நக்கீரன் கோபால் அப்பவே சொன்னாரே.. கரூரில் நடந்தது உண்மையில் என்ன? ட்ரோன் காட்சிகள் உண்மையா?
சென்னை: கரூரில் தவெக விஜய் நடத்திய கூட்டம் தொடர்பாக நேற்று எக்ஸ் (Twitter) தளத்தில் தீயாய்ப் பரவிய அந்த வீடியோக்கள், தமிழக அரசியலில் ஒரு 'மெகா' பூகம்பத்தையே கிளப்பியிருக்கின்றன. கரூர் தவெக கூட்ட டிரோன் காட்சிகள் என்ற பெயரில் வெளியாகி உள்ள இந்த காட்சிகள் பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் அவை எல்லாம் உண்மையா என்ற கேள்வியும் நிலவி வருகிறது.
கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது 41 பேர் பலியான சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் ஷூட்டிங் நடைபெற்றதாக நக்கீரன் கோபால் அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்து இருந்தார்.

முன்பே நக்கீரன் கோபால் அளித்துள்ள பிரத்யேக பேட்டி நமது ஒன் இந்தியா தமிழ் யூட்யூப் சேனலில் வெளியாகியுள்ளது.
அதில், விஜய்யின் கரூர் கூட்டத்தில் 'ஜனநாயகன்' ஷூட்டிங் காட்சிகள் எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தை எல்லாம் படத்திற்க்கு பயன்படுத்த திட்டமிட்டு இருந்தனர். கூட்டத்தில் அதற்கான காட்சிகள் எடுத்துள்ளனர் . அதை படத்திற்காக பயன்படுத்த திட்டமிட்டு காட்சிகள் எடுத்துள்ளனர். அந்த படத்திற்கான சூட் இதில் செய்ததாக எனக்கு தகவல் வந்தது. கட்டாயம் வரும்.
சேர்த்து வைத்து தாமதமாக வந்தது.. கூட்டம் சேர்த்தது எல்லாம் இதற்காகவே. படம் வரும் போது பார்த்துக்கொள்ளுங்கள். நமக்கு என்று தேடி மக்கள் வருகிறார்கள். நம்மை உயிராக நினைத்து வருகிறார்கள். அவர்களை காக்க வேண்டும் என்று விஜய் நினைக்கவில்லை. அப்படி நினைக்காமல்.. அவர்களை தனக்காக பயன்படுத்திக்கொள்ளும் மனநிலை எவ்வளவு மோசமான மனநிலை. அப்படி ஒரு மனநிலையோடு மோசமாக செயல்பட்டு உள்ளார் விஜய்.
அங்கே பாதிக்கப்பட்ட மக்கள் என்ன ஆனார்கள்.. ஏது ஆனார்கள் என்று கூட கேட்காமல்.. ஓடி போய்விட்டார் விஜய், என்று நக்கீரன் கோபால் குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு இடையே ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் கடந்த சில மாதம் முன் வெளியானது. இதில் கரூர் பிரச்சாரம் போன்ற காட்சிகள் உள்ளதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன
மாரிதாஸ்
இப்போது இதே புகாரை மாரிதாஸ் வைத்துள்ளார். இது தொடர்பாக அரசியல் விமர்சகர் மாரிதாஸ் வைத்துள்ள புகாரில், கரூர் விவகாரத்தில் முக்கிய ஆதாரமான video footage அனைத்தையும் அழிக்க விஜய் முயற்சித்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது தான் கரூர் டிரோன் footage விஜய் கட்சி சார்பாக எடுக்கப்பட்டது. இதை தான் முதலில் விஜய் அழிக்க உத்தரவிட்டதாகவும் , இது CBI மூலம் Recover சமீபத்தில் செய்யப்படுள்ளது என தகவல். இது போல் மொத்தமாக சுமார் 3 மணி நேரமும் , அவர் வண்டியில் இருந்த கேம்ரா பதிவுகளும் அழிக்க முயற்சி நடந்துள்ளது.
இதில் தெரியும் மிக முக்கியமான உண்மை விஜய் கூட்டத்தில் வரும் போதும் மேல் ஏறி நிற்கும் போதும் அவருக்கு நன்கு தெரிந்துள்ளது கூட்டத்தின் நிலை பற்றி. தனக்கு எதுவும் தெரியாது என விஜய் கூறுவதை ஏற்க CBI தயாராக இல்லை.
பல ஆதாரங்களை விஜய் தரப்பு மீடியா முதல் யாருக்கும் தராது அழிக்க வேலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே தான் விஜய் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார் CBI விசாரனைக்கு, என்றுள்ளார்.
என்ன நடந்தது கரூரில்?
தவெக தலைவர் விஜய்யின் வருகைக்காக பல மணிநேரம் மக்கள் காத்திருக்க வைக்கப்பட்டது, வெறும் அரசியல் பலத்தைக் காட்ட மட்டுமல்ல... அது ஒரு 'ரியல்-டைம்' சினிமா காட்சிக்காகத்தான் என்ற அதிரடிப் புகார் இப்போது டெல்லி வரை எட்டியிருக்கிறது.
இது தொடர்பாக மாரிதாஸ் வைத்துள்ள புகாரில், கரூர் விவகாரத்தில் முக்கிய ஆதாரமான video footage அனைத்தையும் அழிக்க விஜய் முயற்சித்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது தான் கரூர் டிரோன் footage விஜய் கட்சி சார்பாக எடுக்கப்பட்டது. இதை தான் முதலில் விஜய் அழிக்க உத்தரவிட்டதாகவும் , இது CBI மூலம் Recover சமீபத்தில் செய்யப்படுள்ளது என தகவல். இது போல் மொத்தமாக சுமார் 3 மணி நேரமும் , அவர் வண்டியில் இருந்த கேம்ரா பதிவுகளும் அழிக்க முயற்சி நடந்துள்ளது.
இதில் தெரியும் மிக முக்கியமான உண்மை விஜய் கூட்டத்தில் வரும் போதும் மேல் ஏறி நிற்கும் போதும் அவருக்கு நன்கு தெரிந்துள்ளது கூட்டத்தின் நிலை பற்றி. தனக்கு எதுவும் தெரியாது என விஜய் கூறுவதை ஏற்க CBI தயாராக இல்லை.
பல ஆதாரங்களை விஜய் தரப்பு மீடியா முதல் யாருக்கும் தராது அழிக்க வேலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே தான் விஜய் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார் CBI விசாரனைக்கு, என்றும் விமர்சனங்களை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications