Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பலிக்குது பாஜக ஆசை.. திராவிட கட்சியை வீசியெறிந்து "ரிஸ்க்".. விக்கிரவாண்டியையும் விடல.. திமுக விடாதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்கிரவாண்டி தொகுதிக்கு எப்போது தேர்தல் என்று இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இப்போதே அங்கு தேர்தல் அனல் அடிக்க துவங்கிவிட்டது. இந்த லிஸ்ட்டில் பாஜகவும் இணைந்துள்ளதுதான் பலரது புருவத்தையும் உயர்த்தி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக, திமுகவை சேர்ந்த புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்தஏப்ரல், 6ல் உயிரிழந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Can Tamil Nadu BJP win in the Vikravandi constituency and what will AIADMK DMK PMK going to the next

இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.. ஆனால், அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அநேகமாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தேர்தல் நடத்தப்படலாம் என்கிறார்கள். எனினும், தமிழக அரசியல் இப்போதே ஜரூர் வேலையில் இறங்கிவிட்டன.

அதிமுக: இந்த தொகுதியை கைப்பற்றுவதில் திமுக, அதிமுக இரு கட்சிகளுமே தீவிரம் காட்டி வருகின்றன.. இரு கட்சிகளுமே இங்கு பலமாக உள்ளன.. ஆனால், இந்த இரு திராவிட கட்சிகளையும் தாண்டி பாமகவும் இங்கு வலுப்பெற்று உள்ளது. காரணம், வடமாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதி என்பதால், பாமகவுக்கான செல்வாக்கும் இங்கு அதிகமாகவே உள்ளது. அதனால்தான், விக்கிரவாண்டியில் களமிறங்க போவதாக பாமகவும் அறிவித்திருக்கிறது.

2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்.

தேமுதிக: பாமகவுக்கு எங்கெல்லாம் செல்வாக்கு இருக்கிறதோ, அங்கெல்லாம் தேமுதிகவுக்கும் ஆதரவு இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், இந்த முறை விக்கிரவாண்டி தொகுதியில் தேமுதிக களமிறங்குமா? என்று தெரியவில்லை.

எனினும், இந்த தொகுதியை யாருக்கும் விட்டுத்தர திமுக தயாராக இல்லையாம்.. அமைச்சர் பொன்முடியின் கை இங்கே ஓங்கியே இருப்பதால், இந்த இடைத்தேர்தலில் தன்னுடைய மகன் கெளதம சிகாமணியை, களம் இறக்கிவிடலாம் என்று நினைக்கிறாராம். காரணம், மணல் குவாரி வழக்கானது, விஸ்வரூபமெடுத்துள்ளதால், மகனை களமிறக்கினால், தனக்கு அதுவொரு சட்ட பாதுகாப்பாக இருக்கும் என்றும் நம்புகிறாராம்..

அதுமட்டுமல்ல, திமுகவில் எல்லா சீனியர்களின் வாரிசுகளுக்கும் சீட் தந்துவிட்ட நிலையில், பொன்முடி மகன் மட்டும் மிஸ்ஸிங் என்பதால், நிச்சயம் தன் மகனுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறாராம்.

பொன்முடி: ஆனால், பொன்முடியின் சில சர்ச்சை பேச்சுகள், திமுக மேலிடத்தை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கிவிட்டதால், பொன்முடியின் விருப்பத்துக்கு இதுவரை பச்சைக்கொடி காட்டவில்லையாம்.. எனவே, மறைந்த சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியின் மகன் செல்வக்குமாருக்கு சீட்டு ஒதுக்கலாமா? அல்லது விழுப்புரம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெயசந்திரனுக்கு ஒதுக்கலாமா? என்று யோசித்து வருகிறதாம்.

