அசையும் "பாஜக" அஸ்திவாரம்.. "இவர்"தான் கூட்டணி தலைவரா? நாட்டின் கவனத்தை மொத்தமாக குவித்த "இந்தியா"
சென்னை: விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற பாஜக முயற்சித்து வரும் நிலையில், அக்கட்சிக்கு நம்பிக்கை தகவல் ஒன்று கிடைத்துள்ளதாம். இதனால், மேலிட பாஜக தெம்பாகி உள்ளது. என்ன நடந்தது?
சென்னை: இன்று இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், நாட்டு மக்களின் மொத்த கவனமும், மும்பையில் குவிந்துள்ளது.. இந்தியா கூட்டணியின் தலைவர் யார் என்பது குறித்த அனுமானங்களும் இணையத்தில் வட்டமடித்து வருகின்றன.

ஜிகே வாசன்: அதனால்தான் தமாகா தொடங்கியபோதுகூட, முக்கிய நிர்வாகிகள் வாசனை மலைபோல நம்பி வந்தனர்.. ஒருமுறை, பிரதமரை வழியனுப்ப ஜிகே வாசன் சென்னை ஏர்போர்ட் வந்தபோது மோடியால் பெரிதும் கவனிக்கப்பட்டார்.. அப்போது, அங்கிருந்த எல்லாரையும் விட்டு விட்டு, வாசனிடம் மட்டும் தனிப்பட்ட பாசத்தைக் காட்டினார் மோடி... பாஜகவினரே இதை அப்போது எதிர்பார்க்கவில்லை..
அப்போதுமுதல் இன்றுவரை பாஜகவின் மேலிட அன்புக்கு பாத்திரமாகவே வாசன் திகழ்ந்து வருகிறார். "உங்களை மத்திய அமைச்சராக்குகிறோம். பாஜகவில் இணைந்துவிடுங்கள்" என்று பாஜக மேலிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டும், வாசன் அதற்கு செவிசாய்க்காமலேயே இருந்து வந்தார்.
எம்பி பதவி: 3 முறை எம்பி பதவியை தரப்போவதாக சொல்லியும், அதை அன்புடன் நிராகரித்த வாசன், இந்த முறை பாஜகவின் கோரிக்கையை தட்டமுடியவில்லை. அதேசமயம், தன்னுடைய பலத்தை காட்டாமல், வெறும் எம்பி பதவியை மட்டுமே பெற்று கொள்வதில் வாசனுக்கு விருப்பமில்லை. அதனால்தான், ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்தும் முடிவுக்கே அவர் வந்திருந்தார் வாசன்.
இப்போது விஷயம் என்னவென்றால், வாசன் மீதான நம்பிக்கையும், பாசமும் பன்மடங்கு டெல்லிக்கு பெருகிவிட்டதாம்.. இது தொடர்பாக பிரத்யேக செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
ட்வீட்: "தென்னிந்திய எம்.பி.க்களுடன் இரவு உணவு அருந்தினேன்" என்று பிரதமர் மோடி, கடந்த 2-ந்தேதி ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அது ட்விட் வைரல் ஆனது. அந்த இரவு விருந்தில் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்களில் தமாகா தலைவர் வாசனும் ஒருவராவர். அந்த விருந்தின்போது, வாசனிடம் நீண்ட நேரம் பேசியிருக்கிறார் மோடி.
இதுகுறித்து தமாகாவின் மாநில நிர்வாகிகளிடம் நாம் விசாரித்தபோது, "வாசன் மீது மோடிக்கு எப்போதும் பிரியமும் மரியாதையும் உண்டு. அந்த சந்திப்பில் தமிழக அரசியலும், அண்ணாமலையின் நடப்பயணத்தைப் பற்றி வாசனிடம் கேட்டிருக்கிறார். இந்த முறை தமிழகத்தில் 20 முதல் 25 இடங்களை நம் கூட்டணி கைப்பற்றும். பல்வேறு தரப்புகளிடமிருந்து நமக்கு கிடைக்கிற தகவல்கள் அப்படித்தான் சொல்கிறது.
தமிழக களம்: பண பலமும் அதிகார பலமும் இருக்கிற துணிச்சலில் திமுக தலைமை இருக்குது. ஒவ்வொரு ஓட்டுக்கும் முந்தைய தேர்தலைவிட, பணத்தை அதிகமா கொடுத்து வாங்கிடலாம்னு நினைக்கிறாங்க. ஆனால், மக்கள் அப்படி நினைக்கலை. அதிருப்தியிலதான் இருக்காங்க.
திமுகவின் பண விளையாட்டை முடக்கினாலே போதும்... மக்கள் நியாயமா யோசிச்சு ஓட்டுப்போடுவாங்க. தமிழக களம் நமக்கு சாதகமாக இருக்கிறது. ஆனா, ஆளும் கட்சியின் அதிகாரமும் பணமும் அதை மாத்திடக்கூடாது" என்று வாசன் சொல்லியிருக்கிறார்.

அதனை ஆமோதிக்கும் வகையில் வாசனின் முதுகில் தட்டிக்கொடுத்துள்ளார் மோடி. பிறகு நடைபயணம் குறித்து, மோடி விசாரித்துள்ளார். அதற்கு வாசன், 'மக்களை சந்திக்க நடைப்பயணம் ஒரு நல்ல கான்செப்ட்! ஒவ்வொரு மாவட்டத்துக்குள் நுழையும் போது அந்த மாவட்ட பிரச்சனைகளை முன்னிறுத்தியும் திமுகவின் ஊழலை சுட்டிக்காட்டியும் பேசுவது சரியாக இருக்கிறது..
அபார பேச்சு: பல்வேறு மாவட்டங்களில் உள்ள எங்களுடைய தமாகா தொண்டர்கள் இதுகுறித்து தகவல்களை அடிக்கடி என்னிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.. 'யாத்திரை செல்லுமிடங்களில் எல்லாம் அண்ணாமலை பேச்சு சூப்பரா இருக்கு. அந்தந்த பகுதி மக்கள், அண்ணாமலையின் பேச்சை உற்று உற்று கவனிக்கிறாங்க' என்று எனக்கு தகவல் தருகிறார்கள்... தேர்தல் நெருக்கத்தில் இந்த பயணம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று பிரதமரிடம் சொன்னாராம் வாசன்.
வாசன் பாசிட்டிவ்வாக பேசப்பேச, பிரதமர் மோடிக்கு மனம்குளிர்ந்துவிட்டதாம்.. தமிழகத்தில் இந்த முறை, எப்படியும் தாமரை மலர்ந்துவிடும் என்றும் நம்பிக்கை மேலும் வலுவாகி உள்ளதாம்.
ஆர்வம் : இந்தியா கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸில் இருந்தே கூட்டணியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்..
ஆனால், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளில் ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் போன்றவை, ராகுல் காந்தியை பிரதமராக முன்னிறுத்த எதிர்ப்பு தெரிவிப்பதால், ராகுல் அல்லாத காங்கிரஸ் தலைவர்களில் அதன் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை, கூட்டணியின் தலைவராக முன்னிறுத்தவும் மும்பை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வாய்ப்பிருக்கிறதாக சொல்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, இந்தியா கூட்டணியின் தலைவரே எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் முகமாக அறிவிக்கப்படுவார் என்பதால், இந்த கூட்டணியின் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே எகிறி வருகிறது.
தலைவர் யார்: இப்படி தொடர்ந்து, நிலவி வரும் யூகங்களுக்கும், கிளம்பி வரும் சந்தேகங்களுக்கும், இன்றைய தினம் நடக்க போகும் ஆலோசனை கூட்டத்தில் "இந்தியா" என்ன முடிவெடுக்க போகிறது என்று தெரிந்துவிடும்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications