தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது... பாலாஜியை விட்டு விளாசிய அர்ச்சனா
வீட்டை சுத்தம் செய்வதற்காக பாலாஜியை வேல்முருகன் எழுப்பினார். ஆனால் அவர் எழுந்திருக்காததால் அதற்கு அர்ச்சனா தூங்குறவங்களை எழுப்பலாம் ஆன தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது என்று சொன்னார்.
சென்னை: பிக்பாஸ் வீட்டில் நேற்று வீட்டை சுத்தம் செய்வதற்காக பாலாஜியை கிளீன்ங் கேப்டன் வேல்முருகன் எழுப்பினார். ஆனால் அவர் எழுந்திருக்காததால் ஹவுஸ் கேப்டன் அர்ச்சனா கோபத்துடன், தூங்குறவங்களை எழுப்பலாம் ஆன தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது என்று சொன்னார்.

நேற்று பிக்பாஸ் வீட்டில் தங்கத்தை சேகரிக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதில் முக்கியமானது ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரும் தாங்கள் சேகரித்த தங்கத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதால் பாலாஜி அதற்காக கடுமையாக போராடினார். அதிலும் சனம் தன்னை உள்ளே போக விடாமல் தடுத்தும் அவரை எதிர்த்து தங்கத்தை கொண்டுவந்தார்.
சனம் போன்ற பல எதிரிகளை எதிர்த்து துவம்சம் செய்த கலைப்பில் பாலாஜி தூங்கிக்கொண்டிருந்தார். முதல்நாளில் விஜயதசமியை முன்னிட்டு பல போட்டிகள் நடத்தப்பட்டதால் தூங்குவதற்கு நேரமானது என்று யாரும் வீட்டை சுத்தம் செய்யவில்லை, அதனால் இன்றாவது சுத்தம் செய்ய வேண்டும் என்று பாலாஜியை சுத்தம் செய்ய சொல்லலாம் என்று அர்ச்சனா, ரமேஷ் இருவரும் அவரை கூப்பிட்டனர்.
பிறகு அவர் தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்த அர்ச்சனா கிளீனிங் டீம் கேப்டனான வேல்முருகனிடம் சென்று பாலாஜியை எழுப்பி சுத்தம் செய்ய சொல்லுங்க என்று சொன்னார். வேல்முருகன் எழுப்பியும் பாலாஜி எழுந்திரிக்காததால், ஆஜித்தை எழுப்பச் சொன்னார்.
ஆஜித் பாலாஜியை எழுப்பி நேற்றும் ஹவுஸ் கீப்பிங் செய்யவில்லை அதனால் இன்று செய்ய வேண்டுமாம் என்று சொன்னார், அதற்கு பாலாஜி ஆஜித்திடம் நேற்று 12-மணி வரை டாஸ்க் இருந்ததால் யாருமே எந்த வேலையும் செய்யவில்லை என்றார்.
ஆஜித் வேல்முருகனிடம் அவர் காலையில் ஏதோ வேலை செய்தாராம் என்று சொல்ல அதற்கு வேல்முருகன் எல்லாரும் சேர்ந்துதான் செய்தோம் என்றார். பிறகு ஆஜித் வேல்முருகனிடம் நீங்கதான கேப்டன் அப்ப நீங்களே போய் சொல்லுங்கனு சொன்னார்.
வேல்முருகன் பாலாஜியை எழுப்பிக் கேட்டதற்கு பாலாஜி எனக்கு சோர்வாக இருக்கு வேறுயாரயாவது கூட்டசொல்லுங்க நான் காலையில கூட்டுறேன்னு சொன்னார். அதைகேட்ட சுரேஷ் நான் வருகிறேன் என்னால் குனிய முடியாது அதனால மேலேயே தள்ளிவிடுறேன் என்றார்.
அதற்கு பாலாஜி என்னோட வேலைய நீங்க ஏன் பாக்கனும் சும்மா இருங்கனு சொல்ல, அதற்கு சுரேஷ் உன்னோட வேலைய பாக்கல அவங்களுக்கு உதவுறேன்னு சொன்னார்.

பாலாஜி வேல்முருகனிடம் தூங்கிட்டு இருக்கும்போது எழுப்பி வேலை செய்ய சொல்லுறது தவறு முழிச்சிக்கிட்டு இருக்கும்போது யாராவது செய்யமாட்டேன்னு சொல்லுவாங்களானு கேட்டார்.
பாலாஜி பேசியதை ரியோ அர்ச்சனாவிடம் சொன்ன பிறகு, அர்ச்சனா பாலாஜியை பார்த்து "தூங்கும்போது வேலை செய்யமாட்டாங்க ஆன எட்டி மட்டும் பார்ப்பார்களா" என்று கேட்டார்.
பாலாஜி கோபப்பட்டு உடனே எழுந்து துடைப்பத்தை எடுத்து கூட்டினார். அப்படியிருந்தும் பிரச்சனை முடியவில்லை. வீட்டை சுத்தம் செய்து கொண்டே, பாலாஜி வேல்முருகனிடம் தூங்கும்போது வேலை செய்யமாட்டாங்க ஆன எட்டி மட்டும் பார்ப்பார்களா என்று என்னை பார்த்து சொன்னது நான் வேலை செய்யக்கூடாது என்பதற்காகவே தூங்குகிறேன் என்ற அர்த்தத்தில் சொன்னது போல் இருக்கிறது என்றார்.
பாலாஜி கூட்டிக்கொண்டே நானும் தலைவர் ஆவேன் அப்பொழுது எல்லாரையும் அம்மிக் கல்லில் ஆட்ட வைத்துக்கொண்டே இருப்பேன் என்றார். அதற்கு ரியோ பாலாஜைத் திட்டியதால் கோபமடைந்த பாலாஜி நான் உங்களிடம் பேசவில்லை கேப்டனிடம் பேசுகிறேன் என்று நறுக்குன்னு கேட்டார். இந்த பிரச்சனையில் தேவையில்லாமல் தலையிட்ட ரியோ நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார்.
பிறகு அர்ச்சனா பாலாஜியை பார்த்து தூங்குறவங்களை எழுப்பலாம்... தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது... என்று சொன்னார். கேப்டன் அர்ச்சனா சிரித்தாலே அதிரும் அதிலும் டெரர் ஆக தனது வேலையை ஆரம்பித்து விட்டார். கோபப்பட்டு கண்களை உருட்டி பேசி பாலாஜி ஆர்மியின் கோபத்தை சம்பாதித்து விட்டார் அர்ச்சனா. இன்றும் பாலாஜியை வெளுத்து வாங்கி அர்ச்சனா அழ வைத்திருப்பதாக புரமோவும் வெளியாகியுள்ளது.
அர்ச்சனா, பாலாஜி இடையே ஆரம்பத்தில் இருந்தே ஒத்து போகவில்லை. இப்போது சண்டையாகி விரிசலும் வந்து விட்டது. வீட்டிற்குள் இன்னும் யார் யார் சண்டை போட்டு போர்க்களமாக மாற்றப்போகிறார்களோ பார்க்கலாம்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications