மீதி கிணறு தாண்டுமா? கருணாநிதி பேனா நினைவு சின்னம்..தடைகோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
சென்னை: மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதியின் எழுத்தாற்றலையும், அவர் கையெழுத்திட்ட திட்டங்களையும் நினைவுகூரும் வகையிலும் கடலுக்கு நடுவே அவரது பேனாவுக்கு சிலை வைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. ஆனால், இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியான உடனே எதிர்ப்புகள் எழுந்தன.

அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடல் சூழல் இதனால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக சூழலியல் ஆர்வலர்களும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்தனர். இது தொடர்பாக ஜனவரி மாதம் கருத்துக் கேட்புக் கூட்டத்தையும் தமிழ்நாடு அரசு நடத்தியது.
அண்ணா நினைவிடத்தை ஒட்டி 2.23 ஏக்கர் பரப்பளவில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டுப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக 134 அடி உயரத்தில் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச் சின்னத்தை கடலுக்கு நடுவில் வைக்கும் முயற்சியில் அரசு இறங்கி இருக்கிறது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து பேனா நினைவு சின்னம் செல்ல கடலில் கண்ணாடி பாலமும் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் இதற்கு அனுமதி பெற தமிழ்நாடு அரசு விண்ணப்பித்து இருந்தது. அதன்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசு 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரத்தை சேர்ந்த நல்லதம்பி என்ற மீனவர் உள்ளிட்டோர் வழக்கு தொடரந்தனர்.
உச்சநீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த மனுவில், "பொதுமக்களின் கருத்துகளை அறியாமல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்காக மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. குறிப்பாக மீனவர்களின் கருத்தை கேட்கவில்லை. பிரம்மாண்டமான நினைவு சின்னத்தை கடலுக்குள் வைப்பது இயற்கை நீதிக்கு எதிரானது.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அப்பகுதி கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்கு உட்பட்டதாக உள்ளதால் கடல் வளமும் பாதிப்படையும். இதனை அறிந்தே பேனா நினைவு சின்னத்தை மெரினா கடலில் அமைக்க பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
பல சூழலியலாளர்கள் பேனா நினைவு சின்னம் அமைப்பதை எதிர்த்து ஆட்சேபனை தெரிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு அதை கருத்தில் கொள்ளவில்லை. சென்னையில் நினைவு சின்னங்கள் அமைக்க பல இடங்கள் உள்ளபோதிலும் மெரினாவை அரசு தேர்வு செய்வது இயற்கை சூழலுக்கு எதிரானது.
கடல் வளமும், கடல் சூழலும், மீனவர்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கடலை வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் 32 மீனவ கிராமங்கள் இந்த பேனா நினைவு சின்னத்தால் பாதிக்கப்படும். உலகின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றான மெரினாவை அரசியல் கட்சியினர் கல்லறைத் தோட்டமாக மாற்றி வருகின்றன.
இந்த நிலையில், மெரினா கடலில் பேனா நினைவு சின்னத்தை அமைக்க தடை விதிக்க வேண்டும். இதற்கான உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்." என்று குறிப்பிட்டு இருந்தார். இவர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதன்சு துலியா அடங்கிய அமர்வில் ஜூலை 3 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று தள்ளி வைத்தனர். அதை தொடர்ந்து இன்று வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications