Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரண்ட தலைவர்.. லாஸ்ட் மினிட்ல மொத்தமா மாறுதே.. திமுகவுடன் சேருதா அந்த கட்சி.. நெருங்கும் கிளைமேக்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க போகிறது? என்ற முடிவு எட்டப்பட உள்ளது. அத்துடன், தேமுதிகவுக்கு அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கும் விடை கிடைக்க போகிறதாம்.

சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். மேலும் கூட்டணி கட்சிகளும் கலந்து கொண்டுள்ளன. கிட்டத்தட்ட அதிமுக - பாஜக கூட்டணியும் உறுதியானதாக தெரிகிறது.

Can Vijayakanths DMDK alliance with DMK and Who Will be the next Leader of DMDK

ஆலோசனை: ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தேமுதிக அழைக்கப்படவில்லை.. இதனால் ரொம்பவுமே நொந்து போயிருந்திருக்கிறார்.. இத்தனைக்கும் தமாகா, புதிய பாரதம் போன்ற கட்சிகளைவிட, தேமுதிக அதிகமாகவே வாக்கு சதவீதத்தை வைத்திருக்கிறது... அப்படியிருந்தும், நம்மை புறக்கணித்துவிட்டார்களே என்ற வேதனை பிரேமலதாவுக்கு இருப்பதாக தெரிகிறது.

அதனால்தான, பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ், கூட்டத்துக்கு அழைக்காதது குறித்து தமிழக பாஜக தலைவர்கள் சிலரின் மூலமாக டெல்லியை அணுகினாராம்..

அப்போது, தமிழகத்திலிருந்து எந்த கட்சிகளை அழைப்பது என எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டோம். அவர் தேமுதிக பெயரை சொல்லவில்லையே என்று பதில் தரப்பட்டதாம். இதைக்கேட்டு கடுப்பான, பிரேமலதா, உடனே தன் பார்வையை திமுக பக்கம் திருப்பியிருக்கிறார். அத்துடன், திமுகவின் குடும்ப பெண் உறவுகளை தொடர்புகொண்டு நலம் விசாரித்திருக்கிறார்.. இது தெரிந்ததுமே அதிமுக அரண்டுபோய்விட்டதாம்.

"மெகா கூட்டணி" அமைக்க போவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு சொல்லிவரும்நிலையில், திமுக பக்கம் தேமுதிக செல்லக்கூடுமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக தெரிகிறது.

சுதீஷ் கேள்வி: இந்நிலையில்தான், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வருகிற 24ம்தேதி கூட்டியுள்ளார் பிரேமலதா. இந்த கூட்டத்தில், பாஜக-அதிமுக கூட்டணியில் நமக்கு இடமில்லை என்றால், அடுத்து என்ன முடிவு எடுக்கலாம்? என்று கருத்து கேட்க போகிறாராம்.... மாவட்ட செயலாளர்களின் யோசனைகளுக்கு பிறகு கூட்டணி குறித்த ஒரு முடிவு தெரியவரலாம் என்கிறார்கள்.

அதேசமயம், அதிமுக-பாஜக கூட்டணி இல்லையெனில் திமுக கூட்டணிக்குத் தான் செல்ல வேண்டும். ஆனால் அந்த கூட்டணியில் சேர்த்துக்கொள்வார்களா என நிச்சயம் கிடையாதே என்று மாநில நிர்வாகிகள் பிரேமலதாவிடம் விவாதித்திருக்கிறார்கள் என்கிற தகவலும் தேமுதிக வட்டாரங்களில் இருந்து கிடைக்கிறது. இது தவிர மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தேமுதிகவின் தலைமை பதவி குறித்து சில மாற்றங்களை செய்யவும் யோசித்துள்ளாராம்.

ஆலோசனை: அதாவது, கட்சியின் தலைவர் விஜய்காந்தின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்கி, அவரை நிறுவனர் தலைவராக நியமித்து விட்டு தலைவர் பதவியை பிரேமலதா ஏற்றுக்கொள்ளலாமா? அல்லது தலைவர் பதவியில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் செயல் தலைவர் பதவியை புதிதாக உருவாக்கி அந்த பதவியில் நாம் அமர்ந்துவிடலாமா ? என்று ஆலோசித்து வருகிறாராம்.

இதுகுறித்தும் நடக்க போகும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கருத்து கேட்கலாம் என்று பிரேமலதா திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.

ரகசிய ஆலோசனை: ஆனால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பே தேமுதிகவின் தலைமை பொறுப்பை பிரேமலதா ஏற்பதாக சொன்னார்கள்.. இது தொடர்பாக விஜயகாந்த் வீட்டிலேயே ஒரு ரகசிய ஆலோசனையும் நடந்துள்ளது. அப்போது சுதீஷ் பிரேமலதாவிடம், "கடந்த 6 ஆண்டுகாலமாக தேர்தல் செலவுகளை செய்து நிர்வாகிகள் மனமுடைந்து போயிருக்கிறார்கள். அடிமட்டத்தில் வேலை செய்ய ஆர்வமில்லாமலும் இருக்கிறார்கள். முதலில் அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில், தலைமையிலிருந்து ஏதேனும் செய்தாக வேண்டும்.

தேர்தல் பணிகள் துவங்கி விட்டால் நிறைய அறிக்கைகள், அறிவிப்புகள், உத்தரவுகள் என பல்வேறு விஷயங்கள் தலைமைக்கழகத்தில் இருந்து தரப்பட வேண்டும். அதில் பொதுச்செயலாளர் என்கிற வகையில் கேப்டன் தான் கையெழுத்திட்டிருப்பார். அவரது பெயரில் அறிக்கைகளோ, அறிவிப்புகளோ, உத்தரவுகளோ வந்தால், நம் கட்சிக்காரர்கள் கூட அதை நம்ப மாட்டார்கள். பொதுவெளியில் கட்சியின் நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாக்கப்படும்.

பிரேமலதா: அதனால், கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பினை நீங்கள் ஏற்றுக் கொண்டு, கட்சியின் நிறுவன தலைவராக மட்டுமே கேப்டன் இருக்கட்டும் என்று பிரேமலதாவிடம் சொன்னாராம். இதற்கு பிரேமலதாவும் ஆமோதித்தாராம்.

இதற்கு பிறகு, திமுக பாணியில்,"செயல் தலைவர்" பதவியை பிரேமலதா ஏற்பார் என்று இன்னொரு தகவல் பரபரத்தது.. அதாவது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, அவரால் கட்சி பணிகளை கவனிக்க முடியவில்லை.. அப்போது, ஸ்டாலின்தான், செயல் தலைவர் பதவியை ஏற்றிருந்தார்.. கட்சியில் எடுக்கப்பட்ட எல்லா முடிவுகளும் ஸ்டாலின் ஒப்புதல் பேரில்தான் நடந்தது.. அதுபோலவே, திமுகவுக்கு அடுத்தபடியாக தேமுதிக இப்படி ஒரு போஸ்டிங்கை உருவாக்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டதாம்

கிளைமேக்ஸ்: இப்படி பல தகவல்கள் யூகங்களாக வந்தாலும், அதுகுறித்து உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.. இப்போது தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணி உட்பட தலைமை பதவி குறித்தும் முடிவு எடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தேமுதிக வந்துள்ளது. அதனால், நடக்க போகும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதுகுறித்த முடிவுகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+