விஜயகாந்த் தொடர்ந்த வழக்கு.. “அவர் இறந்துவிட்டார்.. தொடர்ந்து கேஸை நடத்துகிறோம்”.. என்ன விவகாரம்?
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த முக்கியமான வழக்கு ஒன்று இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்த் இறந்ததால், அவரது சட்டப்பூர்வமான பிரதிநிதி மூலம் வழக்கை தொடர்ந்து நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் போது, அதன் நிகழ்வுகளை அரசு நேரடியாக ஒளிபரப்பு செய்யாமல் இருந்து வந்தது. தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களே அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டு வந்தன. சட்டசபையில் தங்கள் தொகுதி உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் உரிமை அனைத்து குடிமக்களுக்கும் உள்ளதால், சட்டசபை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக எழுந்தது.

நாடாளுமன்ற விவாதங்களை நேரலையில் ஒளிபரப்பு செய்யும்போது சட்டசபை விவாதங்களை ஏன் நேரலை செய்யக் கூடாது என்ற கேள்வி பலராலும் முன் வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சட்டசபை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை தீவிரமாக முன்வைத்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதுதொடர்பாக முதன் முதலில் நீதிமன்றப் படி ஏறினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
தேமுதிக, சட்டமன்ற எதிர்க்கட்சியாக இருந்தபோது, விஜயகாந்த் உள்ளிட்டோருக்கும் அதிமுகவினருக்கும் இடையே சட்டசபையில் பல முறை மோதல்கள் அரங்கேறின. அப்போது, தேமுதிக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அப்போது விஜயகாந்த், "என் எதிரில் உள்ள கேமராவில் பதிவானதை மட்டுமே காண்பித்தனர். அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு எதிரில் இருந்த கேமராவில் பதிவானதைக் காட்டவில்லை. சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்திருந்தால் உண்மை வெளிப்பட்டிருக்கும்" என்றார். அந்த சமயத்தில், சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், "சட்டசபையின் அனைத்து திசைகளிலும் கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தாலும் எந்த டிவியிலும் நேரடி ஒளிபரப்பு செய்வதில்லை. சட்டசபையில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள, மக்களுக்கு உரிமை உள்ளது. எனவே, சட்டசபை நிகழ்ச்சிகளை டிவி அல்லது இணையத்தில் நேரலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி சட்டசபை செயலருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரி இருந்தார்.
விஜயகாந்த் சார்பில், சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது, சட்டசபை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்யவேண்டும் என்றால், அதிக செலவு ஆகும், எனவே அது சாத்தியமல்ல என்று தமிழ அரசு பதிலளித்திருந்தது. அப்போது தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தால், இலவசமாகவே தனக்குச் சொந்தமான சேனலில், சட்டசபை நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்ப தயாராக உள்ளதாகக் கூறி அரசுக்கு அதிர்ச்சி கொடுத்தார் விஜயகாந்த்.
அதன்பிறகு, பல ஆண்டுகள் கடந்து, அதிமுக ஆட்சி மாறி, திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சரான நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சட்டசபை நிகழ்வுகள், நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. எனினும், ஆளுநர் உரை, அமைச்சர்களின் பதிலுரைகள், பட்ஜெட் உரைகள் ஆகியவையே நேரலை செய்யப்பட்டன. சட்டசபை நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்படவில்லை.

இதற்கு தமிழக அரசு கூறும் காரணம், சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் போது, அவை நேரடியாக ஒளிபரப்பப்பட வாய்ப்புள்ளதால், சபை நடவடிக்கைகள் முழுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய இயலாது என்பதுதான். சட்டசபையின் முழு நிகழ்வுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரிய வழக்கு ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை தொடர்ந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மரணமடைந்த விவரம் குறித்து வழக்கறிஞர் வி.டி.பாலாஜி நீதிமன்றத்தின் கவனத்துக்கு தெரிவித்தார். மேலும், அவரது சட்டப்பூர்வமான பிரதிநிதி மூலம் வழக்கை தொடர்ந்து நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
-
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications