சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுதீஷ்ஷா? அங்கே? அதை விடுங்க.. இடைத்தேர்தலில் தனித்து போட்டி.. வேட்பாளரும் அறிவிப்பு.. தேமுதிக அதிரடி

விஜயகாந்தின் தேமுதிக, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுமா என இன்று தெரிந்துவிடும்

Google Oneindia Tamil News

சென்னை: நடக்க போகும் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தேமுதிக இன்று ஆலோசனை நடத்தியது.. அதன்படி, இது தொடர்பான அதிகாரப்பூர்வமான முடிவையும் தற்போது அக்கட்சி மேலிடம் அறிவித்துள்ளது, தேமுதிக தொண்டர்களிடம் குஷியை உண்டுபண்ணி வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன.

அத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

‛அழுகை’.. காங்கிரஸிடம் சீட் கேட்டு கண்கலங்கிய மக்கள் ராஜன்..ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் உருக்கம் ‛அழுகை’.. காங்கிரஸிடம் சீட் கேட்டு கண்கலங்கிய மக்கள் ராஜன்..ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் உருக்கம்

 சுதீஷூக்கு சீட்

சுதீஷூக்கு சீட்

இந்நிலையில் இது தொடர்பாக திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் 11 அமைச்சர்கள், 7 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள் உள்ளடக்கிய 31 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த முறையே குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்ட அதிமுகவோ, இந்த முறை விட்டுவிடக்கூடாது என்பதில் முனைப்பு காட்டி கொண்டிருக்கிறது.. பாஜக போட்டியிடக்கூடும் என்கிறார்கள்.. அதேபோல, அமமுக, மநீம, நாம் தமிழர் என ஆளுக்கு ஒருபக்கம் மும்முரமாகி வருகின்றனர். இதில், தேமுகதிகவும் இணைந்துள்ளது.. இடைத்தேர்தல் குறித்து, 23ம் தேதி, அதாவது இன்றைய தேதி, முடிவு செய்யப்படும் என்றும் 2 நாட்களுக்கு முன்பு கூறியிருநத்து.

 விஜயகாந்த்

விஜயகாந்த்

அந்தவகையில், இன்றைய தினம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக ஆபீசில் காலை 10 மணிக்கு மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் துவங்கி உள்ளது.. உட்கட்சி தேர்தல், இடைத்தேர்தல், செயற்குழு பொதுக்குழு மற்றும் கழக வளர்ச்சி போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு, பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று தேமுதிக கட்சியினர் விரும்புகின்றனர்.. அதனாலேயே இன்றைய கூட்டம் நடந்து வருகிறது.. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு யாருக்கு ஆதரவு அளிப்பது அல்லது தேர்தலை புறக்கணிப்பதா என்பது குறித்த அறிவிப்பை, கட்சியின் பொருளாளர் பிரேமலதா வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

 விஜயகாந்த் பாசம்

விஜயகாந்த் பாசம்

விரைவில் நடக்க போகும் எம்பி தேர்தலில், திமுக கூட்டணியில் இணைய தேமுதிக ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.. வலுவிழந்து போயுள்ள தேமுதிக, வரும் எம்பி தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டால் தான், கூட்டணி பலத்துடன் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்குள் முதல்முறையாக காலடி எடுத்து வைக்க முடியும் என்று அக்கட்சிக்காரர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறதாம்.. மேலும், தொடர் தோல்வியால் துவண்டு கிடக்கும் அக்கட்சிக்கும் வரப்போகும் தேர்தல் ஒரு சவாலாக அமையும் என்கிறார்கள்..

 ஈர மனசு

ஈர மனசு

அதனால், கூட்டணியில் இடம் பெற தூது விடும் நடவடிக்கையும் விரைவில் ஆரம்பமாகும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.. அப்படி திமுக கூட்டணியில் தேமுதிக இணைய நேர்ந்தால், கள்ளக்குறிச்சி தொகுதியை அக்கட்சிக்கு ஒதுக்குவதுடன், அங்கு சுதீஷை நிறுத்தவும் ஒரு பேச்சு உள்ளதாக சொல்லப்படுகிறது.. கள்ளக்குறிச்சியில், மற்ற கட்சிகளை போல தேமுதிகவுக்கும், ஓரளவு வாக்கு வங்கி இருப்பதாலும், ஏற்கனவே சுதீஷ் இங்கு போட்டியிட்ட தொகுதி என்பதாலும், இந்த முறையும் இதே தொகுதி ஒதுக்கப்படலாம் என்று சொல்கிறார்கள்.. விஜயகாந்த் மீது தனிப்பட்ட பாசம் எப்போதுமே இந்த தொகுதி மக்களுக்கு உண்டு என்பதையும் மறுக்க முடியாது.

சஸ்பென்ஸ்

சஸ்பென்ஸ்

ஆனால், கூட்டணி குறித்து இதுவரை விஜயகாந்த் தரப்பும், திமுக தரப்பும் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், அதுதொடர்பான அரசல்புரசலான தகவல்கள் கசிந்தபடியே உள்ளன.. அந்தவகையில், தற்போதைய இடைத்தேர்தலில் திமுக கூட்டணி களமிறங்குவதால், அநேகமாக தேமுதிக இங்கு போட்டியிடாது, ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவு தரலாம் என்றே கருதப்பட்டது.. ஆனால், தன் நிலைப்பாட்டை தேமுதிக மாற்றிக் கொண்டள்ளது.

விஜயபிரபாகரன்

விஜயபிரபாகரன்

அந்தவகையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச்செயலாளர் சுதீஷ் மற்றும் மாநில நிர்வாகிகள் இன்றைய ஆலோசனையில் பங்கேற்றனர்.. மேலும், 79 மாவட்ட செயலாளர்கள் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.. அப்போது, திமுக, அதிமுக கட்சிகள் களமிறங்கினாலும், இந்த தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கும் செல்வாக்கு இருப்பதால், கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றும், அதனால், விஜயபிரபாகரனை களமிறக்கலாம் என்றும் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கருத்து சொன்னார்களாம்..

 குஷி தேமுதிக

குஷி தேமுதிக

நிர்வாகிகளின் கருத்தை கேட்டுக் கொண்ட பிரேமலதா விஜயகாந்த், இன்னும் எந்தவிதமான முடிவையும் எடுக்காத நிலையில், இன்னும் சற்று நேரத்தில் தேமுதிக நிலைப்பாடு குறித்து அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அந்தவகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.. இதையடுத்து, களத்தில் குதித்துள்ளது தேமுதிக.. இது தொண்டர்களுக்கு குஷியை தந்து வருகிறது.. அதேசமயம், தங்கள் பலத்தை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்துக்கும் தேமுதிக தள்ளப்பட்டுள்ளது..!!

English summary
Can Vijayakanths DMDK contest in by-elections and chance to declare their decision today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X