போயஸ் கார்டனில் மேலிட "தலை".. நிஜமாவே "பூனைக்குட்டி" வெளியே வருது? இது நடந்தால் பாஜகவுக்கு செம பிளஸ்
சென்னை: தேர்தல் நெருங்கிவிட்டது.. பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் தமிழகத்தில் செய்திகள் கசிந்துகொண்டிருக்கின்றன.. இப்போதும் அப்படியே ஒரு செய்தி காற்று வாக்கில் இணையத்தில் சுற்றிகொண்டிருக்கிறது. என்னவாம்?
சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் ரஜினிகாந்த் லக்னோ சென்று, உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத்துடன் சேர்ந்து ஜெயிலர் படத்தை பார்த்தார்.. பிறகு, முதல்வர் யோகி வீட்டிற்கு சென்று, யோகியின் காலைத்தொட்டு வணங்கினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சலசலப்பை தமிழகத்தில் உண்டுபண்ணிவிட்டது.

சந்நியாசி : "ஒரு சந்நியாசியாக இருக்கட்டும், யோகியாக இருக்கட்டும் அவர்கள் நம்மைவிட சின்ன வயதுகொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். அதைத்தான் நான் செய்தேன்" என்று ரஜினி விளக்கமளித்தாலும், இந்த நிகழ்வு பல சந்தேகத்தை அப்போது ஏற்படுத்தியிருந்தது.. நட்பு ரீதியாக முதல்வர் யோகியை சந்தித்தாலும், காலில் ஏன் விழவேண்டும்? நம்முடைய ரஜினி, இப்படியெல்லாம் காலில் விழலாமா? என்று பலரும் ஆதங்கப்பட்டனர்.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால், அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியிருந்தால், யோகி அல்லவா முதல்வர் ஆனது போல ஆகியிருக்கும் தமிழ்நாடு. தமிழக மக்கள் எவ்வளவு உயர்ந்த மதிப்பை ரஜினிகாந்த் மீது வைத்திருந்தோம்? என்று ஆதங்கப்பட்டார்.
ஆதங்கம்: இதே கேள்வியை அதிமுக ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள்.. "அதாவதுங்க.. ரஜினி மனசுல என்ன இருக்குதுன்னு எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது.. அது அவருக்கு மட்டும்தான் தெரியும்.. எப்படியிருந்தாலும், பூனைக்குட்டி ஒருநாள் வெளியே வந்துதானே ஆகும்? அந்த பூனைக்குட்டி வெளியே வரும்போது, நான் இதுக்கு பதில் சொல்றேன்" என்றார் ஜெயக்குமார்.
இந்த பழைய கதை எதற்காகவென்றால், ஒவ்வொரு முறை தேர்தலின்போதும், ரஜினிகாந்த்தின் அரசியல் பேச்சு சற்று காட்டமாகவே எதிரொலிக்கும்.. எம்பி தேர்தல் கிட்ட நெருங்கிட்ட நிலையில், மீண்டும் ரஜினியின் பெயர், அரசியல் களத்தில் முணுமுணுக்கப்படுகிறது.. இந்த முறையாவது, ரஜினியை சரியாக பயன்படுத்தி கொள்ள பாஜக முயற்சிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ரஜினி வாய்ஸ்: அடுத்த முறை தன்னுடைய ஆதரவு யாருக்கு என்று சொல்கிறேன் என்று ரஜினி முன்பு கூறியிருந்தார்.. எனவே, இம்முறை தேர்தலில் ரஜினி வாய்ஸ், பாஜகவுக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன், ரஜினி ஏற்கனவே நல்ல நட்பில் உள்ளார்... அத்துடன் சிறப்பு அழைப்பின் பேரில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திலும் பங்கேற்றிருந்தார்.. தாதா சாகேப் பால்கே விருது கொடுத்து மத்திய அரசும் ரஜினியை கெளரவித்திருப்பதால், பாஜக மீது நெருக்கத்தையும், ஈர்ப்பையும் ரஜினி கொண்டிருப்பதால், அவரது ஆதரவை பெறும் முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்களாம்.
ரஜினி ஆதரவு: அதுமட்டுமல்ல, இந்த 10 வருட பாஜக ஆட்சியில், எதற்காகவும் மத்திய அரசை ரஜினி விமர்சித்ததில்லை என்பதையும் மேலிட தலைவர்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.. எனவே, ரஜினி ஆதரவு கிடைக்கும் என்றம், 3வது முறையாக பிரதமராக மோடி மீண்டும் பொறுப்பேற்க, ரஜினி வாய்ஸ் தருவார் என்றும் கனத்த நம்பிக்கையில் உள்ளார்களாம்.
ஒருவேளை, பாஜகவுக்கு வெளிப்படையாக ஆதரவு தருவதற்கு தயங்கினால், பிரதமர் மோடியின் 10 வருட கால சாதனைகளை பாராட்டி, ஒரு ட்வீட் போட்டாலே போதும் என்று ரஜினியிடமே பாஜக சீனியர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்களாம்.
பூனைக்குட்டி: பாஜகவின் விருப்பம் இப்படியிருந்தாலும், ரஜினிகாந்த் இதுதொடர்பாக என்ன முடிவெடுக்க போகிறார் என்பதுதான் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது..
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பாஜக முன்னெடுத்து வரும் ரோடு ஷோ உள்ளிட்டவைகள், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருவதுடன், மக்களின் ஆதரவையும் பெற்று வருகிறது.. இந்த சமயத்தில், ரஜினியின் ஆதரவும் கிடைத்தால் அது பாஜகவுக்கு மேலும் பிளஸ்பாயிண்ட்டாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஒருவேளை பாஜகவுக்கு ரஜினி ஆதரவு தந்துவிட்டால், திருமாவளவன் சொல்லும் அந்த "பூனைக்குட்டி" நிஜமாகவே வெளியே வந்துவிடுமா??? என்றும் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications