"ஹெவி சான்ஸ்" இருக்கே.. தினகரனுக்கு ஏறும் மவுசு.. பாஜகவை விடுங்க.. எடப்பாடி பழனிசாமி பிளான் என்ன
டிடிவி தினகரன் யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்ற ஆர்வம் எழுந்து வருகிறது
சென்னை: டிடிவி தினகரன் யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறி கொண்டேயிருக்கிறது.. ஆனால், நிச்சயம் பாஜக அவரை கைவிட்டு விடாது என்கிறார்கள்.
பாஜகவை பொறுத்தவரை டிடிவி மீது நிறைய சாப்ட் கார்னர் உள்ளது.. குறிப்பாக அவரது அரசியலில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது.. மிக சிறந்த அரசியல் தலைவர் என்ற வரிசையில் அவரை வைத்து பார்க்கிறது..
தினகரன் எப்போது தேர்தலில் நின்றாலும், அமமுக பிரித்த ஓட்டுக்கள், பெரும்பாலும் அதிமுக மற்றும் திமுகவின் அதிருப்தி ஓட்டுக்கள்தான் என்பதால், இதையும் தங்களுக்கு சாதகமாகவே பாஜக கருதுகிறது.

எகிறும் பல்ஸ்
அதனால்தான் வரப்போகும் தேர்தலிலும் தினகரனை குறி வைத்துள்ளதாகவும், அப்படி அமமுகவை கூட்டணியில் இழுத்து போட்டால், நிச்சயம் திமுகவின் ஓட்டுக்களை வெகுவாக பிரித்துவிடுவார் என்றும் பாஜக நம்புவதாக தெரிகிறது.. இதில், இன்னொரு கணக்கும் பாஜகவுக்கு உள்ளது.. டிடிவியை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்தால், அதிமுகவுக்குள் டென்ஷன் எகிறியே கிடக்கும், அதனால் அதிகாரப்பிரச்சனை மேலும் தலைதூக்கி உட்கட்சி பூசல் பெருகும், அது தங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்றும் நினைக்கிறதாம். எப்படி பார்த்தாலும், டிடிவியை, பாஜக லேசில் நழுவவிடாது என்றே தெரிகிறது.

கிருஷ்ணசாமி
இப்படிப்பட்ட சூழலில்தான், எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமையில் மெகா கூட்டணி என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. மெகா கூட்டணி என்றால், இப்போதைக்கு, அதிமுக கூட்டணியில் அந்த அளவுக்கு பெரிய கட்சி எது என்று தெரியவில்லை.. காரணம், பாரிவேந்தர் பாஜகவுடன் கை கோர்க்க போகிறார்.. கிருஷ்ணசாமியும், பாஜகவின் அபிமானத்தை பெற முயல்வதாக தெரிகிறது.. பாமகவும், பாஜகவுடன் அணி சேர உள்ளதாக தகவல்கள் வட்டமடிக்கின்றன.. விஜயகாந்தை கடந்த முறையே கழட்டிவிட்டு விட்டார்கள்.. அவர்களுக்கும் வாய்ப்பில்லை.. அப்படியானால் பெரிய கூட்டணி என்று யாரை சொல்கிறார் எடப்பாடி? எதைவைத்து சொல்கிறார் எடப்பாடி? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

தாமரை + லோட்டஸ்
மற்றொருபக்கம் தினகரனை மனதில் வைத்துதான் எடப்பாடி மெகா கூட்டணி என கணக்கு போடுவதாக சொல்கிறார்கள்.. ஆனால், எடப்பாடியுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்பதில் டிடிவி தினகரன் தெளிவாகவே இருக்கிறார்.. அதுமட்டுமல்ல, பாஜகவுடனான அதிமுகவுக்கு கூட்டணியே அமைந்தாலும்கூட, அந்த அணி எடப்பாடி தலைமையில் அமைந்து விடக்கூடாது என்பதிலும் உறுதியாகவே இருக்கிறாராம்.. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தான் பெரிய கட்சி என்றும் பெரிய கட்சி என்ற அடிப்படையில் கூட்டணிக்கு அதிமுக தலைமை ஏற்கும், 2024 தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி அமையும் என்று அண்ணாமலை சொல்லி உள்ள நிலையில், அந்த பேச்சும் எடப்பாடியை யோசிக்க வைத்து வருகிறது.

கட் & ரைட்
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தன் தரப்பு முக்கிய புள்ளி ஒருவரை, தூது அனுப்பிய எடப்பாடி பழனிசாமி தரப்பு, டிடிவி தினகரனுடனான சமாதான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டதாம்.. ஆனால், டிடிவி தினகரன் கட் & ரைட்டாக, கூட்டணிக்கு நோ சொல்லிவிட்டாராம்.. இது எடப்பாடி தரப்பை அதிர வைத்து வரும் நிலையில்தான், டிடிவி தினகரனுடனான கூட்டணிக்கு ஓகே சொல்லி உள்ளார் ஓபிஎஸ்.. இத்தனை வருடங்களாக இலைமறை காய்மறையாக இருந்த உறவு, இப்போது அம்பலப்பட்டுள்ளது.. டிடிவி தினகரனுக்கு கடந்த 3 மாதகாலமாக ஒன்றிணைவோம் என்று "அழைப்பு" விடுத்து கொண்டே இருந்தார் ஓபிஎஸ்.

பாரிவேந்தர்
இதற்கு பெரிதாக ரியாக்ஷனை டிடிவி இதுவரை காட்டாமலேயே உள்ளார் என்றாலும், பழைய பாசம் ஓபிஎஸ் மீது கொஞ்சமும் குறையாமல்தான் உள்ளது.. இந்நிலையில், "வாய்ப்பு ஏற்பட்டால் கண்டிப்பாக டிடிவி தினகரனை சந்திப்பேன்" என்று சொல்லி ஓபிஸ் இன்று அதிர வைத்துள்ளார்.. அதாவது, மெகா கூட்டணி அமையும் என்று எடப்பாடி சொன்னதையடுத்து, ஓபிஎஸ் இவ்வாறு அறிவித்துள்ளார்.. அப்படியானால், ஓபிஎஸ் + டிடிவி + சசிகலா + பாஜக + பாமக + தேமுதிக + புதிய தமிழகம் + பாரிவேந்தர் + என இத்தனை பேரும் ஒன்றிணைந்தால் அதை நிச்சயம் மெகா கூட்டணி என்று சொல்லலாம்.. ஆனால், எடப்பாடி சொல்லும் மெகா கூட்டணி எது என்றுதான் இப்போதுவரை புரியவில்லை.. அடுத்து என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்..!!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications