Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேற வழியில்லை.. சுப்ரீம் கோர்ட்டை நாடுகிறது தமிழக அரசு.. காவிரி அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, இன்று சென்னையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. காவிரி நதிநீரைப் பெற உச்சநீதிமன்றத்தை நாடுவது என்றும், இன்றைய தமிழக அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. மத்திய அரசு அதிகாரிகள் தலைமையிலான இந்த குழுவில் இரு மாநிலங்களை சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றனர்.

Cauvery water All party Meeting

சுப்ரீம் கோர்ட்: இதனிடையே, கடந்த 2007-ல் காவிரி நடுவர் மன்றம் தந்த இறுதி ஆணையினையும், 2018-ல் சுப்ரீம் கோர்ட் தந்த தீர்ப்பினையும், செயல்படுத்த, CWMA மற்றும் CWRC ஆகிய அமைப்புகளை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது..

இதன்படி, 2018ம் ஆண்டு முதலே இந்த அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன... எனினும், இந்த தீர்ப்புகளின் படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரை சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடி தண்ணீரை பெற்றது.

கர்நாடகா மறுப்பு: இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் கடந்த 11-ம் தேதி அன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு 12-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் 20 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. ஆனாலும், தமிழத்துக்கு விடுவிக்க வேண்டிய தண்ணீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு கறாராக சொல்லிவிட்டது.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்..

முதல்வர் கண்டனம்: தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும், மேலும் இந்த விவகாரத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் துவங்கியது.. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டார்.

அதிமுக: இந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அதிமுக கலந்து கொள்ளும் என எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.. அந்தவகையில், அதிமுக தரப்பிலும் டெல்டாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ., முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக தெரிகிறது.

பாமக, பாஜக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, தவாக உள்ளிட்ட கட்சிகள் இதில் கலந்து கொண்டுள்ளன.. நீரை தராத கர்நாடக அரசுக்கு, அனைத்துக்கட்சிகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றத்திலும் கர்நாடகா மீது புகார் அளிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தீர்மானம்: சுப்ரீம்கோர்ட் உள்ள போதிலும் கர்நாடகா தொடர்ந்து முரண்டு பிடிப்பதை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.. அதேபோல, காவிரி நதிநீரைப் பெற உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும், இன்றைய தமிழக அனைத்து கட்சிக் கூட்டம் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால், அதற்கு முன்பு பிரதமரிடம் இந்த விவகாரம் தொடர்பாக நேரில் வலியுறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய எதிர்க்கட்சிகள், இந்த விவகாரத்தில் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டன.. இப்போதுள்ளதை போலவே, கர்நாடகா தொடர்ந்து பிடிவாதம் பிடித்தால், சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரவும் தமிழக அரசு தயங்கக்கூடாது என்றும் எதிர்க்கட்சிகள் அரசிடம் வலியுறுத்தியுள்ளன.

சுப்ரீம் கோர்ட்: இந்த ஆலோசனை கூட்டம் இன்று நடந்து முடிந்துள்ள நிலையில், சட்ட வல்லுனர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+