ராகுல் காந்திக்கு தில்லு பாருங்க. "அங்கயே" போறாராமே..அஸ்திரத்தை மீண்டும் கையிலெடுத்து.. கவனித்த பாஜக
சென்னை: ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.. அத்துடன், ராகுலின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பாஜகவும் உன்னிப்பாக கவனிக்க துவங்கி விட்டதாகவே தெரிகிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு - காஷ்மீர் வரை 145 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டேன். கடல் கரையிலிருந்து தொடங்கிய எனது பயணம், வெயில், தூசி, மழை, காடு, நகரங்கள், மலைகள் வழியாக காஷ்மீரின் பனியை அடைந்தேன். பல வருடங்களாக தினமும் 8 கி.மீ தூரம் வரை ஓடுகிறேன்.அப்படியானால் தினமும் ஏன் 25 கி.மீ தூரம் ஓடக்கூடாது என்று நினைத்தேன்? என்னால் தினமும் 25 கிலோமீட்டர் தூரத்தை எளிதாக கடக்க முடியும் என்று நம்பினேன். அவ்வாறு நடைபயணம் மேற்கொண்ட போது, முழங்கால் வலி ஏற்பட்டது.

பரிசு தருவார்கள்: 3,800 கிலோமீட்டர் பயணத்தை எப்படி முடிப்பேன் என்று நினைத்து தனியாக அழுதேன். இந்த பயணத்தை எப்பொழுது நிறுத்த நினைத்தேனோ, இத்திட்டத்தை கைவிட நினைத்தேனோ, அப்போதுதான் எங்கிருந்தோ ஓடிவரும் ஒருவர் எனக்கு அன்பான பரிசை தருவார்கள்.
ஒருமுறை சிறுமி கடிதம் கொடுத்தார். வயதான பெண் ஒருவர் வாழைப்பழ சிப்ஸ் கொடுத்தார். ஒருவர் ஓடி வந்து என்னைக் கட்டிப்பிடித்தார். "பாரத மாதா" என்பது வெறும் நிலம் அல்ல. குறிப்பிட்ட கலாசாரம், வரலாறு, மதத்துடன் தொடர்புடையது அல்ல. ஒவ்வொரு இந்தியனின் குரலாக இந்தியா உள்ளது. எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், பலமாக இருந்தாலும் இந்தியா என்பது வலி, மகிழ்ச்சி, பயம் ஆகியவற்றால் அடக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
நடைபயணம்: ராகுலின் இந்த அறிக்கையானது, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது. அன்று ராகுலின் நடைபயணத்தை பாஜக விமர்சித்தது.. இந்த நடைபயணம் ராகுல் உடல் நலனுக்கு வேண்டுமானால் நல்லதாக இருக்கலாம். ஒரு போதும் நாட்டு நலனுக்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ நல்லதாக இருக்காது என்றனர்.. ஆனால், இன்று பாஜக மாநில தலைவரும் இதே நடைபயணத்தைதான் மேற்கொண்டு வருகிறார் என்பதை மறுப்பதற்கில்லை.
ராகுலின் நடைபயணம், காலை, மாலை ஒன்றேகால் மணிநேரம் வாக்கிங் செய்வது போல உள்ளது என்று சீமான் அன்று கிண்டலடித்திருந்தார். ஆனால், எதிர்க்கட்சிகளோ, ராகுலின் இந்த நடைபயணம்தான், 2024 தேர்தலுக்கான தரமான சம்பவமாக இருக்க போகிறது என்பதை அப்போது எதிர்க்கட்சிகள் யாரும் அறியவில்லை.
முக்கியத்துவம்: ராகுல்காந்தியின் இந்த நடைபயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததற்கு இன்னொரு காரணம், அது தமிழகத்தில் இருந்து துவக்கப்பட்டதுதான்.. மக்கள் மீது இந்த நடைபயணங்கள் தாக்கம் ஏற்படுத்துகிறதோ, இல்லையோ எல்லோரும் இதுகுறித்து பேசுவதும், விவாதிப்பதும்கூட காங்கிரஸ் தரப்புக்கு வலு சேர்க்கும் என்று காங்கிரஸ் தரப்பில் நம்பப்பட்டது.. அதுபோலவே, வெற்றிகரமாக அமைந்தது இந்த நடைபயணம்.. இதன் வெற்றியை கர்நாடக தேர்தலிலும் காங்கிரஸால் சுவைக்க முடிந்தது.
எம்பி பதவி பறிப்பு என்ற பலனையும் இதற்காக அனுபவிக்க நேர்ந்தாலும், அதையும் சட்டரீதியாக எதிர்கொண்ட ராகுலின் அசாத்தியதை கண்டு கதர் தலைவர்கள் பூரித்து போயிருக்கிறார்கள்.
தேர்தல்கள்: விரைவில் ஆங்காங்கே மாநில தேர்தல்கள் வரப்போகின்றன.. இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியின் எழுச்சி அபரிமிதமாகவே இருக்கும் என்று இப்போதே அரசியல் விமர்சகர்கள் கருத்து சொல்ல ஆரம்பித்துவிட்டனர். அதற்கேற்றவாறு, ராகுல் காந்தி 2ம் கட்ட நடைபயணம் மேற்கொள்ள போவதாகவும் தகவல்கள் பரபரத்து வருகின்றன.
இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கான வேலைகள் இப்போதே நடந்து வருகிறதாம்.. வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் 2ம் கட்ட நடைபயணத்தை ராகுல் தொடருவார் என்றும், அதுவும் அந்த பயணத்தை குஜராத்தின் போர்பந்தரிலிருந்து தொடங்கி அருணாச்சல பிரதேசத்தின் லோஹித் மாவட்டத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் சொல்கிறார்கள்.
சொந்த தொகுதி: பிரதமர் மோடியின் சொந்த தொகுதியில் இருந்து இந்த நடைபயணத்தை ராகுல் துவங்க போவதாக சொல்வதே பெரும் எதிர்பார்ப்பை இப்போதே கிளறி விட்டுள்ளது.
இந்திய வரலாற்றை பொறுத்தவரை, பெரும் தலைவர்களுக்கு பெரிதும் கைகொடுத்து உதவியுள்ளது இதுபோன்ற யாத்திரைகள்தான் என்பதை மறுப்பதற்கில்லை.. காந்தியின் தண்டி யாத்திரை முதல் அத்வானியின் ரத யாத்திரை வரை இந்தியா ஏராளமான யாத்திரைகளை கண்டுள்ளது இந்த நாடு.. ஏன், நம் தமிழகத்தில்கூட, இந்தி திணிப்பு முதல் வைகோவின் பாதயாத்திரை வரை, அழியாத தடங்களை பதித்து சென்றுள்ளன.. இதன்மூலம் மக்களுடன் நேரடியாக நெருங்கி சந்திப்பதால் ஏற்படக்கூடிய தாக்கங்கள், அதிர்வுகள் அதிகம்..

2ம் கட்ட பயணம்: அந்தவகையில், ராகுலுக்கு இந்த 2ம் கட்ட பயண யாத்திரையும் நிச்சயம் கைகொடுக்கும் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.. விரைவில் எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், காங்கிரஸ் பக்கம் கவனத்தை ஈர்க்க இத்தகைய பெரிய அளவிலான இந்த நடைபயணங்கள் மிகமுக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது..
காங்கிரசுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில், இந்த நடைபயண அரசியல் அமையும் என்றாலும், ராகுலின் ஒவ்வொரு காய்நகர்த்தலும், மக்களை எளிதில் அணுகக்கூடிய, நெருங்கக்கூடிய, அன்பை பொழியக்கூடிய ஒரு தேசிய தலைவர் என்பதைதான் நிரூபித்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது.
இப்படித்தான் அன்று நேருவும் மக்கள் மனதை வென்றார்.. இப்படித்தான், இந்திராவும் மக்கள் மனதை வென்றார்... இப்படித்தான், ராஜீவ்வும் மக்கள் மனதை வென்றார்... இப்போது ராகுலும் வென்று வருகிறார் என்று நெகிழ்கிறார்கள்..!
-
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications