Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டோட்டலா காலி".. பாஜக மீது பாய்ந்த கே.பி. முனுசாமி.. மேலிடத்துக்கு எடப்பாடி தந்த ஸ்ட்ராங் "மெசேஜ்"

பாஜகவுக்கு அதிமுகவின் கேபி முனுசாமி 2 விதமான மெசேஜ்களை தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக அரசு, மத்திய அரசு திட்டங்களை நாங்கள் கொண்டு வந்து உள்ளோம் என்று தமிழகத்தில் ஆய்வு செய்து சொல்கிறார்கள்... ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக, இதுபோன்று துருப்புச் சீட்டை எடுத்துக் கொண்டிருப்பது ஆரோக்கியமாக இருக்காது... தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இதுபோன்ற செயல்களில் பாஜக ஈடுபட்டு வருகிறது என்று அதிமுகவின் மூத்த தலைவர் கேபி முனுசாமி பரபரப்பு பேட்டியை தந்துள்ளார்.

ஒன்றுபட்ட அதிமுகவை விரும்பும் பாஜக மேலிடம், கடந்த சில மாதங்களாகவே, உட்கட்சி விவகாரங்களில் தலையிடாமல் இருந்தது.. கடந்த சில நாட்களாகத்தான், எடப்பாடி & ஓபிஎஸ் இரு தரப்பையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக மறைமுக அழுத்தம் தரப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பாஜக தலையிட துவங்கியதாக தகவல்கள் கசிந்ததுமே, ஓபிஎஸ் டெல்லிக்கு செல்கிறார் என்றும், பிரதமர் மோடி, அமித்ஷா இருவரையும் சந்தித்து பேச போவதாகவும், வைத்தியலிங்கம் கூறியிருந்தார். ஆனால், ஏற்கனவே, தாம் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாமே தோல்வியில் முடிவடைந்துவிட்ட நிலையில், எடப்பாடி அப்செட்டாக இருக்கிறார் என்றார்கள்.

 கத்திகள்

கத்திகள்

வழக்குகள், விசாரணைகள் கழுத்தை நெரிக்கும்நிலையில், பாஜகவின் மறைமுக பிரஷர் எகிறி வரும் நிலையில்கூட எடப்பாடி பழனிசாமி எப்படியும் பாஜகவுக்கு பணிந்துவிடுவார் என்றே கணிக்கப்பட்டது. எனினும் அத்தனை யூகங்களும் நொறுங்கிவிட்டன.. 4 நாட்களுக்கு முன்பு சேலத்தில் எடப்பாடி பேசியபோது, பிறகுதான், "அதிமுகவிற்கு எதிராக செயல்படுபவர்களை இனி கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை... அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது... ஒரு கட்சி விவகாரத்தில் இன்னொரு கட்சி தலையிட முடியாது" என்று தி்ட்டவட்டமாக கூறியிருந்தார்..

மெசேஜ்

மெசேஜ்

இது ஓபிஎஸ், சசிகலாவுக்கு மட்டுமல்லாமல், பாஜகவுக்கு தரப்பட்ட மறைமுக மெசேஜ் போலவே பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமியை பாஜக மேலிடம் சமாதானம் செய்து கொண்டுவந்தாலும், அதற்கு அவரது ஆதரவாளர்களான சிவி சண்முகம், கேபி முனுசாமி போன்றோர் சம்மதிப்பது கடினம் என்று அரசியல் நோக்கர்களும் கருத்து சொல்லி வருகிறார்கள்.. அதிமுக வாக்கு வங்கி உடையாமல் இருக்க, எடப்பாடி வழிக்கு வந்தாலும், அவரை சுற்றியுள்ள இதுபோன்ற 4 சீனியர்கள், கட்சியை ஒன்றுசேர விடாமல் தடுப்பதாக ஓபிஎஸ் தரப்பிலேயே குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஷாக்கிங்

ஷாக்கிங்

டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க போவதாக வைத்திலிங்கம் சொன்னபோதே, இதுகுறித்து அதிமுக மூத்த தலைவர் கேபி முனுசாமியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டார்கள்.. அதற்கு அவர், "பாஜக என்பது கூட்டணியில் இருக்கும் கட்சி மட்டுமே.. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முடிவெடுப்போம்.. உலக தலைவர் மோடியை, ஒரு சின்ன பிரச்னைகளோடு இணைத்து பேசுவது நாகரிகமில்லை என்று" முனுசாமி கூறியிருந்தது, பாஜகவுக்கு தந்த இன்னொரு மெசேஜாகவே பார்க்கப்பட்டது. இப்போது இன்னொரு பேட்டியையும் முனுசாமி பாஜகவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார்..

துருப்புச்சீட்டு

துருப்புச்சீட்டு

செய்தியாளர்களிடம் பேசும்போது, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அன்றைய ஆட்சியாளர்கள் இவ்வளவு கீழே இறங்கி வரவில்லை.. அன்று மத்திய அரசின் திட்டங்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வந்துகொண்டுதான் இருந்தன.. அப்படி வந்தபோதும்கூட, அந்த மாநில ஆட்சியாளர்கள் தாங்கள் செய்வது போல காட்டிக் கொள்வார்கள்..ஆனால்,அதை பற்றி மத்தியிலே ஆட்சியில் இருப்பவர்கள் கவலை கொள்ளமாட்டார்கள்.. ஆனால், இப்போது பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பல திட்டங்களை நாங்கள்தான் கொண்டு என்று வந்தோம் என்று சொல்கிறார்கள்.. அது அவ்வளவு ஆரோக்கியமான செயல் இல்லை என்றே நான் கருதுகிறேன்..

மாறுபட்ட சிந்தனை

மாறுபட்ட சிந்தனை

காரணம், நாங்கள் செய்கிறோம், நீங்க்ள செய்கிறோம் என்று சொன்னால், மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் ஒரு மாறுபட்ட கருத்து, மாறுபட்ட சிந்தனை வருகிறபோது, அரசுத்துறையில் இருக்கின்ற நிர்வாகிகள், அதிகாரிகள் அவர்கள் செயல்படுவதற்குரிய சங்கடங்கள் சூழ்நிலைகள் வந்துவிடும். அது ஒரு தேசிய தேசிய கட்சி, அந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று முயற்சி கொண்டிருக்கிறார்கள்.. அந்த முயற்சியை பல்வேறு வழிகளில் செய்யலாம்.. ஆனால், இதை ஒரு துருப்பு சீட்டாக எடுத்துக் கொண்டிருப்பது எதிர்காலத்தில் அவ்வளவு ஆரோக்கியமானதாக இருக்காது என்பது எங்களது கருத்து என்றார்.

விவகாரம்

விவகாரம்

முனுசாமியின் இந்த பேட்டி 2 விதமான மெசேஜ்களை டெல்லிக்கு தெரியப்படுத்தி வருகிறது.. ஒன்று, தங்கள் சொந்த உட்கட்சி விவகாரத்தில், பாஜக தலையிட கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.. இன்னொன்று, அதிமுக செய்த திட்டங்களையே, தாங்கள் செய்தது போல பாஜக காட்டிக் கொள்வதையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதன்மூலம், ஒருங்கிணைந்த அதிமுக என்ற பாஜக முடிவையும் ஏற்க போவதில்லை என்பதுடன், வரப்போகும் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்குமா? என்ற சந்தேகத்தையும் கிளப்பி விட்டுள்ளது..

கூட்டணி முறிவு?

கூட்டணி முறிவு?

எப்போதுமே அதிமுகவை பொறுத்தவரை, அதன் தலைவர்கள், அதாவது ஜெயலலிதாவோ, எடப்பாடியோ, முக்கிய அறிவிப்புகளை வெளியிட மாட்டார்கள்.. பெரும்பாலும், அக்கட்சியின் மூத்த தலைவர்களை வைத்துதான் எந்த அறிவிப்பையும் வெளியிட செய்து, அதன்மூலம் தங்கள் கருத்துக்களையும், நிலைப்பாடுகளையும் அறிவிப்பார்கள்.. இந்த காரியத்தை பெரும்பாலும் செய்து கொண்டிருப்பவர் முனுசாமிதான்.. அந்தவகையில், மூத்த தலைவர் முனுசாமியின் பேச்சு, டெல்லிக்கு அலர்ட் மணியை அடித்து விட்டுள்ளது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+