பூர்வீக சொத்தில் உயில் செல்லுமா? தாத்தா சொத்தை வைத்து நீங்கள் செய்யும் அந்த ஒரு தவறு, மொத்தமும் காலி
சென்னை: சொத்து சேர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதைச் சரியான வாரிசுகளிடம் சேர்ப்பது அதைவிட முக்கியமானது. குறிப்பாக சென்னையில் பெருகி வரும் நில மதிப்பு மற்றும் குடும்பச் சிக்கல்களுக்கு மத்தியில், ஒரு சிறிய சட்ட நுணுக்கத்தை தவறவிட்டால் நீங்கள் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்து, நீங்கள் விரும்பாத நபர்களின் கைக்குப் போகும் அபாயம் இருக்கிறது.. எனவே சட்ட நிபுணர்கள் சொல்லும் சில அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்வது நல்லது..
பலரும் நினைப்பது போல, உயில் என்பது வெறும் காகிதமல்ல, அது உங்கள் காலத்திற்கு பிறகு உங்கள் குடும்பத்தின் நிம்மதியைத் தீர்மானிக்கும் ஒரு ஆயுதம். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை மட்டுமல்ல, பூர்வீக சொத்தில் உங்களுக்குரிய தனிப்பங்கையும் உயிலாக எழுதி வைக்க முடியும்.

பூர்வீக சொத்து
ஆனால் முழு பூர்வீக சொத்தையும் தனிப்பட்ட முறையில் மாற்ற முடியாது என்பதே உண்மை.
அத்தகைய சொத்துக்கள் சட்டப்படியான வாரிசு அடிப்படையில் சென்றடையும். நீங்கள் பூர்வீக சொத்தில் உள்ள உங்கள் பங்கை ஒருவருக்கு மட்டும் தர வேண்டும் என்று நினைத்தால், முதலில் சட்டப்படி பங்கீடு செய்யப்பட்டு உங்கள் தனிப்பட்ட சொத்தாக மாறியிருக்க வேண்டும். அதன் பிறகே முழு உரிமையுடன் உயில் எழுத முடியும்.
மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு சொத்தை பிரித்து கொடுப்பதில் இருக்கும் ஒரு விஷயத்தை இங்கே கவனிக்க வேண்டும்.
பூர்வீக சொத்து
பலர் தங்கள் பிள்ளைகளின் பெயரில் மட்டும் உயில் எழுதிவிட்டு, மனைவியின் உரிமையை மறந்துவிடுகிறார்கள். சுயமாக சம்பாதித்த சொத்தில் இவ்வாறு எழுதினால், அந்த சொத்தில் மனைவிக்கு பங்கு கிடைக்காமல் போகலாம். அதேசமயம், சுயசம்பாதித்த சொத்தை மனைவியின் பெயரில் மட்டும் முழுவதுமாக எழுதி வைத்தால், பிள்ளைகளால் அதில் உரிமை கோர முடியாது.
வாரிசு - மனைவி
ஒருவேளை உங்கள் மனைவி அந்த சொத்தை வேறொருவருக்கு கொடுக்க தீர்மானித்தால், உங்கள் வாரிசுகளால் அதைத் தடுக்க முடியாது. எனவே, ஒரு பாதுகாப்பான எதிர்காலத்திற்கு மனைவியையும் ஒரு பங்குதாரராக சேர்ப்பதே புத்திசாலித்தனம்.
அதேபோல, வாரிசுகளில் ஒருவரைப் புறக்கணித்தாலும் சட்டம் அதை அனுமதிக்கிறது. ஆனால், புறக்கணிக்கப்பட்ட வாரிசு நீதிமன்றத்தில் சவால் செய்யலாம்; உயில் சட்டப்படி, மனநிலையுடன் எழுதப்பட்டதாக நிரூபிக்கப்பட்டால் அது செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது...
எப்படி உயில் எழுதுவது
உயில் எழுதுவதற்கு பெரிய ஆவணங்களோ அல்லது விலையுயர்ந்த முத்திரைத்தாள்களோ தேவையில்லை என்பது பலருக்கு தெரியாத செய்தி. ஒரு சாதாரண வெள்ளைத்தாளில் கூட நீங்கள் உயிலை கைப்பட எழுதலாம் அல்லது கம்ப்யூட்டரில் டைப் செய்யலாம்.
ஆனால், அந்த உயில் செல்லுபடியாக வேண்டுமானால், அதில் கையெழுத்திடும் இரண்டு சாட்சிகள் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் அந்த சொத்தில் எந்தப் பங்கும் இல்லாதவர்களாகவும், நடுநிலையானவர்களாகவும் இருக்க வேண்டும்.
வெளிப்படைத்தன்மை
அதேபோல, 18 வயது பூர்த்தியாகாத குழந்தைகளுக்குச் சொத்து எழுதும்போது ஒரு காப்பாளர் அல்லது கார்டியனை நியமிப்பது அவசியம்.
ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தனது உயிலை மாற்றி எழுதலாம், இதில் கடைசி உயில் எதுவோ அதுவே இறுதியானது.
இதில் வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியம். சட்டம் பல சலுகைகளை வழங்கினாலும், பதிவு செய்யப்படாத உயில்கள் பிற்காலத்தில் நீதிமன்றங்களில் மெய்ப்பிக்கப்பட வேண்டிய நிலை உருவாகலாம். தாமதம் ஏற்பட்டால் சட்ட சிக்கல்கள் எழும் வாய்ப்பும் அதிகரிக்கும்.
எனவே, வெறும் காகிதத்தில் எழுதி வைப்பதோடு நின்றுவிடாமல், அதை ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு செய்வது உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய பாதுகாப்பாக அமையும். நுணுக்கமான சட்ட விதிகளையும், உறவுகளின் சிக்கல்களையும் உணர்ந்து செயல்படுவது பிற்காலப் பகையைத் தவிர்க்க உதவும் என்று அறிவுறுத்துகிறார்கள் சட்ட நிபுணர்கள்..!
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications