கோரிக்கையாக இருந்தால் நிச்சயமாக அரசு அவர்களுக்கு செவிசாய்க்க வேண்டும்... பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் உள்ளது. நிச்சயமாக ஜனவரி மாதம் கூட்டணி குறித்தும், தேமுதிக நிலைப்பாடு குறித்தும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும்" என்றார் பிரேமலதா.
இப்போது சிக்கல் என்னவென்றால், அதிமுக - பாஜக கூட்டணி "தற்சமயம்" முறிந்துள்ளதால், தேமுதிக யாருடன் இணைய போகிறது என்பது தெரியவில்லை.. கடந்த தேர்தலின்போதே, எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவை கழட்டிவிட்டிருக்ககூடாது, எப்படியாவது கூட்டணிக்குள் இழுத்து போட்டிருந்தால், அதிமுகவின் வாக்கு சதவீதத்தை உயர்த்தியிருக்க முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து சொல்லி வந்தார்கள்.
தற்போதைய சூழலில், எடப்பாடி பழனிசாமிக்கு பலனமான கூட்டணியை கட்டமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், தேமுதிகவை, அரவணைத்து கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது..
விஜயகாந்த்: அதேபோல, விஜயகாந்த் மீது எப்போதுமே மேலிட பாஜக தலைவர்களுக்கு தனிப்பட்ட பிரியம் உண்டு.. இதற்காக தேமுதிக மீதும் மேலிட பாஜக தலைவர்களுக்கு ஒரு "சாப்ட் கார்னர்" இருக்கத்தான் செய்கிறது.. இந்த முறை தனித்து போட்டியிடும் சூழல் தங்களுக்கு வந்தால், கூட்டணியில் தேமுதிகவை இடம்பெற செய்யவே பாஜக முயற்சிக்கும் என தெரிகிறது.
இன்னும் சில தினங்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரஉள்ளதாக சொல்கிறார்கள்.. அப்போது, பாஜகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அக்கட்சியில் கூடி முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. அப்போது, டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தையில், தேமுதிக சம்பந்தமாகவும் பேச்சு எழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
க்ளைமேக்ஸ்: எனினும், தனித்து போட்டி என்று பாஜக முடிவெடுத்துவிட்டால், தேமுதிக என்ன செய்யும்? அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா? பாஜகவுடன் கூட்டணி வைக்குமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications