Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சிக்கு குஷி.. இவர்தான் போட்டியா? வைகோ பேசாத பேச்சா? வீடியோ வருதாமே.. "முக்கோண இடி"யில் திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவுக்குள் கூட்டணி பேச்சுவாத்தை துவங்கப்பட்டுள்ளதையடுத்து, அதுகுறித்த பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. என்ன அது?

சில தினங்களுக்கு முன்பு திருச்சி தொகுதி பற்றி தகவல் ஒன்று வெளியாகியிருந்தது.. அதாவது, கடந்த முறை வென்ற திருச்சி தொகுதியை, இந்த முறை காங்கிரஸுக்கு தர முடியாது என்று மூத்த தலைவர் டி.ஆர்.பாலு சொல்லியிருந்தாராம்.. அப்படியானால், ராமநாதபுரத்தை கொடுக்குமாறு மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேட்டதாக தெரிகிறது.

Can Tamil nadu Congress contest in Trichy and Where is Vaiko going to compete in DMK Allinace

அதற்கு டி.ஆர்.பாலு, முஸ்லிம் லீக்கிடம் பேசுவதாக சொன்னாராம்.. ஒருவேளை, திமுக கூட்டணிக்கு பாமக வரவில்லையானால், காங்கிரசுக்கு கூடுதலாக 2 தொகுதிகள் கிடைக்கலாம் என்றும், திமுகவின் இந்த முடிவை, சோனியா, ராகுலிடம் சொல்லி, நல்ல பதில் பெற்று தரும்படி சிதம்பரத்திடம் டி.ஆர்.பாலு கேட்டுக் கொண்டாராம்.

டிஆர் பாலு: எனவே, ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டில், அவரது வீட்டில் டி.ஆர்.பாலு சந்தித்து, மீண்டும் இது தொடர்பாக விரிவாக பேசியுள்ளார்... புதிய வரவுகளுக்கு இடம் தரும் வகையில், கூட்டணி பங்கீட்டில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், அதற்கு காங்கிரஸ் ஒத்துழைக்க வேண்டும் என்றும், சிதம்பரத்திடம் அவர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.. அதோடு சரி.

அதற்கு பிறகு இதுகுறித்த கூடுதல் தகவல் எதுவும் வெளியாகவில்லை.. ஆனால், காங்கிரசுக்கான தொகுதிகளில் கை வைக்க திமுக எண்ணுவதாக தகவல்கள் பரபரத்தன. அதனால்தான், இந்த முறை எப்படியாவது 15 சீட்டுக்களை பெற்றுவிட வேண்டும் என்பதில் காங்கிரசும் உறுதியாக இருப்பதாக சொல்கிறார்கள்.

காங்கிரஸ் கூட்டணி: இப்படிப்பட்ட சூழலில்தான், திருச்சி காங்கிரஸை பற்றி கூடுதல் தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கடந்த முறை திருச்சி தொகுதியை காங்கிராசுக்கு ஒதுக்கியது திமுக. அதில் போட்டியிட்ட வெற்றிப்பெற்றார் காங்கிரஸ் திருநாவுக்கரசு. வருகிற நாடாளுமன்ற தேர்தலில், திருச்சி தொகுதியை தனது கூட்டணி கட்சிகளில் ஒன்றான மதிமுகவுக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளாராம் முதல்வர் ஸ்டாலின்.

அதாவது,நேரடி அரசியலில் இருக்கும் வைகோவின் மகன் துரைவையாபுரியை எம்.பி.யாக்க வைகோவுக்கு உறுதி தந்திருக்கிறாராம் ஸ்டாலின். துரையை விருதுநகரில் போட்டியிட வைக்கலாம், அவரை எம்.பி.யாக்குவது என் பொறுப்பு என்றும் சொல்லியிருந்தார்.

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.. விருதுநகர் தொகுதி காங்கிரசிடம் இருக்கிறது.. அதன் எம்.பி.யான மாணிக்தாக்கூர் ராகுலுக்கும் கே.சி.வேணுகோபாலுக்கும் மிக நெருக்கமானவர்.

மாணிக்தாக்கூர்: அதனால் மாணிக்கின் அழுத்தம் காரணமாக இந்த முறை விருதுநகரை விட்டுத்தரமுடியாது என திமுக தலைமைக்கு ஏற்கனவே சொல்லி, விருதுநகரை காங்கிரஸ் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இதனை வைகோவிடம் தெரிவித்து, துரைக்கு திருச்சியில் நிற்க வைக்கலாம் என திமுக சொல்லியதாம். இதனை வைகோவும் ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

அதனால்தான், திருச்சி தொகுதியை காங்கிரசிடமிருந்து மதிமுகவுக்காக எடுத்துக்கொள்கிறது திமுக. திருச்சியை தக்கவைக்காமல் விட்டுக்கொடுக்க காங்கிரஸ் தலைமையும் முடிவு செய்து விட்டது. திருச்சியை தக்கவைத்துக் கொள்ள எந்த ரிஸ்க்கையும் காங்கிரஸ் டெல்லி தலைமை முயற்சிக்கவில்லை. பெயரளவில் கேட்கலாம், அழுத்தம் தர வேண்டாம் என்பது காங்கிரசின் முடிவாக இருக்கிறது.

திருநாவுக்கரசு: இந்த நிலையில்தான், திருச்சியை காங்கிரஸ் தலைமையே தாரை வார்க்க முடிவு செய்துள்ளது என்பதை அறிந்து அப் - செட்டாகியுள்ளாராம் மூத்த தலைவர் திருநாவுக்கரசு. இதனால் காங்கிரஸ், திமுக மீது கோபமாகவும் இருக்கிறாராம் திருநாவுக்கரசர்.

அதுவும் வைகோவுக்கு இந்த தொகுதியை ஒதுக்குவதற்காக திருச்சியை நம்மிடமிருந்து திமுக பறிக்கிறது என்ற கோபம், திருநாவுக்கரசுக்கு அதிகமாகி வருகிறதாம். இதனைப் பொறுக்க முடியாத திருநாவுக்கரசு, தனது ஆதரவாளர்களிடம் சில விசயங்களை சொல்லியிருக்கிறார்.

கூட்டணி அனல்: இதனைத்தொடர்ந்து, திமுகவை பற்றி வைகோ திட்டிய பழைய வீடியோ பேட்டிகளை எடுத்து சோசியல் மீடியாக்களில் பரப்பி வருகிறார்கள் திருநாவுக்கரசின் தொண்டரடி பொடியாழ்வார்கள்... இந்த தில்லாலங்கடி விவகாரம்தான், காங்கிரஸ் + திமுக + மதிமுக என மூன்று தரப்பிலும் பரபரப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளதாம்.. இதனால், திமுக கூட்டணியே அனலடித்து காணப்படுகிறதாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+