“கிரேட் எஸ்கேப்”.. விஷாலுக்கு ஆறுதல்.. லைகாவுக்கு சோதனை மேல் சோதனை! உயர்நீதிமன்ற வழக்கு தள்ளுபடி
சென்னை: நடிகர் விஷால் ரூ. 21 கோடி கடன் பெற்ற விவகாரத்தில் அவருக்கு எதிராக லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
பிரபல சினிமா பைனான்சியரும் திரைப்பட தயாரிப்பாளருமான அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பிரபல நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி ரூ. 21 கோடியே 29 லட்சம் கடனை பெற்றது. இந்த கடனை பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

அந்த தொகை முழுவதையும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து விஷால் மேல்முறையீடு வழக்கை தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளை கொண்ட அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது.
மேலும், அந்த தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் இருக்கும் வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்குகளிளோ அல்லது ஓடிடி தளங்களிளோ வெளியிடக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த உத்தரவை விஷால் மீறி இருப்பதாகவும், தற்போது வரை 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டி லைகா நிறுவனம் தரப்பில் விஷாலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எஸ் செளந்தர் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கள் நிறுவன தயாரிப்பில் தற்போது வரை எந்த படங்களையும் தயாரிக்கவில்லை என விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதி, இந்த விவகாரத்தில் எந்த அவமதிப்பும் இல்லை என தெரிவித்து, லைகாவின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், விஷால் பட நிறுவனத்திற்கு எதிரான லைகா நிறுவனத்தின் பிரதான வழக்கில் ஜூன் 26 ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என கூறி வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார். சுபாஸ்கரனின் லைகா நிறுவனம் கமலின் இந்தியன் 2 திரைப்படம், அஜித்தின் விடாமுயற்சி போன்ற பெரிய படங்களை தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் லைகாவுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை காரணமாக விடா முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதிலேயே சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புக்கும் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லைகாவின் மேல்முறையீட்டு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications