சிவசங்கர் பாபாவின் லீலைகள் அடங்கிய 4 லேப்டாப்கள், 2 சிபியூக்கள், சிசிடிவி காட்சிகள் பறிமுதல்!
சென்னை: பாலியல் புகாருக்குள்ளான சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியில் அவரது அறையிலிருந்து 4 லேப்டாப்கள், 2 சிபியூ, சிசிடிவி கேமிரா காட்சிகளை சிபிசிஐடி போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Recommended Video
கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹகி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் மீது முன்னாள் பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள். இதுதொடர்பாக விசாரணை நடத்த சிவசங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

உத்தரகாண்ட்
இதையடுத்து சிவசங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் அவர் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டதாக வந்த தகவலையடுத்து தனிப்படை போலீஸார் அங்கு விரைந்தனர்.

தப்பியோட்டம்
போலீஸார் வருவதை அறிந்த சிவசங்கர் அங்கிருந்து தப்பிய போது டெல்லி- உத்தரப்பிரதேசம் இடையே காசியாபாத்தில் டெல்லி போலீஸார் உதவியுடன் தமிழக சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதனிடையே கேளம்பாக்கம் சுஷில் ஹரி சர்வதேசப் பள்ளியில் சிபிசிஐடி தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி காட்சிகள்
4 லேப்டாப், 2 சிபியூ, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ளனர். அதாவது சிவசங்கர் பாபா மீது போடப்பட்ட சட்டப்பிரிவுகளுக்கு தேவையான ஆதாரங்களை சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். பல முன்னாள் மாணவிகள் பாலியல் தொந்தரவுக்குள்ளானதாக புகார்கள் வந்தன.

தீவிரம்
இதையடுத்து ஆதாரங்கள் தீவிரமாக சேகரிக்கப்படுகின்றன. எனவே டெல்லியில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு எதிரான ஆதாரங்களை சிபிசிஐடி போலீஸார் சேகரித்து வைத்துள்ளதால் அவற்றின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் செல்லும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications