Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி வழக்கு தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் அளித்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி வழக்கில் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னையைச் சேர்ந்த, ஆர்.தனசேகரன் தாக்கல் செய்திருந்த மனுவில் ,மதுவால், ஒருவரது குடும்பமே சீரழிந்து விடுகிறது. இந்தியாவில், 33 லட்சம் பேர், மது குடித்ததால் இறந்துள்ளனர். இவர்களில், 18 லட்சம் பேர், தமிழகத்தை சேர்ந்தவர்கள். மக்களின் உடல் நலனையும், வாழ்க்கை தரத்தையும் உயர்த்தும் கடமை, அரசுக்கு உள்ளது.மதுவுக்கு எதிராக, பலத்த குரல்கள் எழும்பி உள்ளன.

Case dismissed in high court, demanding full liquor exemption in Tamil Nadu

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக, அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது; ஆனால், வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை.ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதனால், கள்ளச்சாராயம் பெருக்கெடுக்கவில்லை; குற்றங்கள் குறைந்துள்ளன.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னும், மது கடைகளை திறக்கக் கூடாது என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரி வருகின்றனர். மது பழக்கத்தை, பலரும் கைவிட்டுள்ளனர். அரசுக்கும் இது தொடர்பாக, மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.எனவே, பூரண மதுவிலக்கை அமல்படுத்தும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை, ஊரடங்கு முடிந்த பின்னும், மனு கடைகளை திறக்கக் கூடாது என, உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத்கோத்தாரி, புஷ்பசத்யநாரயணா அமர்வு முன்பு இன்று வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி, ஊரடங்கினால் மக்கள் குடிபழக்கத்தை மறந்துள்ளனர்.எனவே பூர்ணமதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய்நாரயணன், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்ற தலையிட முடியாது என்று தெரிவித்தார்.எங்கெல்லாம் திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தாலும் தமிழத்தில் திறக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+