கஞ்சா, குட்கா, லாட்டரி ஒழிப்பு நடவடிக்கை: டிஜிபி அதிரடி உத்தரவு: பின்னனி இதுதான்
தமிழகத்தில், போதை பொருளை முற்றிலும் தடுத்து, கஞ்சா பயிரை ஒழிக்க, ஆந்திர போலீசாருடன், விஷேச கூட்டு நடவடிக்கை மற்றும் தமிழகத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து குற்றச் செயல்களுக்கும் பின்னணியில் போதைப்பொருள் புழக்கம்
தமிழகத்தில் நடக்கும் குற்றச்செயல்களுக்கு அடிப்படையாக கஞ்சா, போதைப்பொருள் உள்ளது. தமிழத்தில் நடக்கும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், தற்கொலைகள், குடும்ப வன்முறைகள் குறித்த ஆய்வை அரசு சார்ந்த மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் சேகரித்து ஆய்வு செய்ததில் குற்றச் செயல்களுக்கு அடிப்படை விஷயமாக போதைப்பொருள் பழக்கம் உள்ளது கண்டறியப்பட்டது.

தமிழகத்தை அச்சுறுத்தும் கஞ்சா, குட்கா
அதிலும் தமிழகத்தில் புற்றுநோய் போல் இளம் தலைமுறையினரை தாக்கும் வகையில் கஞ்சா, குட்கா போதைப்பொருள் பழக்கம் பள்ளி மாணவர்கள் வரை ஊடுருவியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது. கஞ்சா போதைப்பொருள் தமிழகத்தின் மிகப்பெரிய வியாபாரச் சந்தையாகவும், அதன்பின்னே ரவுடிகள் இயக்கமும் இருப்பதும், பள்ளி, கல்லூரிகளை குறிவைத்து இயங்குவதும் தெரியவந்தது. இதன் ஆய்வு முடிவுகள் அரசுக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசும், காவல்துறையும் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்ட செயலில் இறங்கின.

தீவிர நடவடிக்கையில் இறங்கிய அரசு
தமிழகத்தில் இளம் தலைமுறையினருக்கு அச்சுறுத்தலாக இருக்கும், சமுதாயத்தை அதிக அளவில் பாதிக்கும் கஞ்சா, குட்கா போதைப்பொருள் மற்றும் தடைச் செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை தமிழகத்திற்குள் அனுமதிக்காமல் தடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட அரசு முடிவெடுத்தது.
இதை தடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது அரசு. இதன் அடிப்படையில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஒரு சுற்றறிக்கையை காவல்துறையின் அனைத்து மட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளார்.

கஞ்சா குட்காவுக்கு எதிராக கடும் நடவடிக்கை
அதில் அவர் கஞ்சா, குட்கா, லாட்டரியை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது குறித்து விரிவாக உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு காவல் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கல்லூரி, பள்ளிகளுக்கு அருகில், கஞ்சா, குட்கா பொருட்கள் விற்பதை தடுக்க ஒரு மாதம் ஒழிப்பு வேட்டை நடத்தப்பட வேண்டும். ஜனவரி 6 ஆம் தேதி வரை கஞ்சா, குட்கா மற்றும் லாட்டரி ஒழிப்பு வேட்டை நடத்தப்படவேண்டும்.

டிஜிபியின் கட்டளைகள்
* குட்கா, கஞ்சா, லாட்டரி பொருள் விற்பவர்களை கண்காணித்து கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும், தொடர்ந்து இச்செயலில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
* கஞ்சா, குட்கா, லாட்டரி கடத்தல், பதுக்கல்-விற்பனை நடவடிக்கை சங்கிலியை உடைக்க மொத்த கொள்முதல், விற்பனை செய்யும் நபர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
* கஞ்சா, குட்கா பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை அடையாளம் கண்டு மன நல ஆலோசகர் மூலம் அவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும்.
* பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களைக் கொண்டு காவல் ஆய்வாளர் வாட்ஸ்-ஆப் குழுக்களை உருவாக்கி இரகசிய தகவல் சேகரித்து விற்பனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
* ஆந்திர மாநிலத்தில் பயிரடப்படும் கஞ்சா பயிரை ஒழிக்க ஆந்திர மாநில போலீசாருடன் விசேஷ கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை மாநில போதை பொருள் தடுப்பு பிரிவு முன்னின்று செயல்படுத்த வேண்டும்.
* ரயில்வே காவல்துறையினர் இரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டுகளை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
* இந்த ஒரு மாதத்தில் இந்த நடவடிக்கையை நின்றுவிடாமல் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர்களுக்கு கஞ்சா குற்றவாளிகளை கண்காணிக்கும் பொறுப்பை அளித்து தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* இந்த நடவடிக்கைகளை சென்னை காவல் ஆணையர், கூடுதல் இயக்குநர் சட்டம் ஒழுங்கு ஆகியோர் தினமும் கண்காணித்து அறிக்கை அனுப்புதல் வேண்டும்.
இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதுதவிர கஞ்சா, போதைப்பொருள் விற்பனையை தடுக்காத அல்லது அனுமதிக்கும் காவல் அதிகாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் நுண்ணறிவுப்பிரிவு மற்றும் உளவுத்துறை போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இதுகுறித்த நடவடிக்கையும் இருக்கும் என தெரிகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications