"விட்றாதீங்க".. சிட்டிபாபு உயிர் போச்சே.. கருப்பைக்குள் போகாத ஆளுநர் ரவி.. கொந்தளித்த திமுக ஆ.ராசா

ஆளுநர் ரவியின் திராவிடம் இல்லை என்ற பேச்சுக்கு திமுக எம்பி ஆ ராசா பதிலடி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அந்த ஆரியத்துக்கும், திராவிடத்துக்கும் போர் நடந்தது,.. அந்த போரை இடையிலே நிறுத்தியிருந்தார்கள்.. அந்த போர் இப்போது மறுபடியும் மூளுகிறது.. அந்த போரை தலைமை தாங்குற தகுதி கருப்பு சட்டைக்கும், நீல சட்டைக்கும், சிவப்பு சட்டைக்கும் இருக்க வேண்டும்" என்றார்.

தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை மாற்ற வேண்டும் என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தியவாறே இருக்கின்றன..

காரணம், கடந்த சில மாதங்களாக சனாதனம் குறித்தும், திருக்குறள் குறித்தும் பேசி வருகிறார்... அவரது பேச்சுக்கு ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

ஜனசங்கம்

ஜனசங்கம்

எனினும், ஆளுநரின் பேச்சு சர்ச்சைகளை தாங்கியே வருவதாக கூறப்பட்டு வருகிறது.. கடந்த 4 நாட்களுக்கு முன்புகூட, திராவிடம் இனம் என ஒரு இனமே இல்லை, ஆங்கிலேயர்கள் கூறியது, திராவிடம் என்பது ஒரு இனமே இல்லை என்று கூறியிருந்தார். வட பகுதியில் இருப்பவர்கள் தெற்கு பதிகுக்கு வருவதும், தெற்கில் இருப்பவர்கள் வட பகுதிகளுக்கு செல்வதும் நீண்டகாலமாக இருந்து வருகிறது, அதுமாதிரி ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகும், திராவிட இனம் என்று பின்பற்றுவது தவறு என்றும் ஆளுநர் பேசியிருந்தது, திராவிட தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உண்டு பண்ணி வருகிறது.

 கருணாநிதி

கருணாநிதி

இந்நிலையில், ஒரு கூட்டத்தில் பேசிய திமுக மூத்த தலைவரும் எம்பியுமான ஆ.ராசா, வழக்கம்போல் ஆளுநரின் இந்த பேச்சுக்கு தன் பாணியிலேயே பதிலடி தந்துள்ளார்.. அவர் பேச்சின் சுருக்கம்தான் இது: "திராவிடம் என்பது கிடையாது என்று அன்றைக்கு இருந்த பாஜக அதாவது ஜனசங்கத்தின் தத்துவவாதிகள்கூட, அண்ணாவை மறுத்து பேசுவதற்கு இயலவில்லை.. ஏனென்றால் அவர்கள் தவறு செய்தாலும்கூட, தப்பான இடத்திலேயே இருந்தாலும்கூட, அறிவு ஞானம் மிக்கவர்களாக இருந்தார்கள்.. ஷ்யாம் பிரசாத் முகர்ஜியும் அவர்களில் ஒருவராக இருந்தார்.. அவர் நேரு கேபினெட்டிலேயே இருந்தவர்..

 கலைஞர்

கலைஞர்

இவர்கள் எல்லாம் இருந்தும்கூட திராவிடம் இல்லை என்று சொல்வதற்கு யோக்கியதை அன்று இல்லை.. ஆனால், அப்போவெல்லாம் கருப்பைக்குள்ளேயே போகாத இந்த ஆர் என் ரவி, திராவிடம் என்று ஒன்று இல்லை என்கிறார்.. ஆனால், அப்போது பெரியார் இருந்தார் பேசினார், அண்ணா இருந்தார் பேசினார்.. கலைஞர் இருந்தார் பேசினார்.. அந்த காலகட்டம் எல்லாம் அறிஞர்கள் இருந்த காலகட்டம்.. எதிரிகளும்கூட நாணயமாக இருந்தார்கள்.. உறியை கண்ணன் உடைச்சது தப்பு, நாரதர் பெண்ணாக போனது தப்பு என்று அப்போதும் சொன்னோமே.. அப்போவெல்லாம் யாருக்கும் கோபம் வரலையே..

சிட்டிபாபு

சிட்டிபாபு

ஏன் என்றால், பெரியார், அண்ணா, கலைஞர் இவர்கள் எல்லாரும் நம்மை காப்பாற்றுவதற்காக, நம் அடையாளத்தை காப்பாற்றுவதற்காக, நம் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக அன்று பேசினார்கள், எழுதினார்கள், சிறைவாசம் செய்தார்கள்.. அன்று காங்கிரஸ் செய்த நல்லதையும் சொல்றேன், கெட்டதையும் சொல்றேன்.. அன்றைக்கு எங்களை சிறையில் அடைத்தார்கள்.. திமுகவினரை சிறை வைத்தார்கள்.. உயிர்களை பறிகொடுத்தோம் சிட்டிபாபு உட்பட.. ஆனாலும், மதச்சார்பின்மை, சோஷலிஸ்ட் என்ற வார்த்தையை இந்திரா காந்தி அப்போதே சேர்த்தார்..

 மேல்மாடி காலி

மேல்மாடி காலி

யாருக்காக பயந்து கொண்டு இந்த வார்த்தையை சேர்த்தார்? இப்படியெல்லாம் ஒரு கூட்டம் பின்னாளில் வரும், முட்டாள்கள், அறிவில்லாதவர்கள், மேல்மாடியில் ஒன்றுமில்லாதவர்கள் ராஜ்பவன் வரைக்கும் வருவார்கள் என்று இந்திராவுக்கு அப்போதே தெரியும்.. அவருக்கு ஒரு தீர்க்கதரிசனம்.. ஆனால், இன்று அந்த "மதச்சார்பின்மை" என்ற வார்த்தையை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள்.. அதை காப்பாற்ற வேண்டும் என்று முனையும்போது, எல்லா தலைவர்களுக்கும் நெருக்கடி வந்துவிட்டது..

புடிச்சிருக்கு

புடிச்சிருக்கு

மம்தாவுக்கு தன்னை காப்பாற்றி கொண்டால் போதும், ஒடிசா முதல்வருக்கு, தன் வீட்டுக்கு முதல்வராக இருந்தால் போதும்.. எல்லாருக்கும் வருமானவரித்துறை, ரெய்டு, அமலாக்கத்துறையை பாய்ச்சுகிறார்கள்.. எனக்கு 2ஜி கேஸ் முடிந்துவிட்டாலும், எனக்கு மறுபடியும் ஒரு சம்மன் அனுப்பறாங்க.. மறுபடியும் சொத்துக்குவிப்பு என்று சம்மன்.. இதெல்லாம் நாங்க ஏற்கனவே பார்த்து முறைப்படி முடித்துவிட்டோம் என்றாலும், மறுபடியும் மறுபடியும் அனுப்பறாங்க..

 கருப்பு + சிவப்பு + நீலம்

கருப்பு + சிவப்பு + நீலம்

பொண்ணு பார்க்கக்கூட, ஒருமுறைதான்டா போறோம்.. புடிக்கலைன்னா விட்டுரு, புடிச்சா கட்டிக்கோ.. ஏன் 100 தடவை அந்த பொண்ணை பார்த்து வம்பிழுக்கிற? திராவிடம் என்பதற்காக மட்டும் இதை சொல்லவில்லை.. ஆரியம் என்று ஒன்று அப்போது இருந்தது, அந்த ஆரியத்துக்கும், திராவிடத்துக்கும் போர் நடந்தது,.. அந்த போரை இடையிலே நிறுத்தியிருந்தார்கள்.. அந்த போர் இப்போது மறுபடியும் மூளுகிறது.. அந்த போரை தலைமை தாங்குற தகுதி கருப்பு சட்டைக்கும், நீல சட்டைக்கும், சிவப்பு சட்டைக்கும் இருக்க வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+