Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிபிஐ தொடர்ந்த வழக்கு.. குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறியதால் சென்னை உர நிறுவன நிர்வாகிகள் விடுதலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெண்டர் ஒதுக்கீடு செய்ய 26 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் இருந்து சென்னை உர நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை மணலியில் உள்ள மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான சென்னை உர நிறுவனத்துக்கு நான்கு கம்ப்ரஸர்கள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது. ஆனால், திடீரென எந்த காரணமும் தெரிவிக்காமல் இந்த டெண்டரை ரத்து செய்து மறு டெண்டர் கோரப்பட்டது.

CBI Court Acquits Former Chennai Fertilizer Company Chairman and Others in 26 Lakh Bribery Case

குறைந்த விலைக்கு டெண்டர் எடுக்க நிறுவனங்கள் தயாராக இருந்தும், போஜ் என்கிற நிறுவனத்துக்கு அதிக விலைக்கு டெண்டர் வழங்கியதாகவும், அதற்காக 1 கோடி ரூபாய் லஞ்சம் பேசப்பட்டு 26 லட்சம் லஞ்சம் ரூபாய் முன்பணமாக பெறப்பட்டதாகவும் எழுந்த புகார் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உர நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் விஜயகுமார், பொது மேலாளர் சுந்தரசேகரன், போஜ் நிறுவனம் மற்றும் அதன் விநியோக நிறுவனமான பி.ஐ நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கை சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரன் விசாரணை நடத்தி வந்தார்.

இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் போஜ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெண்டர் வழங்கப்பட்ட பின் போஜ் நிறுவனத்துக்கு எந்த பணமும் வழங்கப்படவில்லை என்பதால் அரசுக்கு எந்த வித இழப்பும் ஏற்படவில்லை. 26 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட சென்னை உர நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் விஜயகுமார், பொது மேலாளர் சுந்தரசேகரன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரன் தீர்ப்பளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+