சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"செருப்பு".. பாஜக என்றால் "இதான்" அர்த்தம்.. தைரியம் எப்படி வந்தது? பொசுங்கிடுவாங்க.. சீறிய ஈவிகேஎஸ்

ஈவிகேஎஸ் இளங்கோவன் மதுரையில் பாஜக சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பாஜகவினர் செருப்பு வீசிய விவகாரத்தில் இருந்தே பாஜக என்றாலே என்ன அர்த்தம் என்பது அவர்கள் வீசிய பொருளிலிருந்து தெரிகிறது என்று கூறியுள்ளார்.. அத்துடன் தமிழக போலீசாரையும் லேசாக சீண்டி பேசியுள்ளார்.

ஈவிகேஎஸ் இளங்கோவனை பொறுத்தவரை, யாராக இருந்தாலும் வெளிப்படையாக பேசி பல முறை சர்ச்சையில் சிக்கியவர்..

ஒருமுறை மறைந்த ஜெயலலிதா பற்றியும், பிரதமர் மோடி குறித்தும் மிகவும் அருவருக்கதக்க வார்த்தைகளால் பேசியதை இந்த தமிழகமே கேட்டது.. சில சமயம் முகம் சுளிக்கும் அளவுக்கும் இவரது விமர்சனங்கள் எல்லை மீறிவிடுவதும் உண்டு.

அண்ணாமலை பதவி விலக வேண்டும்.. செருப்பு வீச்சு சம்பவத்தால் கொதித்த காங்கிரஸ் எம்.பி! அண்ணாமலை பதவி விலக வேண்டும்.. செருப்பு வீச்சு சம்பவத்தால் கொதித்த காங்கிரஸ் எம்.பி!

 பிசிஆர் ஆக்ட்

பிசிஆர் ஆக்ட்

சொல்ல வரும் கருத்தும், பேச்சும், நிலைப்பாடும், சரியே என்றாலும், தடித்த வார்த்தைகள் காரணமாக பல சமயங்களில் இளங்கோவன் சிக்கி கொண்டுள்ளார்.. இளையராஜா விஷயத்தில், சாதியை குறிப்பிட்டு பேசியதால், பிசிஆர் சட்டம் பாயுமா? என்ற கேள்வியும் கண்டனங்களும் குவிந்தன... இந்நிலையில், பாஜகவையும் தன் பாணியிலேயே விமர்சித்துள்ளார் ஈவிகேஎஸ்.. ஈரோடு மரப்பாலம் நான்கு முனை சந்திப்பில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சுதந்திர தினம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

 1 வருடம்

1 வருடம்

இதில் கலந்து கொண்டு பேசிய இளங்கோவன், "தமிழகத்தில் இன்னும் மின் கட்டணம் அதிகப்படுத்தப்படவில்லை. அதிகப்படுத்தப்படும் என சொல்லியிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசு தான்... அதிலும் மோடி அரசு தான்... தமிழக அரசை மின்சார கட்டணம் உயர்த்த வேண்டுமென கடந்த ஒரு வருடமாகவே வற்புறுத்தி வருகிறது. ஆனால் அவர்கள் எவ்வளவு உயர்த்துகிறார்கள் என்பது தெரியவில்லை.. இது மக்களை பாதிக்காத வகையில் உயர்வு இருக்கும் என்று நினைக்கின்றேன்.

 ஜகா - ரஜினி

ஜகா - ரஜினி

ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசி இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் ரஜினியின் அடுத்த படத்திற்கு விளம்பரத்திற்கு தயாராகி வருவது தெரிய வந்துள்ளது... ரஜினியை பாஜகவினர் முன்னிலைப்படுத்துவதாக தகவல்கள் வந்திருக்கின்றன. அவர் அரசியலுக்கு வந்தால் தானே முன்னிலைப்படுத்த வேண்டும்? அவர் 30 வருடங்களாகவே ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று தானே சொல்கிறார்? எம்ஜிஆர் ஆட்சியை தர போகின்றேன் என்று ஒவ்வொரு முறையும் சொல்லிவிட்டு ஜகா வாங்குவதுதான் அவரது வழக்கம்" என்றார்.

 ஸ்ட்ரிக்ட் ஆர்டர்

ஸ்ட்ரிக்ட் ஆர்டர்

அதேபோல, நேற்றைய தினம், சத்தியமூர்த்தி பவனில் சுதந்திர நாள் கொண்டாடப்பட்டது.. அப்போது இளங்கோவன் பேசும்பாது, ''காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் எத்தனையோ உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால், ஒரு சில காவல் துறை அதிகாரிகள் அதை செயல்படுத்துவது இல்லை... தமிழக காவல் துறை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல் துறை போல சில நேரங்களில் செயல்படுகிறது... இதுபோல செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்..

செருப்பு

செருப்பு

இத்தனை காலமும் தேசிய கொடியை ஏந்தி பவனி வந்தோம்.. ஆனால், இப்போது நாட்டு மக்களை பிரிக்க நினைத்த தேச துரோகிகளும் மூவர்ண கொடியை கையில் ஏந்த ஆரம்பித்துவிட்டனர்.. நிதி அமைச்சரின் காரில் பாஜகவினர் செருப்பு வீசியதை பற்றி என்னிடம் கேட்டனர்.. ஒரு அமைச்சரை நோக்கி, ஒரு தேசிய கொடியை நோக்கி செருப்பை வீசியிருக்கிறீர்கள் என்றால், இவர்களுக்கு எவ்வளவு தைரியம்? எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது? வீசிய செருப்புக்கு இருக்கும் மரியாதைதான் இவர்களுக்கும் இருக்கிறது..

 டென்ஷன்

டென்ஷன்

தமிழ்நாட்டு மக்கள் பொங்கி எழுந்தால் பாஜகவினர் பொசுங்கிவிடுவார்கள்.. அன்று காமராஜர் டெல்லியில் அவர் தங்கி இருந்த இல்லத்தில் வைத்தவர்கள்தான் இந்த ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர்.. இவர்களுக்கு காமராஜர் பிறந்தநாளை கொண்டாட எந்த தகுதியும் இல்லை.. தமிழகத்தில் இதுபோல் மதவாத சக்திகளை எதிர்த்தே ஆக வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.. அதனால்தான் ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற மதச்சார்பற்ற கூட்டணயில் நாங்கள் இருக்கின்றோம்" என்றார்.

English summary
Can the people of Tamil Nadu wash out the BJP and congress senior leader evks slams bjp government ஈவிகேஎஸ் இளங்கோவன் மதுரையில் பாஜக சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X