சிபிஎம் ஜி.ராமகிருஷ்ணன், அறப்போர் இயக்கம் ஜெயராம் வெங்கடேசன் மீதான அவதூறு வழக்குகள் வாபஸ்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், அறப்போ இயக்கம் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டது.
முந்தைய அதிமுக ஆட்சியில் அரசை விமர்சித்த எதிர்கட்சிகள், பத்திரிகைகள் மீது நூற்று ஐம்பதுக்கும் மேல் அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அப்போதைய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர்கள், வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் மீது தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், பத்திரிகைகள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன் அடிப்படையில் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவதூறு வழக்குகளை வாபஸ் பெற அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் மீது முறையே கடந்த 2014 மற்றும் 2018ல் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான மனுவை அரசாணையுடன் மாநகர அரசு வழக்கறிஞர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவை பரிசீலித்த நீதிபதி செல்வகுமார், வழக்குகளை வாபஸ் பெற அனுமதித்து உத்தரவிட்டார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications