மொட்டை தலை, மஞ்சள் சட்டை.. பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபா.. சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்
சென்னை: பாலியல் வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் புகார்களுக்கு எதிராக போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் தொடங்கி கிஷோர் கே சாமி, பப்ஜி மதன் எனப் பலருக்கு எதிரான நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சிவசங்கர் பாபா
குறிப்பாக, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான நடவடிக்கையை போலீசார் துரிதப்படுத்தியுள்ளனர். கேளம்பாக்கம் அருகே ராமராஜ்ஜியம் பகுதியில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்தவர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்ததாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து முன்னாள் மாணவிகள் பலரும் ஆதாரத்துடன் புகார் அளித்தனர். இதையடுத்து சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தப்பியோட்டம்
அவர் உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள டேராடூன் பகுதியிலுள்ள ஒரு மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாகச் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியானது. சிபிசிஐடி போலீசார் உத்தரகாண்ட் செல்வதற்குள், அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து உஷாரான போலீசார் அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் அளித்திருந்தனர்.

கைது
இந்தச் சூழ்நிலையில், டெல்லி- உத்தரப்பிரதேசம் எல்லை அருகே உள்ள காசியாபாத்தில் சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தனர். மொட்டை அடித்திருந்த அவர், மஞ்சள் சட்டையும் காவி வேட்டியும் அணிந்து சுற்றி திரிந்துள்ளார். இதையடுத்து அவரை சென்னைக்கு அழைத்து வரத் தேவையான நடவடிக்கைகளை சிபிசிஐடி போலீசார் எடுத்தனர்.

சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்
இந்நிலையில், நள்ளிரவில் சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து நேரடியாக அவர் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணைக்குப் பின்னர், வியாழக்கிழமை காலை அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications