திமுகவிடம் எத்தனை தொகுதிகள் கேட்கப்படும்? காங். பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் சொன்னது இதுதான்
சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் திமுக இன்று தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், திமுகவிடம் எத்தனை தொகுதிகள் கேட்கப்படும் என்பது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் கூறினார்.
லோக்சபா தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. தமிழகத்தில் ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளது. அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 'தேர்தல் அறிக்கை தயாரிப்பு' குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை செய்ய உள்ள குழுவில் குழு தலைவராக டி.ஆர்.பாலு (கழகப் பொருளாளர்) நியமிக்கப்பட்டு உள்ளார். கே.என்.நேரு (கழக முதன்மைச் செயலாளர்), இ.பெரியசாமி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்), க.பொன்முடி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்), ஆ.ராசா எம்.பி., (கழகத் துணைப் பொதுச்செயலாளர்) , எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் திமுக இன்று தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழு பங்கேற்க உள்ளது. திமுகவுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர்.
இதில் காங்கிரஸ் கட்சியின் போட்டியிடும் விருப்பமான தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுகவிடம் அளிக்க திட்டமிட்டுள்ளதாம். கடந்த முறை காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகள் போட்டியிட்ட நிலையில், அந்த 9 தொகுதிகள் மற்றும் இந்த முறை போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் அளித்து பேச்சுவார்த்தையை தொடங்க திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், திமுகவிடம் எத்தனை தொகுதிகள் கேட்கப்படும் என்பதை இப்போதே சொல்ல முடியாது என்று கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், திமுகவுடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றார். பீகார் அரசியல் நிலவரம் குறித்து பேசிய முகுல் வாஸ்னிக், "அங்கு என்ன நடைபெற்றது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை" என்றார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications