Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு.. முதல்வர் பதில் கூறியும் ஏற்க மறுத்த பாமக.. வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் குறித்து சட்டசபையில் பாமக எம்எல்ஏக்கள் பேசத் தொடங்கிய நிலையில் அதற்கு சபாநாயகரும், முதல்வர் மு.க ஸ்டாலினும் விளக்கம் அளித்தனர். அதனை ஏற்க மறுத்து சட்டசபையில் இருந்து பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பது பாமகவின் நிலைப்பாடு. இது குறித்து சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தெலங்கானாவில் சமூகநீதியை நிலை நிறுத்தும் நோக்கத்துடன் அங்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை அம்மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது.

Caste-wise census in Tamilnadu: PMK MLSs Walks out from TN Assembly

சமூகநீதியைக் காப்பதில் இந்தியாவுக்கே வழிகாட்டிய பிஹாரைத் தவிர்த்து கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மூன்று தென்னிந்திய மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் நிலையில், அதற்கான முதல் படியைக் கூட தமிழக அரசு எடுத்து வைக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.
எனினும், தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் கூறிவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாகக் கூறி தமது கடமையை முடித்துக் கொள்கிறார்.

முதல்வரின் இந்த நிலைப்பாடு கடலில் அலை ஓய்ந்த பிறகு மீன் பிடிப்போம் என்பதற்கு ஒப்பானது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான காரணங்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட தமிழகத்தில் தான் மிகவும் அதிகமாக இருக்கின்றன. சமுகநீதியின் தொட்டில் என்று ஒரு காலத்தில் போற்றப்பட்டாலும் கூட, தமிழகத்தில் தான் இன்னும் இட ஒதுக்கீடு பரவலாக்கப் படவில்லை.

கேரளத்தில் ஓபிசிகளுக்கான 40% இடஒதுக்கீடு 8 பிரிவுகளாகவும், கர்நாடக மாநிலத்தில் 32% ஓபிசி ஒதுக்கீடு 5 பிரிவுகளாகவும், ஆந்திரத்தில் 29% இட ஒதுக்கீடு 5 பிரிவுகளாகவும் பிரித்து வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் 50% ஓபிசி இட ஒதுக்கீடு கடந்த 35 ஆண்டுகளாக இரு பிரிவுகளாக மட்டுமே பிரித்து வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்னும் அதிக சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான காரணங்கள் இந்த அளவுக்கு இருக்கும் போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

பிஹார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதன் பயன்கள் வெளிப்படையாக தெரியத் தொடங்கி விட்டன. அதே பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அதற்காக தமிழகத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிடுவதுடன், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தையும் சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் சட்டசபையில் பாமக எம்எல்ஏக்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுனர். அதற்கு விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு. மத்திய அரசு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும். அதை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பதாக குறிப்பிட்டார்.

அதனை ஏற்க மறுத்து பாமக எம்எல்ஏக்கள் இருக்கையை விட்டு எழுந்தனர். இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து இந்த அவையில் ஏற்கனவே பேசப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டசபையில் பல நேரங்களில் பதில் சொல்லப்பட்டுள்ளது. இதை எல்லாம் தாண்டி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவத்தலைவர் ஜி.கே. மணி. பாமக எம்எல்ஏக்கள். தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் ஆகியோர் அவர்களும் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நேரடியாக சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

அப்போதில் இருந்தே நாங்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் சொல்கிற கொள்கைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. உங்களுக்கு சாதகமாகத்தான் இருந்து வருகிறோம். இந்த விளக்கத்திற்குப் பிறகு நீங்கள் என்ன செய்தாலும் அதற்கு நான் தடை சொல்ல விரும்பவில்லை என்று சொன்னார்.

முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தும் அதனை ஏற்க மறுத்து சட்டசபையில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+