சமூக செயற்பாட்டாளர் முகிலனை காணவில்லை.. சுயவிவரங்களுடன் சுவரொட்டி வெளியிட்ட சிபிசிஐடி
Recommended Video

சென்னை: சமூக செயற்பாட்டாளர் முகிலனை காணவில்லை என அவரது சுயவிவரங்களுடன் கூடிய சுவரொட்டியை சிபிசிஐடி போலீஸ் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த இவர், கடந்த 15-ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பு தகவலை அளித்தார்.
அதில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வன்முறையில் பொதுமக்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயரதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்பது தொடர்பான ஆதாரங்களை முகிலன் வெளியிட்டார்.

ரயில் நிலையம்
பின்னர் பேசிய அவர் இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த சந்திப்பு முடிவுற்ற பிறகு எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கு ரயிலில் சென்றுள்ளார்.

முகிலன் நண்பர்கள்
இரவு 10.30 மணிக்கு நண்பர்களுடன் போனில் பேசிய அவரிடம் இருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை. பாதி வழியில் மாயமானதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

கடத்தப்பட்டாரா முகிலன்
அரசுக்கு எதிராக ஆதாரங்களை வெளியிடுவேன் என கூறியதால் முகிலன் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. மேலும் முகிலனை தேடி கண்டுபிடிக்க உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சமயத்தில் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

புது தகவலை வெளியிட்ட சிபிசிஐடி
முகிலன் காணாமல் போன விவகாரத்தில் புதிய தகவல் வெளியானது. முகிலன் 10.30 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தை விட்டு வெளியே சென்று மீண்டும் பதினொன்றரை மணி அளவில் எழும்பூர் ரயில் நிலையத்திற்குள் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருப்பதாக சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுவரொட்டி
இந்த நிலையில் முகிலனுடைய புகைப்படம், சுய விவரங்களுடன் கூடிய சுவரொட்டியை சிபிசிஐடி வெளியிட்டுள்ளது. அதில் முகிலனை காணவில்லை என்றும் அவர் குறித்து தகவல் அளிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கும். 044- 28513500, 99629 08908 என்ற எண்களுக்கு தகவல் கொடுக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications