மாபா பாண்டியராஜன் விளக்கத்தை ஏற்க முடியாது.. புகாரை வாபஸ் வாங்க மாட்டேன்.. அனிதா சகோதரர் அதிரடி
சென்னை: மாபா பாண்டியராஜனுக்கு எதிராக கொடுத்த புகாரை வாபஸ் வாங்க முடியாது என்று அனிதாவின் சகோதரர் மணிரத்னம் கூறியுள்ளார்
Recommended Video

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டங்களை துணிந்து நடத்திய மாணவி அனிதா. நீட் கொடுமைக்கு எதிராக போராடி இவர் 2017ல் தற்கொலை செய்து கொண்டார். நீட்டுக்கு எதிராக தைரியமாக டெல்லி உச்ச நீதிமன்றம் வரை சென்று அனிதா போராடினார்.
இந்த நிலையில் அனிதாவை பயன்படுத்தி அதிமுக அமைச்சர் மாபா பாண்டியராஜன் போர்ஜரி வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டு இருந்தார். அனிதாவின் குரலை மிமிக்கிரி செய்து, அவர் திமுகவிற்கு எதிராக பேசுவது போல பொய்யாக மாற்றி மாபா பாண்டியராஜன் வீடியோ வெளியிட்டு இருந்தார் .

அதிமுக
அதிமுகவிற்கு ஆதரவாக அனிதா பேசுவது போல அவரின் குரலை மாற்றி, மாபா பாண்டியராஜன் இப்படி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. இறந்து போன சிறுமியை வைத்து இப்படி அரசியல் ஆதாயம் தேடுவது தவறானது என்று இணையத்தில் பலரும் மாபா பாண்டியராஜனுக்கு எதிராக கொதித்து போய் உள்ளனர்.

சகோதரர்
இந்த நிலையில் மாபா பாண்டியராஜனுக்கு எதிராக அனிதாவின் சகோதரர் மணிரத்னம் புகார் அளித்துள்ளார். தன்னுடைய சகோதரியின் வீடியோவை தவறாக பயன்படுத்தியதாக கூறி, மாபா பாண்டியராஜன் மீது மணிரத்னம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தமிழக தேர்தல் களத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெலிட்
இந்த நிலையில் மாபா பாண்டியராஜன் தற்போது அந்த வீடியோவை டெலிட் செய்துள்ளார். எனக்கும் இந்த வீடியோவிற்கும் தொடர்பு இல்லை. இந்த வீடியோவை நான் வெளியிடவில்லை. யாரோ என்னுடைய கணக்கில் இருந்து வெளியிட்டுள்ளனர் . இது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் கொடுப்பேன் என்று மாபா பாண்டியராஜன் கூறியுள்ளார் .

மறுப்பு
ஆனால் மாபா பாண்டியராஜன் விளக்கத்தை தொடர்ந்து இந்த வீடியோ குறித்து புகார் கொடுத்த அனிதாவின் சகோதரர் மணிரத்னம், புகாரை வாபஸ் வாங்க முடியாது என்று கூறியுள்ளார். செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்த மணிரத்னம், நாங்கள் புகாரை திரும்ப பெற மாட்டோம்.இவர்கள் இதேபோல் நிறைய வீடியோக்களை பகிர்கிறார்கள்.

சம்பவம்
இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இறந்தவர்களை அவமதிக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன. இந்த வேலையை மீண்டும் மீண்டும் இவர்கள் செய்து வருகிறார்கள். அமைச்சரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மணிரத்னம் கூறியுள்ளார்.
-
நீட் வினாத்தாளுடன் தூத்துக்குடி சென்ற வாகனம்.. நடு வழியில் நின்றதால் பரபரப்பு.. இரவில் நடந்தது என்ன? -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications