இட்லி மாவை பிரிட்ஜில் வைக்கறீங்களா? எத்தனை நாள் வைக்கலாம்? தோசைக்கு அரைக்கும்போது இதை மறக்காதீங்க
சென்னை: பிரிட்ஜ்ஜில் நாம் அறியாமலேயே சில உணவு பொருட்களை வைத்து பயன்படுத்தி கொண்டிருக்கிறோம்.. அந்தவகையில், இட்லி மாவையும் அப்படித்தான் பிரிட்ஜில் வைத்து உபயோகித்து வருகிறோம். ஆனால், தோசை மாவை எத்தனை நாட்கள் பிரிட்ஜ்ஜில் வைத்திருக்கலாம் என்பதை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.. இட்லி மிகச்சிறந்த உணவாக கருதப்பட்டாலும், 1 நாளுக்குமேல் இட்லி மாவை வைத்து பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள்.. இதற்கு காரணம் என்ன தெரியுமா? அவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
பொதுவாக பிரிட்ஜில், சிலவகையான காய்கறிகளை வைக்கக்கூடாது.. கத்தரிக்காயை எடுத்துக் கொண்டால், மற்ற காய்கறிகள் பழங்களுடன் கத்திரிக்காயை சேர்த்து வைக்கக்கூடாது. எப்போதுமே பிரிட்ஜில் வைக்காமல் காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். உருளைக்கிழங்கை பிரிட்ஜ்ஜூக்குள் வைத்தால் நிறம் மாறிவிடும். வாழைப்பழத்தை பிரிட்ஜில் வைத்தால், அழுகிவிடும்.

முட்டைகளை பிரிட்ஜூக்குள் வைக்கவே கூடாது.. ஃப்ரீசரில் அதுவும், சில மணி நேரம் மட்டுமே வைக்க வேண்டும். அதிகபட்சம் ஒருநாளுக்கு மேல் இறைச்சியை பிரிட்ஜில் வைக்கக்கூடாது.. சப்பாத்தி மாவையும் பிரிட்ஜில் வைக்கக்கூடாது.. தேவைப்பட்டால், காற்று புகாத பாத்திரத்தில், 8 மணி நேரம் மட்டுமே வைக்க வேண்டும்.
பிரிட்ஜில் இட்லி மாவு
அந்தவகையில், இட்லி மாவையும் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள்.. மாவு அரைத்து, அன்றைய தினம் புளிக்கவிட்டு, மறுநாள் காலை இட்லி ஊற்றலாம்.. அன்றைய தினம் இரவு அல்லது மறுநாள் காலை வரை அந்த மாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள் உணவு நிபுணர்கள். அதிகபட்சம் 2 நாட்களுக்குள் மாவை பயன்படுத்தி விட வேண்டுமாம்.
இட்லி மாவை பொறுத்தவரை, நொதித்து வரும் தன்மையுடையது. மாவு புளிக்க வைத்து சாப்பிடுவதால் அது குடல் பாக்டீரியாக்கு நன்மை செய்யும் அதேசமயம் காலம் புளிப்பு இருக்கும் போது அதன் ஊட்டச்சத்து குறைய செய்யும்.. அந்த மாவில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி நிறைந்து காணப்படும்..
3 நாட்களுக்கு மேல், மாவிலுள்ள பாக்டீரியாக்கள் நச்சுக்களை உருவாக்கிவிடும். மேலும், ஒரே பாத்திரத்தில் மாவை வைத்திருக்கும்போது பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகமாகவே இருக்கும்.
அமா என்றால் என்ன
ஆயுர்வேத மருத்துவத்தில் அமா என்பார்கள்.. அதாவது செரிக்கப்படாத உணவுத் துகள்கள், நச்சுகள் மற்றும் உடலில் சேரக்கூடிய பிற பொருட்களுக்கு அமா என்றுபெயர்.. பழைய மாவு நச்சாக அமாவாக மாறலாம்.. இந்த அமாவை சாப்பிடும்போது, நோய் அபாயம் பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
பொதுவாக, பலரும் இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது வெந்தயத்தை சேர்த்து அரைப்பார்கள். இது மூன்று நாட்களுக்கு மேல் அதிகமாகும்போது உடலில் வீக்கத்திற்கு வழிவகுக்கும். இதய நோய் உள்ளவர்களுக்கு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
செரிமான பிரச்சனைகள்
செரிமான பிரச்சனைகள்: பழைய மாவை உடல் ஜீரணிக்கக் கடினமாக இருக்கும். இது வாய்வு மற்றும் வயிற்று அசௌகரியம் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். புதிய மாவை பயன்படுத்துவது செரிமான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கிறது.
ஊட்டச்சத்து குறைதல்: அறை வெப்ப நிலையில் நீண்ட காலத்திற்கு வைக்கப்படும் மாவு அதன் ஊட்டச்சத்து மதிப்பை இழந்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் குறைவான நன்மையை தரும். அஜீரணம், குமட்டல் வாந்தி ஏற்படலாம்.. இதயம் நோய் உள்ளவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் இட்லி மாவை பயன்படுத்தவே கூடாது..
24 மணி நேரம்தான் டைம்
அதிலும் ஒரே பாத்திரத்தில் இட்லி மாவை வைத்திருப்பதால் பாக்டீரியாக்களின் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும்... எவ்வளவு குளிரில் பிரிட்ஜில் வைத்தாலும்கூட, பாக்டீரியாக்கள் இட்லி மாவை விட்டு போகாது.. இதனை அப்படியே சமைத்து சாப்பிடும்போது, நெஞ்செரிச்சல், குடல் தொடர்பான பிரச்சனை, பசியின்மை, தலைவலி, தூக்கமின்மை ஏற்படலாம்.
எனவே, இட்லி மாவு புளிக்காவிட்டாலும் சரி, அரைத்த 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்தி முடித்துவிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். .
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications