குடும்ப அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் கைரேகை.. சென்னை வாழ் வெளியூர் மக்களே இதை நோட் பண்ணுங்க
சென்னை: குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. வெளியூர் ரேஷன் கார்டு வைத்து சென்னையில் வசிக்கும் மக்கள் இதுவரை கைரேகை வைக்காமல் பலர் இருக்கிறார்கள். அவர்களால் சென்னையிலேயே கைரேகை வைக்க முடியுமா? இதில் எதார்த்தம் என்ன என்பதை பார்ப்போம்.
இந்தியாவில் பொதுவிநியோகத் திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தும் மாநிலங்களில் முக்கியமானது தமிழ்நாடு. தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் சரியான முறையில் தங்களுக்கான அரிசி பருப்பு முதல், உதவி தொகை வரை அனைத்தையும் பெறும் இடமாக ரேஷன் கடைகள் உள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகளுக்கு உணவு பொருட்கள் நியாய நிலையில் வழங்க 34 ஆயிரத்து 793 ரேஷன் கடைகள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் கூட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன,
இதன் மூலம் தமிழ்நாட்டில் 7 கோடியே 52 ஆயிரத்து 847 பேருக்கு உணவு பொருட்கள் பெற்று பயன்பெறுகிறார்கள். இவர்களில் அரசின் உத்தரவுப்படி 6 கோடியே 96 லட்சத்து 49 ஆயிரத்து 842 பேர் தங்களது ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைத்திருக்கிறார்கள்.
'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக உணவு பொருட்களை மாநிலத்தின் எந்த ஊரில் உள்ளவர்களும் எந்த ஊரிலும் போய் வாங்கி கொள்ள முடியும். உணவுப்பொருள் வழங்கும் திட்டம் முற்றிலும் கணிணி மயமாக்கப்பட்டுள்ளதுடன், ரேஷன் பொருட்களும் கைரேகை பதிவு மூலம் வழங்கப்படுவதால், குடும்ப உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் தமிழ்நாட்டின் எந்த ரேஷன் கடைகளிலும் தங்களுக்கு வேண்டிய பொருட்களை கைரேகை வைத்து வாங்கி செல்கிறார்கள்.
இதனிடையே அந்தந்த குடும்ப உறுப்பினர்களுக்குத்தான் அரசின் மானியம் சென்று சேர்கிறதா என்பதை அறிய விரும்பிய அரசு, அதற்காக வங்கிகளை போல் கே.ஒய்.சி. முறையை கையில் எடுத்துள்ளது. அதுதான் கைரேகை பதிவு முறை, இதன்படி நியாய விலை கடைகளில் பயனாளிகளின் விவரங்களை முழுமையாக பதிவு செய்து (குறிப்பாக அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள்) கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த திட்டத்தை தமிழக அரசு தற்போது தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக ரேஷன் அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் சுய விவரங்களை வெள்ளைத்தாளில் அளிப்பதுடன் விரல் ரேகை சரிபார்ப்பை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே குடும்ப அட்டையில் கைரேகை இணைக்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்றும், குடும்ப உறுப்பினர் பெயர் நீக்கப்படும் என்றும் சமூக ஊடங்களில் வேகமாக வதந்தி பரவியது. இதை திட்டவட்டமாக தமிழக அரசு அண்மையில் மறுத்தது.
மேலும் ரேஷன் அட்டைதாரரின் குடும்ப உறுப்பினர்கள் கைவிரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளப்படவில்லை எனில், அவர்களின் பெயர் நீக்கம் செய்யப்படும் என்றோ, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படாது என்றோ தவறான தகவல்களை ரேஷன் ஊழியர்கள் சொல்லக்கூடாது என்றும் அரசு அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் வெளியூர் ரேஷன் கார்டு வைத்து சென்னையில் வசிக்கும் மக்கள் இதுவரை கைரேகை வைக்காமல் பலர் இருக்கிறார்கள். அவர்களால் சென்னையிலேயே கைரேகை வைக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி சென்னை மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பெண் ஒருவர் வந்து இன்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு கடையில் பணியாற்றும் ஊழியர் கூறுகையில், உங்களுக்கு எந்த ஊரில் ரேஷன் கார்டில் பெயர் உள்ளதோ அந்த ஊரில் மட்டுமே கைரேகை வைக்க முடியும். அதுவும் உங்கள் கார்டு எந்த கடையில் உள்ளதோ அந்த கடையில் மட்டுமே கைரேகை வைக்க முடியும்.. நீங்கள் சென்னையில் எல்லாம் கைரேகை வைக்க முடியாது என்றார். எனவே சென்னையில் உள்ள வெளியூர் கார்டு வைத்துள்ள மக்கள் சொந்த ஊரில் போய் மட்டுமே ரேஷன் கார்டுக்கு கைரேகை வைக்க முடியும்.
இதனிடையே குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க இசேவை மையங்கள் தபால் நிலையங்களில் மக்கள் குவிந்து வருகிறார்கள் .. இதேபோல் கைரேகை பதிவு செய்யவும் பலர் ஆர்வமுடன் தபால் நிலையங்களுக்கு சென்று வருகிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications