ஜாதி வன்மம்.. பாகுபாடு.. சென்னை என்ஐஎப்டி இயக்குநர் மீது பேராசிரியர் பரபர புகார்.. போலீஸ் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநர் அனிதா மேபல் மனோகர் மீது பேராசிரியர் ஒருவர் ஜாதி ரீதியிலான புகாரை வைத்துள்ளார்.

சென்னையில் உள்ள பிரபல கல்வி நிறுவனங்களில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி நிறுவனமும் ஒன்று. சென்னை ராஜீவ் காந்தி சாலையில் இந்த கல்வி நிறுவனம் அமைந்துள்ளது.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனமான இது மத்திய ஜவுளித்துறை மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

 பேஷன் டெக்னலாஜி

பேஷன் டெக்னலாஜி

மாணவ, மாணவியர் படிக்கும் இந்த கல்வி நிறுவனத்தில் பேஷன் டெக்னாலஜி படிப்பின் பல்வேறு பிடிப்புகள் படிப்பிக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியின் புதிய இயக்குநர் அனிதா மேபல் மனோகர் தன்னிடம் ஜாதி ரீதியாக பாகுபாடு காட்டுவதாக மூத்த பேராசிரியராக பணியாற்றும் ஒருவர் கூறியுள்ளார். சென்னை அடையாரு துணை கமிஷனரிடம் இவர் அளித்துள்ள புகாரில், நான் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியில் நீண்ட காலமாக பணியாற்றுகிறேன்..

ஜாதி பாகுபாடு

ஜாதி பாகுபாடு

என்னிடம் யாரும் ஜாதிய பாகுபாடு காட்டியது கிடையாது. ஆனால் இயக்குநர் அனிதா மேபல் மனோகர் என்னிடம் ஜாதி பாகுபாடு காட்டுகிறார். மற்ற பேராசிரியர்கள் முன்னிலையில் என்னை அவமானப்படுத்துகிறார் என்று சென்னை போலீசில் புகார் அளித்துள்ளார். ஜாதி காரணமாக இவரின் இருப்பிடத்தை மாற்றி வேறு ஒரு அறையில் இருக்க வைத்ததாகவும், இவரின் இடத்தை வேறு ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த ஆராய்ச்சி உதவியாளருக்கு அளிக்கவும் அனிதா மேபல் மனோகர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

பட்டியல் இனம்

பட்டியல் இனம்

அதேபோல் நான் பட்டியல் இனத்தை சேர்ந்தவன் என்பதால் என்னுடைய காரை மற்ற பேராசிரியர்கள் காருடன் நிறுத்த விடாமல் அனிதா மேபல் மனோகர் தடுத்ததாகவும் அந்த பேராசிரியர் குறிப்பிட்டு உள்ளார். வெளிப்படையாக சக பேராசிரியர்கள் முன்னிலையில் தன்னை அசிங்க படுத்தியதாக அந்த பேராசிரியர் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில்தான் அந்த பேராசிரியர் சார்பாக போலீசிலும், ஜவுளித்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

 கைது கோரிக்கை

கைது கோரிக்கை

இந்த நிலையில் அடையாறு துணை கமிஷ்னர், அனிதா மேபல் மனோகரை விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதோடு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டு இருக்கும் குழு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியின் இயக்குநர் அனிதா மேபல் மனோகர் மீது விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. இவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+