சல்லி சல்லியா போதே.. சேலம் மாநாடு முடிஞ்சதுமே "இதுதான்" நடக்குமோ? சபாஷ் உதயநிதி: அலர்ட் பாஜக, அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை நடக்க போகும் திமுக இளைஞரணி மாநாடு மிகப்பெரிய எதிர்பார்ப்பை தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.. என்ன காரணம்?
உதயநிதியை பொறுத்தவரை, அரசியல்வாதிகளுக்கே உரிய வெள்ளை வேட்டி சட்டை யூனிபார்ம்களை கடந்து, கேஷூவலான அமைச்சராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.. யதார்த்தமான பேச்சு, அதேசமயம், எதிர்க்கட்சிகளை எரிச்சலூட்டும் பேட்டிகளை தந்து கலங்கடித்து வருகிறார்.

Can Udhayanidhi Stalin get 5 seats for DMK Youth Wing and what are the Edappadi palanisamy, BJPs next move

வாரிசு அரசியல்: "வாரிசு அரசியல்" என்ற விமர்சனங்களை நொறுக்கிதள்ளிவிட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, வறுமை ஒழிப்புத் திட்டம் மற்றும் ஊரகக் கடன், மற்றும் அவரது அப்பாவின் செல்லப்பிராணித் துறையான சிறப்புத் திட்ட அமலாக்கம் போன்ற பல இலாகாக்களை தன்வசம் பெற்றுள்ளார்..

இதில் இளைஞர் அணியின் தலைவராக அவரின் செயல்பாடு கட்சிக்குள் "பாசிட்டிவ்" வைபரேஷனையே" தந்திருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில், திமுக இளைஞரணி தற்போது படுவேகமாக பயணித்து வருகிறது..

இளைஞர் அணி: அதிரடி நடவடிக்கைகள், துணிகர செயல்பாடுகள், மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள், நறுக் விமர்சனங்கள் என ஒவ்வொரு நிகழ்வும் முக்கியத்துவம் பெற்று அமைந்து வருகின்றன.. எனவே, நடக்க போகும் மக்களவை தேர்தலில், இளைஞர் அணியில் இருந்து தீவிரமாக "உழைக்கக்கூடிய " பலர், வேட்பாளர் லிஸ்ட்டில் இடம்பெறலாம் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்பே வட்டமடித்தது..
திமுக இளைஞரணியில் 9 மாநில துணை செயலாளர்களும் உள்ள நிலையில், சமீபத்தில் இவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பணயம் செய்து மாவட்ட, இளைஞரணி நிர்வாகிகள் நியமனத்தை செய்திருந்தனர்.

நாளை மாநாடு: இப்படிப்பட்ட சூழலில்தான், நாளை இளைஞரணி மாநாடு நடக்க உள்ளது.. இந்த மாநாடு மிகப்பெரிய தாக்கத்தை, தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கி உள்ளது..

இந்த மாநாடு நடந்து முடிந்ததுமே, சில சர்ப்ரைஸ்கள் இளைஞரணிக்குள் நடக்கலாம் என்கிறார்கள்.. அதாவது, மாநாடு முடிந்ததுமே, கடுமையாக உழைத்தவர்கள் யார் யார் என்பதை கண்டறிந்து, அவர்களுக்கு எம்பி சீட் வழங்க திட்டமிடப்பட்டு வருகிறாம்..

5 சீட்கள்: முக்கியமாக, இளைஞரணிக்கு, வரும் எம்பி தேர்தலில் 5 சீட்களை, தலைமையிடம் பிரத்யேகமாக கேட்டு வாங்கும் முடிவிலும் உதயநிதி உள்ளதாக சொல்கிறார்கள்,.
இப்படித்தான், கடந்த எம்பி தேர்தலில் 3 எம்பி சீட்கள் இளைஞரணி சார்பாகத்தான் கேட்டு பெறப்பட்டது. இந்த முறை, 5 ஆக உயர்த்தி கேட்கும் முடிவில் உள்ளதாக தெரிகிறது.. அப்படியே 5 சீட்டுகளை பெற்றுக்கொண்டாலும், அதில் யாருக்கு சான்ஸ் கிடைக்க போகிறது என்று தெரியவில்லை.. எப்படி பார்த்தாலும், புதுமுகங்கள் + அர்ப்பணிப்புடன் உழைப்பவர்களுக்கு சீட் வழங்கப்பட வாய்ப்புள்ளதால், ஒட்டுமொத்த இளைஞரணியும் பம்பரமாய் சேலத்தை சுற்றிசுழன்று கொண்டிருக்கிறார்களாம்..!!

எதிர்பார்ப்பு: இதுஒருபக்கம் என்றால், சேலத்தில் நடக்க போகும் மாநாட்டில், சொந்த மாவட்டத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியின் கவனம் விழுந்துள்ளது.. மற்றொருபக்கம் டெல்லியிலிருந்தும் பார்வை வீசப்பட்டு வருகிறது.. கொங்குவை மீட்டெடுக்கும் முயற்சியில் திமுக களமிறங்கி உள்ள நிலையில், கொங்குவின் கோட்டையான அதிமுகவும், கொங்குவில் நிமிர்ந்து வரும் பாஜகவும், உற்றுகவனிக்க தொடங்கி உள்ளன.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+