காவிரிக்கான யுத்தம்: டெல்லி செல்லும் தமிழ்நாடு அனைத்து கட்சி எம்பிக்கள் குழு-முதல்வர் ஸ்டாலின் அதிரடி
சென்னை: காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டின் நியாயத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் விளக்குவதற்காக தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு டெல்லி செல்லும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கான உரிமையை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு வரும் 21-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

ஆனால் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் டெல்லி சென்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம், கர்நாடகாவில் வறட்சி நிலவுகிறது; தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட முடியாது; தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
தற்போது தமிழ்நாடு அரசும் களத்தில் இறங்கி உள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை விகிதாச்சாரப்படி கர்நாடகா வழங்கவில்லை. தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் உண்மைக்கு புறம்பான தகவல்களை கர்நாடகா தெரிவித்துள்ளது. ஆகையால் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் தமிழ்நாட்டின் உரிமையை வலியுறுத்தி மனு அளிப்போம் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications