Jana Nayagan: மறு ஆய்வுக்கு ஒப்புக்கொண்டதா ‘ஜனநாயகன்’ டீம்? சென்சார் போர்டு அதிகாரி சொன்ன பதில்!
சென்னை: விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் எழுந்த பிரச்சனையால் படம் ரிலீஸ் ஆவதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது. ஜனநாயகன் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், "எங்கள் செயல்முறை அனைத்தும் ரகசியமானது. சென்சார் சான்றிதழ் வழங்கப்படும் வரை நாங்கள் எதையும் வெளியிட முடியாது," என்கிறார் சென்சார் போர்டு சென்னை மண்டல அதிகாரி டி. பாலமுரளி.
'ஜனநாயகன்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ், சென்சார் போர்டு மறுஆய்வுக் குழுவிடம் பரிந்துரைக்க ஒப்புக்கொண்டதாக சினிமா வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த தகவல்கள் பற்றிய கேள்விக்கு CBFC அதிகாரி டி. பாலமுரளி பதில் அளித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் கடைசிப் படம் என அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல், மறு ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ், சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசரமாக வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 7ஆம் தேதி நீதிபதி பிடி ஆஷா முன்பு வந்த போது, படத்தில் மத உணர்வுகள் தூண்டும் வகையில் காட்சிகள் இருப்பதாக தணிக்கை குழுவுக்கு புகார் வந்ததாலும், பாதுகாப்பு படைகளின் சின்னம் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாலும் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக தணிக்கை வாரியம் தெரிவித்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி.ஆஷா, வழக்கின் தீர்ப்பை பட ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்த நாளான ஜனவரி 9 ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். இதனால், ஜனநாயகன் படத்தை ஒத்திவைப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு நீதிபதி ஆஷா உத்தரவிட்டார்.
தனி நீதிபதி பி.டி.ஆஷாவின் தீர்ப்பை எதிர்த்து சென்சார் போர்டு உடனடியாக மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, படத் தயாரிப்பு நிறுவனத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, தனி நீதிபதி ஆஷா பிறப்பித்த யு/ஏ சான்றிதழ் வழங்க கோரிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் படத் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. பின்பு தணிக்கை வாரியமும், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை விசாரிக்க விருப்பமில்லை என்றும் உயர்நீதிமன்றத்தையே அணுகுங்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.
அதைத்தொடர்ந்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தணிக்கை வாரியம் சார்பிலும், படத் தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம், கடந்த 27 ஆம் தேதி தீர்ப்பை வெளியிட்டது.
சென்சார் சான்றிதழ் தொடர்பான தனி நீதிபதி பி.டி ஆஷா உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கை ஆரம்பத்தில் இருந்து தனி நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. தணிக்கை வாரியம் பதிலளிக்க தனி நீதிபதி போதுமான அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை தனி நீதிபதி முன் வழக்கு விசாரணைக்கு வரவில்லை.
இந்தச் சூழலில் மத்திய தணிக்கை வாரியத்தின் சென்னை மண்டல அதிகாரி டி. பாலமுரளியிடம் தி இந்து ஆங்கில நாளிதழ் ஜனநாயகன் விவகாரம் தொடர்பாக பேட்டி கண்டுள்ளது. தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ், சென்சார் மறுஆய்வுக் குழுவிடம் பரிந்துரைக்க ஒப்புக்கொண்டதாக திரைப்பட வட்டாரங்களில் பரவி வரும் தகவல்கள் பற்றி CBFC அதிகாரி டி. பாலமுரளியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு அவர் கூறுகையில், "என்னிடம் எந்தத் தகவலும் இல்லை. என்னிடம் தகவல் இருந்தால்கூட, அதை என்னால் வெளிப்படுத்த முடியாது. எங்களது தணிக்கை நடைமுறைகள் அனைத்தும் மிகவும் ரகசியமானவை. படத்திற்குச் சான்றிதழ் வழங்கப்படும் வரை எங்களால் எதையும் தெரிவிக்க முடியாது.
இதுபோன்ற தகவல்களைப் பகிர்வதற்குச் சட்டத்தில் அனுமதியில்லை. படத்திற்குச் சான்றிதழ் கிடைத்த பிறகுதான் பொதுமக்களுக்கு அது தெரியவரும். எங்களது இணையதளம் வாயிலாக நாங்கள் அதிகாரப்பூர்வமாக அதனை அறிவிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
-
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு? -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்? -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா!












Click it and Unblock the Notifications