விஜய்யின் குடுமி டெல்லி கையில்.. SIT போனால் சிக்கல்! CBI போனாலும் பெரிய சிக்கல்! விளாசிய நாம் தமிழர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் வழக்கு சிபிஐக்கு போனால் டெல்லியின் கட்டுப்பாக்கு கீழ் விஜய் வருவார் என்று நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் தெரிவித்து உள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் SIT விசாரணைக்கு எதிரான மனுக்கள், சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் நடந்தது. நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு மனுக்களை விசாரித்தது. சென்னை உயர் நீதிமன்ற கருத்துகளுக்கு எதிராக த.வெ.க.கூட்டத்தில் பலியான சிறுவனின் அப்பா சார்பாக இந்த வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

TVK Vijay

அதாவது வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுமா அல்லது தமிழக அரசின் SIT தொடருமா என்ற கேள்வி நிலவி வருகிறது. இது தொடர்பாக இடும்பாவனம் கார்த்திக் செய்துள்ள போஸ்டில், கரூர் மரணங்கள் வழக்கு CBIக்கு மாற்றப்படுமென்றால், விஜய்யின் குடுமிப்பிடி முழுமையாக அமித்ஷாவின் கைக்குள் செல்லும். NDA கூட்டணிக்குள் விஜய்யை இழுக்க அதனையே துருப்புச்சீட்டாக பாஜக பயன்படுத்தும். SIT விசாரணையோ, CBI விசாரணையோ எதுவானாலும் விஜய்க்குச் சிக்கல்தான்; தவெகவுக்கு நெருக்கடிதான், என்று இடும்பாவனம் கார்த்திக் தெரிவித்து உள்ளார்.

கரூர் ஐஜி அஸ்ரா கார்க்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் 8-வது நாளாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான SIT முக்கியமான பல ஆதாரங்களை திரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

கரூர் விவகாரம் தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் ஐபிஎஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இவர் திரட்டும் ஆதாரங்கள் விஜய்க்கு எதிராகவும் அவரின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் திரும்பலாம் என்று கூறப்படுகிறது. திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டையில் இருந்து கூடுதல் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு SIT விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது.

முக்கியமான ஆதாரங்களை திரட்டும் அஸ்ரா கார்க்

ஏற்கனவே ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான SIT முக்கியமான பல ஆதாரங்களை திரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. அங்கே மீட்டிங் தாமதிக்கப்பட்டது தொடங்கி வாகனங்களில் இருந்த கேமராக்கள், சிசிடிவி சாட்சிகள் வரை பல விஷயங்களை அந்த குழு திரட்டி உள்ளதாம். அதோடு அங்கே நேரடி சாட்சியங்களாக இருந்த மக்களின் வாக்குமூலங்களை திரட்டி உள்ளதாம்.

TVK Vijay

அங்கே உள்ளே மக்களிடம் விசாரணை குழு முக்கிய வாக்குமூலங்களை பெற்றுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களிடமும் அவர்களின் குடும்பங்களிடமும் ஆதாரங்களை பெற்றுள்ளனர். விஜய் தாமதமாக வந்தது, நீர் கூட கொடுக்காதது, முறையாக ஏற்பாடுகளை செய்யாதது உள்ளிட்ட ஆதாரங்களை இந்த SIT திரட்டி வருகிறது. அதேபோல் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் போலீஸ் அறிவுரையை ஏற்க மறுத்தது. போலீசார் கொடுத்த திட்டங்களை ஏற்க மறுத்தது, முன்கூட்டியே வாகனத்தை நிறுத்த சொல்லியும் ஏற்க மறுத்தது உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் ஆதாரங்களாக திரட்டி வருகிறார்கள்.

சிக்கலாக முடியும்

இதில் பல ஆதாரங்கள் விஜய் தரப்பிற்கு சிக்கலாக முடியும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றன. கரூர் நிகழ்விற்கு பின் வதந்தி பரப்பியது, நிறைய கான்ஸ்பிரசி தியரியை பரப்பியது உள்ளிட்ட விஷயங்களையும் இந்த குழு விசாரித்து வருகிறது. இந்த SIT அறிக்கை விஜய்க்கு பெரிய சிக்கல் ஆகும். விஜய்க்கு எதிராக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இவர் திரட்டும் ஆதாரங்கள் விஜய்க்கு எதிராகவும் அவரின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் திரும்பலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+