Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனநாயகன் படம்.. தணிக்கை சான்றிதழ் தர முடியாது.. 2 நிமிடத்தில் மேல்முறையீட்டுக்கு போன CBFC!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் படம் தணிக்கைக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தலைமை நீதிபதி அமர்வில் தணிக்கை வாரியம் முறையீடுசெய்துள்ளது.

மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உறுதி அளித்துள்ளார். திங்கள் கிழமை மேல்முறையீடு மனுவை விசாரிக்க தணிக்கை வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

CBFC appeals in the High Court of Madras Chief justice bench against TVK Vijay Jananayagan certification

விஜயின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனநாயகன் திரைப்படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் ஜனநாயகன் தரப்பு வைத்த சில முக்கியமான வாதங்கள் வழக்கு வெற்றிபெற காரணமாக அமைந்தது.

இந்த நிலையில்தான் ஜனநாயகன் படம் தணிக்கைக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

ஜனநாயகன் வழக்கு பின்னணி

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமான (CBFC) சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ASG) கடந்த வாரம் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார். மறுபுறம், KVN புரொடக்‌ஷன்ஸ் LLP நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் உதவியுடன் வாதாடினார். பட வெளியீட்டில் ஏற்படும் தாமதம் நிதி ரீதியாகவும், மன ரீதியாகவும், நற்பெயருக்கும் ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

KVN புரொடக்‌ஷன்ஸ் LLP சுமார் ₹500 கோடி முதலீடு செய்து, 5,000 திரையரங்குகளில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தது. இந்த பெரிய முதலீடு மற்றும் வெளியீட்டு திட்டங்கள் தாமதத்தால் பெருமளவில் பாதிக்கப்படும் என வழக்கறிஞர் சதீஷ் பராசரன் நீதிபதியிடம் எடுத்துரைத்தார். மன உளைச்சல் மற்றும் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

நீதிபதி பி.டி. ஆஷா, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC) கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசனுக்கு, திரைப்படம் குறித்த புகார் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நேற்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டார். வெள்ளிக்கிழமை அன்று படம் வெளியாகவிருந்த அவசர நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆவணங்களை இன்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு நீதிபதி கோரினார்.

படத்தின் பிந்தைய தயாரிப்புப் பணிகள் டிசம்பர் 15, 2025 அன்று முழுமையாக முடிவடைந்து, டிசம்பர் 18 அன்று CBFC-யிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, CBFC-யின் பரிசீலனைக் குழு, சில குறிப்பிட்ட வெட்டுக்கள் மற்றும் மாற்றங்களுக்கு உட்பட்டு U/A 16+ சான்றிதழ் வழங்கப் பரிந்துரைத்தது. தயாரிப்பாளர்கள் இந்த பரிந்துரைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டு, அத்தனை மாற்றங்களையும் செய்து முடித்தனர்.

மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய பதிப்பு வாரியத்திடம் டிசம்பர் 24 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் உடனடியாகவும் முழுமையாகவும் அனைத்துப் பரிந்துரைகளையும் பின்பற்றியபோதிலும், CBFC கிட்டத்தட்ட 10 நாட்களாக எவ்விதப் பதிலும் அளிக்கவில்லை என பராசரன் குறிப்பிட்டார். ஜனவரி 9, 2026 அன்று படம் வெளியாகவிருந்ததை பலமுறை நினைவுபடுத்தியும் பதில் கிட்டவில்லை என அவர் தெரிவித்தார்.

ஜனவரி 5 அன்று, CBFC சென்னை மண்டல அதிகாரியிடமிருந்து பெற்ற தகவலால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்தது. திரைப்படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு (ஒரு மேல்முறையீட்டு அமைப்பு) அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது. மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் மற்றும் ஆயுதப் படைகளைக் சித்தரிப்பது தொடர்பான ஒரு புகார் கிடைத்ததே இந்த முடிவுக்கு ஒரே காரணம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், புகாரளித்த தனிநபரின் விவரங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்படவில்லை என பராசரன் சுட்டிக்காட்டினார். மேலும், தயாரிப்புக் குழுவினரும் பரிசீலனைக் குழு உறுப்பினர்களுமே படத்தைப் பார்த்ததால், அதன் உள்ளடக்கம் குறித்து வெளியாட்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக வாதிட்டார்.

திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் வாதம்

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சார்பில் ஆஜரான ASG, பரிசீலனைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர், தான் திரைப்படம் பார்த்த பிறகு தனது ஆட்சேபனைகள் கூறி இருந்தாலும்.. அது பதிவு செய்யப்படவில்லை என்று புகார் அளித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் தேவை என்றும் அவர் கோரினார்.

U/A 16+ சான்றிதழ் வழங்குவதற்காக வாரியம் பரிந்துரைத்த வெட்டுக்கள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னரும், படத்தை மறுபரிசீலனைக்கு அனுப்ப CBFC எவ்வாறு முடிவு செய்ய முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த ASG, CBFC தலைவர், பரிசீலனைக் குழு படம் பார்த்த பிறகும் கூட, ஒரு திரைப்படத்தை மீண்டும் மறுபரிசீலனை செய்ய உத்தரவிட முழவதும் அதிகாரம் பெற்றவர் என வாதிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+