அதிமுகவை பொறுத்தவரை, அன்று முதல் இன்றுவரை சிவி சண்முகம் "கன்ட்ரோலில்"தான் விக்கிரவாண்டி இருந்து வருகிறது. என்றாலும், அவர் யாரை கையை காட்டுகிறார் என்று தெரியவில்லை.. சிவி சண்முகத்தை மீறி எடப்பாடி பழனிசாமி வேறு ஒருவரை முன்னிறுத்துவாரா? என்றும் தெரியவில்லை.. அதிமுக யாரை நிறுத்தினாலும், திமுகவை சமாளிக்கும் அளவுக்கு பலம் இருக்குமா? என்பதும் தெரியவில்லை.

துணிச்சல்: இப்படி அதிமுகவே இன்னும் ஒருமுடிவுக்கு வராத நிலையில், களத்தில் துணிச்சலாக குதித்துள்ளது தமிழக பாஜக.. இந்த விக்கிரவாண்டி தொகுதியில் பாஜகவும் போட்டியிட போகிறதாம்..

இதுகுறித்து, தமிழக பாஜக துணை தலைவர் எம்.சக்கரவர்த்தி சொல்லும்போது, தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து, பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக தலைமையில், பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்ற பலம் வாய்ந்த கூட்டணி உருவானது... எனவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், பாஜக போட்டியிட்டு வெற்றி பெறும்' என்று கூறியிருக்கிறார்.

பயனாளிகள்: அதுமட்டுமல்ல, விக்கிரவாண்டி தொகுதியிலுள்ள மத்திய அரசின் பயனாளிகளை சந்தித்து, கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுமாறு, மாவட்ட நிர்வாகிகளை, கட்சி தலைமை அறிவுறுத்தியிருப்பதால், பாஜகவினர் இப்போதே தீவிரப்பணிகளில் இறங்கிவிட்டார்களாம்.

ஆனால், திமுக யாரை வேட்பாளராக நிறுத்துகிறது என்பதை பார்த்துவிட்டு, அதற்கு பிறகே அதிமுக தன்னுடைய வேட்பாளரை பரிசீலிக்கும் என்கிறார்கள். அப்படியிருக்கும்போது, பாஜக முந்திக்கொண்டு களப்பணியில் இறங்கியிருக்கிறது.

மாம்பழம்: விழுப்புரத்தில் "மாம்பழம்" பிரபலமானது என்பதால், பாமக ஆதரவுடன் பாஜக களமிறங்குமா? என்று தெரியவில்லை.. காரணம், பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்குதான், லோக்சபா தேர்தலில் தொகுதி ஒதுக்கப்பட்டது. அதேபோல, தமாகாவின் ஆதரவும் இங்கு ஓரளவு இருப்பதை மறுக்க முடியாது..

திராவிட கட்சிகளை மட்டுமே நம்பி, இதுவரை தமிழக தேர்தல்களை பாஜக சந்தித்து வந்தநிலையில், சமீபகாலமாகவே, பாஜகவின் வளர்ச்சியும், துணிச்சலும் தமிழக மக்களின் கவனத்தை திருப்பிவருகிறது...

மிகக்குறைந்த அளவிலான வாக்கு சதவீதத்தை வைத்திருந்தாலும், "சுயபரிசோதனை" செய்துகொண்டு, வாக்கு சதவீதத்தை உயர்த்தும் ரிஸ்க்கையும் பாஜக தொடர்ந்து முன்னெடுத்து வருவதும் கவனிக்கத்தக்க விஷயமே.

ரிஸ்க்: ஆனால், இடைத்தேர்தல்கள் என்றாலே அது ஆளும் தரப்புக்கு சாதகமான முடிவை பெற்றுத்தரும் என்பது, பெரும்பாலும் எழுதப்படாத நடைமுறையாகவே உள்ளதை மறுக்க முடியாது.. அதனால்தான் அதிமுக உட்பட பல கட்சிகள் விக்கிரவாண்டி விஷயத்தில் தயக்கம் காட்டுவதாகவும் தெரிகிறது. அப்படியிருக்கும்போது, பாஜகவின் இந்த துணிச்சல் நிஜமாகவே பாராட்டத்தக்கதுதான்... பொறுத்திருந்து பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+