சட்ட விரோத கூட்டம்.. போராட்டம்.. அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட 5,000 பேர் மீது பாய்ந்தது வழக்கு
சென்னை: பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட 5,000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி நேற்று தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழ்நாடு பாஜக நடத்தியது.
இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

எழும்பூரில் போராட்டம்
தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப்பொவதாக அண்ணாமலை அறிவித்து இருந்த நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்திரனம் அரங்கம் அருகே பாஜகவினர் ஒன்றுகூடினர். அங்குள்ள முக்கிய வழிகளை முழுவதுமாக மறித்து நின்ற பாஜகவினர் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

அண்ணாமலை உரை
ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து கோட்டை நோக்கி பேரணி செல்வதாக இருந்த நிலையில், எழும்பூரிலேயே பாஜக தொண்டர்கள் மத்தியில் அண்ணாமலை உரையாற்றினார். தமிழ்நாடு அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை அண்ணாமலை முன்வைத்தார். இதனிடையே போராட்டத்திற்கு வந்திருந்த அண்ணாமலை திடீரென அங்கு இல்லாததால் தொண்டர்கள் அவரை தேடினர்.

ஆட்டோவில் சென்றாரா அண்ணாமலை?
போலீசார் தடுத்ததால் அண்ணாமலை ஆட்டோவில் ஏறி கோட்டைக்கு சென்றிருக்கலாம் என்ற தகவல் இணையதளத்தில் பரவியதால் போலீசார் ஆட்டோக்களை நிறுத்தி சோதனையிட்டனர். பாஜகவினரின் இந்த போராட்டம் காரணமாக எழும்பூர், அண்ணாசாலை, ஈ.வே.ரா. பெரியார் சாலை, ஆதித்தனார் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வழக்குப்பதிவு
இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 5 ஆயிரம் பேர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவுக்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீல் போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர்.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications