இந்தியாவா இப்படி? "ரா" உளவுப்படையால் மிரண்டு போன மேற்கு உலகம்.. செம துணிச்சல்.. அரண்ட அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனடா - இந்தியா மோதல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு காரணமாக அமெரிக்கா ஷாக் ஆகி உள்ளது. இந்தியா எந்த இடத்திலும் இறங்கி வராமல் உறுதி நிற்பது அமெரிக்கா போன்ற உலக நாடுகளை திணறடித்து உள்ளது.

இந்தியா - கனடா இடையிலான மோதல் தற்போது உச்சம் பெற்றுள்ளது. கனடாவில் இருக்கும் காலிஸ்தானி இயக்கங்கள் இந்தியாவை பிளவுபடுத்த நினைப்பதாக இந்தியா குற்றச்சாட்டு வைக்கிறது. பஞ்சாப் உள்ளிட்ட இந்தியாவின் சில பகுதிகளை பிரித்து சீக்கியர்களுக்கு என்று தனி நாடு உருவாக்குவதே காலிஸ்தானி அமைப்பின் நோக்கம் ஆகும்.

Canada vs India issue: How Delhi is standing taller and stronger against West pressure in the issue?

இந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு கனடா ஆதரவு கொடுப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த நிலையில்தான், சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகார்களை அவர் அடுக்கி உள்ளார். காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா தனது ஏஜெண்டுகளை அனுப்பி இவரை கொலை செய்ததாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தியாவா இப்படி.. ரா உளவுப்படையை அனுப்பி இந்தியாவா இப்படி கொலை செய்தது என்றெல்லாம் மேற்கு உலக நாடுகள் மடங்கு உள்ளன.

நடுக்கம்: ஏனென்றால் அமெரிக்காதான் இப்படி எல்லாம் செய்யும். இந்தியா இப்படி செய்யும் என்பதை உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை அப்படி இருந்ததே இல்லை. இதன் காரணமாகவே மேற்கு உலகம் அரண்டு உள்ளது. ஆனால் இந்தியா இந்த கொலையை செய்யவில்லை என்றே கூறியுள்ளது.

இந்த கொலைக்கும் எங்களுக்கும் தொடர்பே இல்லை. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இந்தியா மீது தேவையற்ற பழி போடுகிறார்கள். கனடா பிரதமர் ட்ரூடோ குற்றச்சாட்டு வைக்கிறார். அந்த குற்றச்சாட்டிற்கு அவர்களிடம் ஆதாரம் இருக்கிறதா? ஆதாரம் இருந்தால் கொடுக்கட்டும். அதில் நாங்கள் விசாரணை நடத்துவோம், விசாரணைக்கு ஒத்துழைப்போம் என்று இந்தியா கூறியுள்ளது.

கனடா நடுக்கம்: ஆனால் கனடா இதுவரை இதில் எந்த விதமான ஆதாரத்தையும் வெளியிடவில்லை. இதில் இந்தியா தனக்கும் - கொலைக்கும் தொடர்பு இல்லை என்று கூறிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியாவின் நிலைப்பாட்டால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள் அரண்டு போய் உள்ளன.

அதன்படி, சவுத் ரைசிங் கூட்டம் தொடங்கி பல கூட்டங்களில் அடுத்தடுத்து வலிமையாக கனடாவிற்கு எதிராகவும், மேற்கு உலக நாடுகளுக்கு எதிராகவும் பேசி வருகிறது. சமீபத்தில் கூட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சில நாடுகள் பேச்சு உரிமையை, பேச்சு சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டு நிறைய விஷயங்களை (காலிஸ்தானி போராட்டம் என்பது அவர்கள் சுதந்திரம், அவர்கள் செயல்பட சுதந்திரம் தர வேண்டும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ சொன்னதை சுட்டிக்காட்டி பேசி உள்ளார்) செய்கிறார்கள். அதை எல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.

அதோடு ஏற்கனவே வளர்ந்த நாடுகள், தங்களிடம் பவர் உள்ள நாடுகள், ஆசிய நாடுகள் வளர்வதை விரும்பவில்லை. உலக ஆர்டர் மாறுவதை அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் உலக நலனுக்கு என்று நிறைய விஷயங்களை பேசுவார்கள். ஆனாலும் தொடர்ந்து பல்வேறு உலக விஷயங்களில் அவர்களின் நிலைப்பாடு இரட்டை நிலைபாடாகவே இருக்கும்.

மேற்கு உலக நாடுகள் பல விஷயங்களில் இரட்டை நிலைப்பாட்டையே எடுக்கிறது என்று அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவில் கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை விமர்சனம் செய்து பேசி உள்ளார். அவரின் இந்த பேச்சை கனடா, அமெரிக்கா கண்டிப்பாக எதிர்பார்த்து இருக்காது. ஒரு பக்கம் கனடா இதில் ஓரம்கட்டப்பட இந்தியா தைரியமாக திமிறி எழுந்து வருகிறது.

இந்தியாவின் இந்த வலுவான நிலைப்பாட்டை கண்டு.. இந்தியா எந்த இடத்திலும் இறங்கி வராமல் உறுதியாக நிற்பது அமெரிக்கா போன்ற உலக நாடுகளை திணறடித்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+