"கூமுட்டை".. பச்சை துரோகம் எடப்பாடி.. பாய்ந்த பன்னீரு.. ஓபிஎஸ் எடுத்த திடீர் முடிவு.. அதிரும் அதிமுக
சென்னை: எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சி தரும்வகையில் முக்கிய முடிவு ஒன்றை ஓபிஎஸ் தரப்பு முன்னெடுத்துள்ளது.. இதற்கான அறிவிப்பையும் இன்று செய்தியாளர்களிடம் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி, மொத்த கட்சிகளும் நடைபோட தொடங்கிவிட்டன.. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், தனது பலத்தை நிரூபிக்கும் வேலைகளில், அரசியல் கட்சி தலைவர்களும் இறங்கிவிட்டனர்.
அதிமுக: அந்தவகையில், அதிமுகவும் களத்தில் குதித்துள்ளது.. ஆனால், ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை.. அதிமுக கேஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை.. கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
அதனால், அதிமுகவில் இருந்து விலகவும் முடியாத சூழல்.. அதிமுக தலைமை பொறுப்பை ஏற்க முடியாத அளவுக்கு, எடப்பாடி பழனிசாமி வலுவாக உட்கார்ந்து விட்டார் என்றாலும், அதிமுகவை ஓபிஎஸ்ஸால் லேசில் உதறி தள்ள முடியாத சூழல் உள்ளது..

அதேசமயம், அமமுகவுக்கு ஓபிஎஸ் பொறுப்பேற்க வேண்டும் என்ற பேச்சும் ஓடிக்கொண்டுதானிருக்கிறது.. ஒருவேளை, அமமுகவுக்கு தலைமை பொறுப்பை ஏற்பதன் மூலம், அதிமுகவை ஒருங்கிணைக்க முடியும் என்ற வாதத்தையும் சிலர் கிளப்புகிறார்கள்..
அக்கட்சிக்கு தலைமை பொறுப்பை ஓபிஎஸ் ஏற்றால், அது தினகரனுக்கும் பெருத்த பலமாகவே இருக்கும்.. அத்துடன், விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், ஒரே குடையின்கீழ் தென்மண்டலத்தை கொண்டு, அதிமுக வாக்குகளையும் சேர்த்து அமமுகவால் பெற முடியும்.. காரணம், கடந்த முறை தினகரன் பிரித்த ஓட்டுக்கள் பெரும்பாலும், அதிமுக + திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் என்பதை மறந்துவிட முடியாது.
பாஜக குஷி: அந்த வகையில், ஓபிஎஸ் அமமுகவுக்குள் வருவது ஒருவகையில் நல்லதுதான்.. இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் தென்மண்டலத்தில் ஒரு செக் வைத்தது போலவும் இருக்கும்.. மற்றொருபுறம், பாஜகவுக்கும் இது பெருமளவு நன்மை பயக்கும்.. ஆனால், ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார் தெரியவில்லை.. இதற்கெல்லாம் சேர்த்துதான் விவாதிப்பதற்காக, இன்றைய தினம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.
சென்னை அசோகா ஹோட்டலில் இன்று இந்த கூட்டம் நடந்தது.. திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்தியதுயது போல், கொங்கு மண்டலத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்தும், எம்பி தேர்தல் விவகாரம் குறித்தும் இன்றைய தினம் தன்னுடைய நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது..
எகிறும் எதிர்பார்ப்பு: ஆனால், அதற்குள் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்ட அறிவிப்பு வெளியிட்டுவிட்டார். வரும் ஜூலை 5ல் மா.செ. கூட்டம் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்.. ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தும்போதெல்லாம் எடப்பாடி தரப்பும் கூட்டம் நடத்துவது வழக்கமாகி கொண்டுவருகிறது.. இந்நிலையில், ஓபிஎஸ்ஸின் கூட்டம் இன்று நடந்துள்ளது.
ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதில் 87 மாவட்ட செயலாளர்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த 7 மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.. கூட்டத்தில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக, புது நாளிதழை தொடங்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளாராம்..
ஆசிரியர்: அதன்படி, "நம் புரட்சி தொண்டன்" என்ற தினசரி நாளிதழை தொடங்க உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். நாளிதழுக்கு ஆசிரியராக மருது அழகுராஜ் நியமிக்கப்படவுள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது..
இது அதிமுக தரப்பில் அதிர்ச்சியை தந்து வருகிறது.. ஏற்கனவே, "நமது எம்ஜிஆர்' மற்றும் டிவி சேனல் இரண்டுமே, டிடிவி தினகரன் தரப்பால் இயக்கப்பட்டு வருகின்றன.. அதேபோல, 'நமது அம்மா' நாளிதழும், 'நியூஸ் ஜெ' டிவி சேனலும், எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார்.. எனவே, ஓபிஎஸ்ஸூக்கென்று எந்த செய்தி தளமும் இல்லாத நிலையில், தினசரி நாளிதழை துவங்க போவதாக அறிவித்துள்ளார்.
பண்ருட்டி: பிறகு, செய்தியாளர்களிடம் பண்ருட்டி ராமச்சந்திரன், "கூட்டணி தொடர்பாக எங்களுடன் நேரடியாக பாஜகவினர் பேசி வருகிறார்கள். வேண்டுமென்றால் நம்முடன் பாஜக வரட்டும்.. அவர்கள் தயவுக்காக காத்திருக்க வேண்டியதில்லை.. பகைத்துக் கொள்ளவும் வேண்டாம். நமக்கு தொண்டர்கள் பலம் உள்ளது.. தினகரன் நமக்கு துணையாக தோழமையாக செயல்பட உள்ளார். சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்.. விரைவில் அழைப்பு வரும்" என்றார்.
பிறகு ஓபிஎஸ் பேசும்போது, எடப்பாடி பழனிசாமி தரப்புடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை... ஒருமுறை இணைந்ததற்கான பாடத்தை, அவர்கள் நமக்கு கற்பித்துவிட்டனர்.. நாங்க மட்டும் ஆதரவு அளிக்காமல் இருந்திருந்தால் அன்றே எடப்பாடி அரசு கவிழ்ந்திருக்கும். பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த நான்கரை வருடத்தில் எவ்வளவு நம்பிக்கை துரோகம் செய்ய முடியுமோ அவ்வளவு செய்துவிட்டனர்.
பச்சை துரோகம்: கட்சி தலைமை பொறுப்புக்கு வருபவர்கள் அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தொண்டர்களுக்கு எம்ஜிஆர் வழங்கிய அடிப்படை உரிமையை பறித்துவிட்டனர். எம்ஜிஆர் நமக்கு அளித்த உரிமையை பறிக்க இந்த பழனிசாமி யார்? என்று கேள்வி எழுப்பினார் ஓபிஎஸ்.
ஏற்கனவே "முட்டுச்சந்து எடப்பாடி, கூமுட்டை" என்றெல்லாம் அதிமுகவை கடுமையாக விமர்சித்து சேனல்களில் பேட்டி தந்திருந்தவர் மூத்த தலைவர் மருது அழகுராஜ்.. இப்போது, ஓபிஎஸ்ஸின் புதிய நாளிதழின் ஆசிரியராகும் பட்சத்தில், அதிமுகவை மேலும் கடுமையாக விமர்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது-
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications