"டபுள் கேம்".. ஆதாரம் சிக்கிடுச்சாமே.. திமுகவுக்கு பாஜக செக்.. அறிவாலயத்துக்கு கமலாலயம் தரும் ஷாக்
திமுகவை கண்டித்து தமிழக பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துவதுடன், புது வியூகம் கையில் எடுக்கிறது
சென்னை: திமுக அரசுக்கு எதிராக முக்கிய அஸ்திரம் ஒன்றை தமிழக பாஜக முன்னெடுக்க போகிறதாம்.. இதை திமுக எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்தது..
திமுக ஆட்சி மீது மக்களுக்கு கோபம் வரும்போதெல்லாம், இந்தி எதிர்ப்பு என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளும் என்றும், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே திமுக இந்தி எதிர்ப்பை கையில் எடுத்துள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார்.

ஸ்பெஷல் இன்டர்வியூ
மேலும், திமுக அரசை கண்டித்து அக்டோபர் 27ல் பாஜக சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அண்ணாமலை அறிவித்துள்ளார்.. இதனிடையே, நம் ஒன் இந்தியா தமிழுக்கு அக்கட்சியின் சீனியரும், மாநில துணை தலைவருமான நாராயணன் திருப்பதி ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அந்த பேட்டியில், அவர் சொல்லும்போது, "மத்திய பல்கலைக்கழகங்கள், கேந்திரி வித்யாலயா பள்ளிகள், இங்கெல்லாம் தமிழ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று நாம் சொல்லும்போது, இங்கே அதை எதிர்க்கிறார்கள்.. ஏன் எதிர்க்கிறார்கள்? தமிழ் மேல இவங்களுக்கு என்ன கோபம்?

டிரான்ஸ்போர்ட்
டிரான்ஸ்போர்ட்கடிதப்போக்குவரத்து போன்ற தகவல் பரிமாற்றங்கள் எல்லாம் தமிழில் இருக்க வேண்டும் என்று சொன்னால், அதையும் முடியாது என்று சொல்கிறார்கள்.. ஏன் எதிர்க்கிறார்கள்? தமிழ்மேல என்ன கோவம்? எல்லா இடங்களிலும் தென்னிந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை கற்க வேண்டும் என்று தேசிய கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தால், அதையும் இவர்கள் எதிர்க்கிறார்கள்.. இப்படி எல்லாத்திலும் ஒருவருடமாகவே, தமிழை புறந்தள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறது திமுக.. இதுக்கெல்லாம் என்ன காரணம்? கல்விதான் காரணம்..

ஹிந்தி + இங்கிலீஷ்
ஏன் என்றால், 30 வருடங்களாகவே, திமுக நடத்துகிற, அதிலும் முதல்வர் குடும்பம் நடத்துகிற பள்ளிகளில் தமிழே கிடையாது.. அதாவது தனியார் பள்ளிகள் தமிழை புறந்தள்ளிவிட்டு, ஆங்கிலத்தை முன்னெடுத்து செல்கிறார்கள்.. இவர்களின் நீட் உட்பட உள்ள போராட்டத்தை உற்று கவனித்து பார்த்தால் ஒன்று விளங்கும், "அரசு பள்ளிகள்" என்று மட்டும் இவர்கள் சொல்லி கொண்டிருப்பார்கள்.. இன்னைக்கு நீட் தேர்வைகூட தமிழில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.. ஆனாலும், தமிழக அரசு, தங்களின் வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.. அதனால்தான் தமிழை ஒதுக்கி கொண்டிருக்கிறார்கள்" என்று விளக்கம் தந்திருந்தார்.

நாராயணா
Vஇந்நிலையில்தான், இதே விஷயத்தில், பாஜக தீவிரம் காட்ட முனைந்திருக்கிறதாம்.. நாளை மறுநாள் திமுகவை கண்டித்து போராட்டம் நடத்தும் நிலையில், அது மட்டும் போதாது என்றும், தக்க பதிலடியை திமுகவுக்கு தர வேண்டும் என்றும் முடிவுக்கு வந்துள்ளதாம்.. அதாவது, புதிய கல்வி கொள்கையில் தாய்மொழி வழி கல்வியை மத்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது.. ஆனால், இதில் எங்கே ஹிந்தி திணிப்பு இருக்கிறது? என்று பாஜக தரப்பு கேள்வி எழுப்புகிறது.. அதுமட்டுமல்ல, திமுக தலைவர்களின் பிள்ளைகள், பேரக்குழந்தைகள் இந்தி படிக்கும்போது, மற்றவர்கள் படித்தால் மட்டும் அது திணிப்பா? என்றும் பாஜகவினர் கேள்வி எழுப்புகிறார்கள்..

டபுள் கேம்
அதனால்தான், இந்தி விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேஷத்தை கலைக்க, திமுக தலைவர்கள் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்றுத் தரப்படுவதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க போறாங்களாம்...இது சம்பந்தமான தகவல்கள் ஓரளவு திரட்டி விட்டதாம்.. மேலும் திரட்டி கொண்டு இருக்கிறார்களாம்.. கூடிய சீக்கிரமே புள்ளி விபரங்களுடன் பதிலடி தரப்படும் என்று கமலாலயம் நம்பிக்கையுடன் சொல்கிறது.. வழக்கமாக ஒரு கட்சியை இன்னொரு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது சாதாரண விஷயம் என்றாலும், அதே குற்றச்சாட்டை புள்ளிவிவரத்துடன் பகிரங்கமாக மக்களிடம் எடுத்து சொல்வதுதான் பாஜகவை மற்ற கட்சிகளிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது என்கிறார்கள்..

முக்கோணங்கள்
ஒருவேளை பாஜகவின் இந்த குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் முன்வைக்கும்போது, அதற்கு திமுக என்ன பதிலடி தரப்போகிறது என்பதும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.. 2 நாட்களுக்கு முன்பு வானதி சீனிவாசன் திமுக அரசிடம் ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார்.. அதில், "ஹிந்தியை எதிர்க்கும், தமிழ் தான் எங்கள் உயிர் என பேசும் திமுக நிர்வாகிகளில் யாராவது தங்கள் பிள்ளைகளை, தமிழ் வழியில் படிக்க வைத்துள்ளனரா? தமிழகத்தில் திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில், எத்தனை பள்ளிகளில் ஹிந்தி பாடம் உள்ளது? என்பதை வெள்ளை அறிக்கையாக திமுக தலைமை வெளியிட வேண்டும்" என்று கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications