Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடித்து தூக்கும் பாஜக..கோவை முதல் தென்சென்னை வரை இப்படி ஒரு பிளானா? "கமலத்தை" வீழ்த்தும் கமல் ஹாசன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக மற்றும் திமுக கூட்டணியை சேர்த்து வீழ்த்த வேண்டும் என்பதில் பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அந்தவகையில், கோவை தொகுதியை பற்றின சில செய்திகள் கசிந்து வருகின்றன.

தமிழக பாஜகவுக்கு, செல்வாக்கு நிறைந்த பகுதிகள் என்று சொல்லக்கூடிய 10 தொகுதிகளில் முதன்மையாக உள்ளவை கோவை மற்றும் தென்சென்னை தொகுதிகள் ஆகும்.

Can Tamil Nadu BJP S G suryah contest in Coimbatore or South Chennai and What are the DMK Kamal Haasans plan

வாக்குகள்: இந்த தென்சென்னையை பொறுத்தவரை, பிராமணர்கள் அதிகளவில் வசிக்கும் தொகுதியாகும்.. இதை தவிர, முதலியார், மீனவர்கள், தலித்துகள் எனப் பலதரப்பட்ட மக்களையும் உள்ளடக்கியிருக்கிறது.

அரசு ஊழியர்கள், ஐடி ஊழியர்கள் என்று படித்தவர்கள் எண்ணிக்கையும் இந்த தொகுதியில்தான் அதிகம்... நகர்ப்புறமும், கிராமமும் என எல்லா தரப்பு மக்களும் வசிப்பது இந்த தொகுதியில்தான் என்பதால், வாக்குகள் ஒரே இடத்தில் குவியும் என்று எதிர்பார்க்க முடியாது. எனினும், பாஜகவுக்கு "கை" கொடுத்து உதவக்கூடிய தொகுதியாகும்.

சமூக ஓட்டுக்கள்: இந்த முறையும், இந்த தென்சென்னையில் மிகுந்த நம்பிக்கையை வைத்திருக்கிறது.. காரணம், பிராமண சமூகத்தின் ஓட்டுக்கள் நிச்சயம் தன்னை காப்பாற்றும் என்று நம்புகிறது.

கடந்த தேர்தலில் மூத்த தலைவர் இல.கணேசன் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றதே இதற்கு சாட்சியாகும்.. அதேபோல, கடந்த 2014 எம்பி தேர்தலில், 2ம் இடம் வந்த திமுகவுக்கும், 3ம் இடம் வந்த பாஜகவுக்கும், மொத்த வாக்கு வித்தியாசமே வெறும் 40 ஆயிரம் ஓட்டுக்கள்தான்.. அதனால்தான் கடந்த 2019-ல் தமிழிசை சவுந்தரராஜானே இந்த தென்சென்னையில் போட்டியிடும் முடிவில் இருந்தார்..

எஸ்.ஜி. சூர்யா: இந்த முறை தென்சென்னை தொகுதியில் போட்டியிட பாஜகவின் பல முக்கிய தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. அதில் பாஜகவின் எஸ்.ஜி.சூர்யாவும் ஒருவர்.. இவர் தென்சென்னையை குறி வைத்து, பல வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.

ஆனால், இதே தென்சென்னையில்தான், மக்கள் நீதி மய்யம் ரங்கராஜன் 1,36,645 வாக்குகளை பெற்றிருந்தார். இத்தனைக்கும் கடந்த முறை தனித்து போட்டியிட்டு, ஓட்டுக்களை வாங்கியிருந்தது கமல் கட்சி.

தென்சென்னை: இந்த முறை திமுகவுடன் கூட்டணி வைக்கும் நிலையில், இதே தென்சென்னையை கமலுக்கு ஒதுக்க திமுக முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அந்தவகையில், மக்கள் நீதி மய்யத்துக்கு இது ஒருவகையில் பிளஸ் பாயிண்ட் என்றே சொல்லலாம். அப்படி தென்சென்னையில் கமல் நிறுத்தப்பட்டால், இதே சென்னையில் அவரது வாக்குகளை வீழ்த்த, பாஜகவின் எஸ்.ஜி.சூர்யா தயாராகி வருவதாகவும் சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் கசிந்தன.

இப்போது விஷயம் என்னவென்றால், கோவை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டால், மறுபடியும் அவரை தோற்கடிக்க பாஜக தயாராக இருக்கிறது என்று எஸ்.ஜி. கூறியிருக்கிறார்.

கோவை தொகுதி: கோவை பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பாஜகவின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநிலசெயலாளர் எஸ்.ஜி. சூர்யா, முன்னாள் எம்.பி. கார்வேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஜி.சூர்யா, "எம்பி தேர்தலில் தமிழகத்தில் அதிக தொகுதிகளில் போட்டியிட உள்ளதால் பாஜகவினர் உற்சாகமாக உள்ளனர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கட்சியினர் தெரிவிக்கும் கருத்துக்கள் தொகுக்கப்பட்டு தலைமையிடம் ஒப்படைக்கப்படும்.

கமல்ஹாசன்: கோவை பாராளுமன்ற தொகுதி பாஜகவுக்கு மிக முக்கியமானது. கடந்த சட்டசபை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனை எதிர்த்து எங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பாஜக 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறக் கூடிய தொகுதி இதுவாகும்.. அதனால், வருகிற பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டால் மீண்டும் அவரை தோற்கடிக்க பா.ஜ.க. தயாராக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

கோவை தொகுதியை குறிவைத்து எஸ்.ஜி.சூர்யா பேசியிருப்பதால், தென்சென்னைக்கு பதிலாக, கோவையில் போட்டியிட போகிறாரா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

ஆனால், இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தினர் சொல்லும்போது, கோவை தொகுதியை, நாங்கள் நூலிழையில்தான் மிஸ் பண்ணினோம்.. நாங்கள் வென்றிருக்க வேண்டிய தொகுதி அது.. போதாக்குறைக்கு கடந்த ஒரு வருடமாகவே, கோவையில் பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறோம். அதனால், கோவையை எங்களுக்கு ஒதுக்கினால் நிச்சயம் பாஜகவை தோற்கடிப்போம்.

தென்சென்னை: ஒருவேளை தென்சென்னையை ஒதுக்கினால், அதுவும் எங்களுக்கு கூடுதல் பலமே.. காரணம், கடந்த முறை தனித்து போட்டியிட்டே லட்சக்கணக்கில் தென்சென்னையில் ஓட்டு வாங்கினோம்.. இந்த முறை திமுகவுடன் களம் காண நேர்ந்தால், அது எங்களுக்கே வெற்றியாக அமையும். அதுவும் இல்லாமல் கடந்த முறை, அதிமுக - பாஜக ஒன்றாக கூட்டணி வைத்து போட்டியிட்டன. இந்த முறை அக்கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதும் எங்களுக்கே சாதகமாக போகிறது" என்கிறார்கள்.

ஆக மொத்தம், கமலுக்கு எந்த தொகுதியை ஒதுக்கினாலும், அவரை தோற்கடிக்க பாஜக மும்முரமாகி வருவதாக தெரிகிறது. அந்தவகையில், பிராமண ஓட்டுக்கள் கை கொடுக்கப் போவது கமலுக்கா? கமலத்துக்கா?? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+