புறம்போக்கு நிலத்துக்கு பட்டா வாங்க முடியுமா? அரசு நிலம் ஆக்கிரமிப்பு இருக்கா? யாரிடம் புகார் தரலாம்?
சென்னை: புறம்போக்கு நிலத்துக்கு பட்டா வாங்கலாமா? ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலம் மற்றும் ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலம் என்றால் என்ன? அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால் இதுகுறித்து யாரிடம் புகார் அளிக்கலாம்? இதை சுருக்கமாக பார்க்கலாம்.
அரசுக்கு சொந்தனமான நிலத்தையே புறம்போக்கு நிலங்கள் என்கிறோம்.. ஆங்கிலேயேர் ஆட்சிகாலத்தில், விளைநிலம் ஆக்கப்படாத இடத்தை ஏரிகுளம் என்பார்கள்.. அதேபோல, ஒன்றுக்கும் மேற்பட்ட மற்றும் பொதுவாக அந்த அனைவரும் உபயோகிக்கும் இடத்தை புறம்போக்கு நிலம் என்பார்கள்.

புறம்போக்கு நிலம்: குறிப்பாக, தரிசு நிலங்கள், ஆறு, ஓடை, வாய்க்கால், சாலை, இடுகாடு போன்றவைகள் பொதுவாக பயன்படுத்தக்கூடியவை.. இவைகள் உள்ள பகுதிகளே புறம்போக்கு நிலமாகும். எனவே, பொது பயன்பாட்டிற்காக பயன்படுத்தினால் புறம்போக்கு நிலம் ஆகிவிடுகிறது..
இந்த புறம்போக்கு நிலங்களில் பலவகைகள் உண்டு.. இதில், நத்தம் என்பதில் மட்டும், முறையான ஆவணங்களுடன் மக்கள் வீடு கட்டிக்கொள்ளலாம்.. மற்றபடி புறம்போக்கு இடங்களை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும், புறம்போக்கு இடங்கள் அரசால் ஒதுக்கப்பட்டிருக்கும்.
ஆக்கிரமிப்புகள்: அதேபோல, அரசு புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளாக குடியிருந்து வருவோருக்கு அவர்களுடைய ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டு மனை பட்டாவாக வழங்குகின்றனர். இவை பெரும்பாலும் பெருநகர பகுதிகளில் நடப்பதில்லை. எனினும், 5 வருடங்களுக்கு மேல் புறம்போக்கு நிலத்தை வைத்திருந்தால், அந்த நிலம் அரசுக்கு தேவையில்லாததாக இருந்தால், அந்த நிலத்தை உரிமை கொள்ளலாம். இவர்கள் புறம்போக்கு நிலத்திற்கான பட்டா பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவர்..
எனவே, நீர்நிலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள், மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களைத் தவிர்த்துவிட்டு, பிற புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து, 5 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்தால், அவர்களும் இதற்கு தகுதிக்குரியவர்களே. இவர்களுக்கு 2 வகைகளில் வரைமுறை செய்து வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும்.
ஆட்சேபனையற்ற நிலம்: இந்த புறம்போக்கு நிலத்தில், ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலம், ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலம் என்று 2 வகைகள் இருக்கின்றன..
ஆட்சேபனையற்ற புறம்போக்கு( Un objectionable Poramboke) என்றால், ஊரிலுள்ள கிராம நத்தம் நஞ்சை, தரிசு, புஞ்சை போன்றவற்றை குறிப்பது.. இதில் கிராம நத்தம் என்பது மக்கள் வசிக்கின்ற அளவிற்கு மேடான பகுதியை தான் கிராம நத்தம் என்பார்கள்.. இந்த நிலங்களில் பட்டவை பெறுவதற்கு அரசிடம் விண்ணப்பிக்கலாம்... ஆனால், பட்டா தரலாமா? வேண்டாமா? என்பதெல்லாம் அரசின் முடிவு.. அரசு பயன்பாட்டிற்கு அந்த நிலம் வேண்டும் என்று கருதினால் பட்டா தரமாட்டார்கள்.
பட்டா கிடைக்காது: ஆட்சேபனையுள்ள புறம்போக்கு (Objectionable Promboke) என்றால், குளம், குட்டை, வாய்க்கால், ஏரி, கண்மாய் போன்ற நீர்வழி நிலங்களை குறிப்பதாகும்.. மயானம், சாலை , காடுகள், வாய்க்கால் , தோப்பு , களம், பவுண்டு போன்ற ஆட்சேபனை உள்ள நிலங்களை வாங்கவோ அல்லது பட்டா கோரவோ இயலாது.
அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால், உங்கள் பகுதியின் வட்டாட்சியரிடம் மனு அளித்து அதை அகற்ற செய்யலாம்... உங்கள் மனுவை பெற்ற வட்டாட்சியர், தங்கள் பகுதியிலுள்ள வருவாய்த்துறை அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இதுகுறித்து உத்தரவு பிறப்பித்து, நீங்கள் குறிப்பிட்ட இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா? என்பதையும் அளந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடுவார்.
ஒருவேளை, இந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது என்று விஓ அறிக்கை தாக்கல் செய்தால், அந்த நிலத்தை ஆக்கிரமிப்பை அகற்ற வட்டாட்சியாளர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அதிகாரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications